8.கணக்கு வகுப்புகள்……..(தொடர்ச்சி)
சென்றபக்கங்களில் கற்பித்தல் முறையை
வகுப்பறை சூழலுக்கும் மாணவர் வயதிற்கும்,தகுந்தபடி ஆசிரியரால்தான்
வடிவமைக்க முடிகிறது எனப் பகிர்ந்திருந்தேன்…….அது முற்றிலும்
உண்மை….அதைப் பல்வேறு நிலைகளில் உணர்ந்திருக்கிறேன்…. ஒவ்வொரு ஆசிரியரும் இதை உணர்ந்திருப்பர்…மேலும் கணக்குப்
பாடம் மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் இது பொருந்தியது……
எங்களது ஒவ்வொரு கணக்கு வகுப்பும்
உயிரோட்டமாகத்தான்
இருந்தது…அதற்கும்
காரணம், மாணவர்களது பங்கேற்பே….ஒவ்வொரு வகுப்பிலும் அவர்களை அதிகமாகப்
பேசவிட்டேன்,அப்போதுதான் அவர்களுக்கு
என்ன புரிந்தது,எதுவரை நான் விளக்க வேண்டும், என்ற தெளிவு எனக்குக் கிடைத்தது.Interactive Class Room always give more
channels to develop learning outcomes….as I hope.
அதுவரை நானே போர்டில் எல்லாக் கணக்குகளையும் போட்டுக் காட்டி,விளக்கம் தந்து கொண்டிருந்தேன்…அவர்களைப் பற்றிய தெளிவு
கிடைத்ததும், எ.கா கணக்குகளை மட்டும் நான்
போர்டில் போட்டு விளக்கினேன்.
95%
எ.காட்டுக்கணக்குகள் கண்டிப்பாக வகுப்பறையில் என்னால்
போட்டுக்காண்பிக்கப்படும்.ஆனால்,அதில் எந்தஇடத்தில் யாருக்கு சந்தேகம், வந்தாலும் உடனே எழுந்து கேட்கவும்,அது அவர்களில் ஒருவராலேயே
விளக்கம் தரவும் ,அப்படி விளக்க இயலாமல் போனால் மட்டுமே நான்
விளக்கம் தருவதும் என்று எங்களது வகுப்பறை ஒருகுட்டிக் கருத்தரங்கமாகவே இருக்கும்.
இன்னும் ஒரு படி மேலே போய் எப்போது வேண்டுமானாலும்,சந்தேகம் கேட்கலாம் அவர்கள் என்றதால்,உணவு இடைவேளையில்
கூட கணக்கு நோட்டுகளோடு என்னைத் தேடிவருவார்கள்,அன்றாடம் இது
நடக்கும்..பல சமயங்களில் சக ஆசிரியர்களிடமிருந்து வசைகள் கிடைக்கும்,அதற்கெல்லாம் கவலைப்பட்டதுமில்லை.
ஒவ்வொரு கணக்கு
போடும் போதும் அவர்களுக்குச் சொல்வது,
1.கணக்கில்
என்னென்ன கொடுத்திருக்கிறது?
2.எதைக்
கண்டறிய வேண்டும்?
3.அதற்கு என்னசெய்யவேண்டும்?என்னஎன்ன தேவை......?
.இவற்றை
முதலில் கண்டறிந்து யோசிக்கப் பழக்கப்படுத்தினேன் , அது எவ்வளவு
பெரிய கணக்குகளாக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது..பிறகுதான் கணக்குகளுக்கான தீர்வுகளைப் போடுவார்கள்.
அவர்கள் எ.காட்டுக்
கணக்குகளை வைத்து,பயிற்சிக் கணக்குகளை அவர்களாகவே முயற்சி செய்து
வீட்டுக் கணக்காகப் போட்டுக் கொண்டு வருவார்கள்.எல்லோரும் போட்டுக்
கொண்டு வருவார்கள் எனவும் சொல்லிவிட முடியாது,அப்படி செய்யாதவர்
களையும் திரும்பத் திரும்ப, குழுத் தலைவர்களின் உதவியோடு அந்தக்
கணக்குகளைப் போட வைப்பதும் இந்த கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளில்
அடங்கியுள்ளது..
அவர்களது இந்த உரையாடல்,Responds இவற்றைக்
கண்காணிப்பதும் அவர்களது சிக்கல்களை சரி செய்ய முயற்சி செய்வதும் மட்டும் எனது வேலையாகி,இன்னும் அவர்களோடு எனக்கான Rapport அதிகமானது….
வகுப்பில் எந்தக் காரணம் கொண்டும்
உட்கார்ந்து வகுப்பெடுப்பது இருக்காது,அப்படி உட்கார்ந்து விட்டால்
தான் நம்மால் "ஒன்னுமே தெரில இந்தப் பையனுக்கு/பொன்னுக்கு” எனக் கூறப்படும் மாணவர்களை கவனிக்க முடியாமல்
போய் விடுகிறது.அவர்கள்தான் நம் இலக்கே. நன்றாகக் கணக்குகள்
போடும் மாணவர்களை வைத்துதான் பிந்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் பெற வைக்க முடிந்தது..…
ஒரு கணக்கு வகுப்பில் மாணவர்களை
கவனிக்க வைக்க, ஆர்வத்தைத் தூண்ட,கற்றுக்கொள்ள
வைக்க,முதலில் நான் இந்தப் பண்புகளில் பயிற்சி எடுக்க வேண்டுமாய்
இருந்தது……..ஒரு ஆசிரியரின் குரல்,Gesture,இவற்றின்
மூலம் மாணவர்களது கவனம் ஈர்க்கப்பட்டு இதுவும் அவர்களைப் பாடம் கவனிக்கத் தூண்டுகிறது
என்பதையும் அறிந்தேன்.
அதைவிட முக்கியமானது,
அவர்களது பெயர்களைத் தெரிந்து கொண்டு எப்போதும் வகுப்பறையில் அவர்களைப்
பெயர் சொல்லி அழைப்பது எனது பழக்கமாக இருந்தது.முதல் மதிப்பெண்
பெறும் மாணவர் முதல் மிகவும் பின்தங்கிய மதிப்பெண் வாங்கும் மாணவர் வரை பெயர் சொல்லி
அழைத்தால் அவ்வளவு சந்தோஷப்படுவதைக் கண்டேன்…அதுவும் எனக்குப்
பழக்கமாகி விட்டது.எல்லாவகுப்புகளிலும் இந்தச் சின்னச் சின்ன
விஷயங்களே வகுப்புகள் சுவாரஸ்யமாக இருக்க எனக்கு உதவி செய்தன….. (மீண்டும் பேசலாம்)
குட்டி குட்டி டிப்ஸ் அருமை!
ReplyDelete