Friday, 23 March 2018

மாணவர் மதிப்பீடு _ 1

தினம் ஒரு (மாணவர் )மதிப்பீடு - 1

3 மாதம் ஆச்சு , பாடம் முடிச்சாச்சு , நம்மள இந்தக் குழந்தைங்க ஏத்துக்கிட்டாங்களா ?அணுகுமுறை சரிதானா என ஒவ்வொரு நாளும் மனம் உள்ளுக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்க .....

நீங்க தான் எனக்கு சொல்லனும் கண்ணுங்களா , வீட்ல தனியா கொஞ்ச நேரம் உட்காந்து எழுதித் தாங்க அதான் feedback . மிஸ்கிட்ட பிடிக்காதது இருந்தாலும் எழுதுங்க அப்ப தான் என்னை நான் மாத்திக்க முடியும் ....

அத யார் கிட்டயும்  Discuss பண்ண வேணாம் , பார்த்து எழுத வேணாம்....உண்மைய எழுதுங்க
என இரு தினம் முன்பு சொல்ல ....

(மாணவரது எழுத்தை அப்படியே தருகிறேன் .. பிழையுடனேகூட)

...... எனக்கு பிடித்த மிஸ் உமா மகேஷ்வரி மிஸ். எங்களை தங்கம் என்று அழைப்பீர்களே. உங்களிடம் எங்களுக்கு எந்த குறையு மில்லை. மாணவிகளின் சந்தோஷ்த்திற்காக மூன்று மாதங்களாய் கதை புத்தகங்கள் , செய்தித்தாள்கள் படிக்க க கெடுத்து மகிழ்வித்தீர்கள். நாங்களும் படித்து ரசித்தோம் பல கதைகளைத் தெரிந்து கொண்டோம் .எங்களை அடிக்காமல் பொறுமையாக எடுத்துச் சொல்வீர்கள். எல்லோரையும் நான்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க உற்சாகப்படுத்துவீர்கள்.
இப்படிக்கு
து.மதுமிதா

வகுப்பறை உளவியல் 6


கேள்விகளை /சந்தேகங்களை  வரவேற்போம் 
*******************************************
எப்போதும் நமது வகுப்பறை சந்தேகங்களால் நிரம்பியது என்பதை ஆசிரியர் எல்லோருமே நன்கறிவோம். இருப்பினும் அவற்றை சரி செய்யாமலேயே  கடந்து விட நன்கு பயிற்சி பெற்றவராகவே இருக்கிறோம். மாணவர்களின்  சந்தேகங்களும் விடை தெரியா வினாக்களும்  தான் ஆசிரியர்களை செம்மைப்படுத்தி கற்பித்தல் - கற்றல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக்கும் என்பதற்கு இதோ ஒரு உதாரணம் .

அது ஆறாம் வகுப்பு A2 பிரிவு , அறிவியல் வகுப்பு , முதல் நாள் வகுப்பறையில் நுழைந்த உடன் ஒரே உற்சாகம் , காரணம் அவர்கள் குழந்தைகள் எப்போதுமே உற்சாகத்துடன் தான் இருப்பார்கள் நாம் தடை போடாத வரை ..
எப்படியிருக்கீங்க  குட்டீஸ் ?
ரொம்ப நல்லா இருக்கோம் மிஸ் ... நீங்க ?
நானும் ரொம்ப சூப்பரா இருக்கேன். 
நீங்கதான் எங்க புது மிஸ்ஸா சைன்ஸ்க்கு ?
ஆமா ..... இன்னைக்கு புத்தகம் யாரும் எடுக்க வேண்டாம் ... அதுக்கு முன்னாலே கொஞ்சம் பேசிப் பழகுவோம் ... சரியா ? ? - இது நான் 
ஓ.... ஜாலிங்க மிஸ் ....(கோரஸ் )
அந்த வகுப்பு 53 பேரை உள்ளடக்கியது. கடைசி வரிசையில் இருப்பவர்கள்  எல்லாம் முண்டியடித்து முன்னே வர,

உங்க கிட்ட எது வேணா பேசலாமா மிஸ் ? ஒரு குரல் ....
திரும்பிப் பார்க்க , எனது பின்புறம் மிக அருகில் ஒரு ஏக்கமான முகம் ...
உன் பேர் என்ன கண்ணு ?
தர்ஷினி .......
ஓ... அருமை ... என்ன பேசணும் ? இது நான்
எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு மிஸ் ... சரி உன் சந்தேகம் என்ன ?
அதற்குள் நிறைய குரல்கள் ... மிஸ் எனக்கும் டவுட் மிஸ் , எனக்கும்  டவுட் மிஸ் ......
இதென்னடா இது ? இன்னும் பாடமே நடத்தல ... அதற்குள் எவ்ளோ பேருக்கு டவுட் !!!!!!

சரி ஒவ்வொருத்தரா கேளுங்க ... பேசலாம் சரியா ?
மிஸ் பைபிள்ல சாத்தான்கள் தான் நமக்குக் கஷ்டம் தருதுன்னு சொல்லி வருதுங்க மிஸ் , உண்மையா ?, ஏசு தான் உலகைப் ப டச் சாருன்னு சொல்றாங்க , அப்புறம் மனுஷங்கள யாரு படச்சாங்க ? எனத் தொடர்ந்து மதம் சார்ந்த வினாக்கள்.
சட்டென சுதாரித்துக் கொண்டேன் , பைபிள் படிக்கலாம் கண்ணு , ஆனா எல்லாத்தையும் அறிவியல் ரீதியா நாம் யோசிக்கணும் , பரிணாம வளர்ச்சி பற்றியும் டார்வினைப் பற்றியும் கொஞ்சம் பேசினேன்.
வரிசையாக.... மிஸ் எனக்கு ஒரே ஒரு டவுட் , பனி எப்படிங்க மிஸ் வருது ? மிஸ் கோழியிலிருந்து முட்டை வந்துச்சா மிஸ் ? நமக்கு மனிதன் னு பேர் வச்சது யாரு மிஸ் ? நம்ம தாத்தா பாட்டி , அவங்க தாத்தா பாட்டி அப்படியே போனா யாரு மிஸ் முதலில் பொறந்தாங்க ????????????????????
அதற்குள் அந்த பிரிவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வகுப்பு முன் நிற்க , அவரைக் கெஞ்சும் பார்வையில் ஒரு நிமிடம் என்றேன்.

யார் யாருக்கெல்லாம் சந்தேகம் தோணுதோ ஒரு பேப்பர்ல நாளைக்கு எழுதிட்டு வந்து எங்கிட்ட குடுங்க , நாம நிறைய பேசலாம் என்று கூற ... ஹை .... சரிங்க மிஸ் (கோரஸ்)... முதல் நாளின் அந்தக் குழந்தைகளுடனான உரையாடல் என்னை இன்னும் செழுமைப்படுத்தியதை எண்ணிக் கொண்டே  நகர்ந்தேன்.

இவையெல்லாம் வளர்ந்து விட்ட நமக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் குழந்தைகளில் மூளையின் மூலையில் இவை போன்ற எண்ணற்ற வினாக்கள் முட்டி மோதி பதில் தெரியாமல் தான் இருக்கின்றன. முடிந்த வரை அவர்களின் இந்த சந்தேக வினாக்களுக்கு பதில் சொல்லி திருப்திபடுத்தி புரிய வைத்தால் தான் பாடம் சார்ந்து நகர முடியும் , இல்லையென்றால் பாடம் மட்டுமே கற்றுத் தரும் எந்திரங்களாக அவர்களது மனதில் நாம் பதிந்து விட .... இடைவெளி நீள்கிறது.

ஏற்கனவே எழுதப்பட்ட கரும்பலகையில் அதை சுத்தம்  செய்யாமல் மேலும் மேலும் எழுதுவது எவ்வாறு குழப்பத்தை உண்டு பண்ணுமோ அதைப் போல அவர்களது சந்தேகங்களைத் தீர்க்காத சூழலில் பாடம் என்பதும் வீண். ஆகவே வினாக்களை அது எதுவாக இருந்தாலும் வரவேற்போம்.

(இது முன்பே எழுதப்பட்டது. இன்று அந்த முதல் சந்தேகம் கேட்ட மாணவியை மாலை பள்ளி முடிந்ததும் பார்க்க ... சந்தேகமெல்லாம் இப்போ தீர்ந்து விட்டதா தர்ஷினி ... கொஞ்சம் பேசு ஒரு வீடியோ எடுக்கறேன் எனக் கேட்க , கூச்சப் பட்டார் , பரவாயில்லை தோணுவதைப் பேசு எனக் கேட்ட , பேசுகிறார் ... நானே எதிர்பார்க்கவில்லை ... ஆம் இந்த மாணவியும் என்னை செழுமைப்படுத்தியுள்ளார்.)
அன்புடன்
உமா

ஆந்திரப்பிரதேசத் தொடக்கக் கல்வி மேம்பாட்டு இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் ஐந்து வினாக்களாவது எழுப்ப வேண்டும். பல சமயங்களில் ஆசிரியர்கள் திணறிப்போவார்கள். அத்திட்டத்தை மதிப்பிடும் வாய்ப்பு பெற்று நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்றுள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று. சென்ற வாரம் எச்சில் ஜீரணத்திற்கு உதவும். எச்சிலைத் துப்பக்கூடாது, முழுங்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று எச்சில் நோயைப் பரப்பும் என்கின்றீர்கள். எச்சிலை முழுங்கினால் நான் நோய்வாய்ப்படமாட்டேனா?. 

அனுப்புநர்: Uma Scert <uma2015scert@gmail.com>
அனுப்பப்பட்டது: 20 மார்ச் 2018 08:27
பெறுநர்: rajagopalan ss
பொருள்: வகுப்பறை உளவியல் - 6

 

Show quoted text

தினம் ஒரு (மாணவர் )மதிப்பீடு - 1

3 மாதம் ஆச்சு , பாடம் முடிச்சாச்சு , நம்மள இந்தக் குழந்தைங்க ஏத்துக்கிட்டாங்களா ?அணுகுமுறை சரிதானா என ஒவ்வொரு நாளும் மனம் உள்ளுக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்க .....

நீங்க தான் எனக்கு சொல்லனும் கண்ணுங்களா , வீட்ல தனியா கொஞ்ச நேரம் உட்காந்து எழுதித் தாங்க அதான் feedback . மிஸ்கிட்ட பிடிக்காதது இருந்தாலும் எழுதுங்க அப்ப தான் என்னை நான் மாத்திக்க முடியும் ....

அத யார் கிட்டயும்  Discuss பண்ண வேணாம் , பார்த்து எழுத வேணாம்....உண்மைய எழுதுங்க
என இரு தினம் முன்பு சொல்ல ....

(மாணவரது எழுத்தை அப்படியே தருகிறேன் .. பிழையுடனேகூட)

...... எனக்கு பிடித்த மிஸ் உமா மகேஷ்வரி மிஸ். எங்களை தங்கம் என்று அழைப்பீர்களே. உங்களிடம் எங்களுக்கு எந்த குறையு மில்லை. மாணவிகளின் சந்தோஷ்த்திற்காக மூன்று மாதங்களாய் கதை புத்தகங்கள் , செய்தித்தாள்கள் படிக்க க கெடுத்து மகிழ்வித்தீர்கள். நாங்களும் படித்து ரசித்தோம் பல கதைகளைத் தெரிந்து கொண்டோம் .எங்களை அடிக்காமல் பொறுமையாக எடுத்துச் சொல்வீர்கள். எல்லோரையும் நான்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க உற்சாகப்படுத்துவீர்கள்.
இப்படிக்கு
து.மதுமிதா

Thursday, 1 March 2018

வகுப்பறை (கடந்த) உளவியல் 5

வகுப்பறை (கடந்த) உளவியல் 5
######################

இது ஒரு உடல் கூறு  அறிவியல் கண்ணம்மா ....

அந்த 4 மாணவிகளும் கடந்த ஒரு வாரமாக ஒரு மிக முக்கியப் பணியில் என்னோடு இணைந்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு நான் வகுப்பெடுப்பது  இல்லை. ஆனாலும் என்னோடு மிக நெருக்கமாகி விட்டனர்.

முதல் நாள் ஒரு மாணவி , மிஸ் நீங்க ட்ரெயினிங் மிஸ்ஸா ?

இன்னொரு ஆசிரியர் , ஏய் , அவங்க எவ்வளவு சீனியர் டீச்சர் , அப்படி கேக்கலாமா ? எனக் கடிந்து கொள்ள ,

எனக்குத் தெரியாது மிஸ் , அதனால் தான் நான் அப்படிக் கேட்டேன் - அந்த மாணவி .

அதெல்லாம் ஒன்றும் இல்லடா கண்ணு, பரவாயில்லை என்றேன்.

சரி நீ ஏன் இப்படிக் கேட்ட ? இது நான்

இல்ல மிஸ் , ட்ரெயினிங் வர மிஸ் ங்க தான் ஜாலியா உங்கள மாதிரிப் பேசுவாங்க ... நம்ம ஸ்கூல் மிஸ்லாம் இப்படிப் பழக மாட்டாங்க ...

ஓ... சரி சரி ... வேலை வேலை ... அரசுப் பள்ளிகளில் இது போன்ற தன்னார்வக் குழந்தைகள் இல்லை எனில் எவ்வளவோ பணிகள் முடங்க வாய்ப்பு இருக்கு.

இதே போல் கடந்த ஒரு வாரமாக பல கதைகள் பேசி எங்கள் நட்பு பலப்பட்டது.

வீடு , வகுப்பறை , பள்ளி , பிடித்த ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , அவர்களது விருப்பங்கள் , விளையாட்டு , வகுப்பறை ரகசியங்கள் , தங்களது பிடித்த பாட்டு , நடனம் இது போல் நிறைய விரிந்தது...

இது இப்படி இருக்க , இன்று மாலை , பணி முடியும் தருவாயில் ... நான் நகர .. அவர்களுக்குள்  மெதுவாக ஏதோ பேசுவதும் , அமைதியும் .. சிரிப்பும் என மாறி மாறி வர ....

ஹே ... கண்ணம்மாக்களே  ... என்னன்னு சொன்னா ... நானும் சிரிப்பேன்தான

ஒருவள் .. ஒன்னுமில்ல மிஸ் என மழுப்ப ,

அவர்களுக்கு அருகில் தரையில் அமர்ந்து கண்ணு இங்க பாருங்க ... எதுவா இருந்தாலும் மிஸ் திட்டமாட்டேன் , சொல்லுங்க .. என்றேன் .

மற்றொருவள் மிஸ் , இவளுக்கு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை இங்கு நான் )
நிறைய ப்ரபோஸ் வருதுங்க மிஸ் ...
யாரோ ஒரு பையன் லவ் பண்றன்னு வந்து சொல்லி இருக்கான் இன்னைக்கு ..இதே போல் அடிக்கடி மிஸ் எனக் கூறி சிரித்தாள் .. மற்ற 3 பேரும் சிரிக்கலாமா என்ன செய்யலாம் எனத் தெரியாது விழிக்க ...

நிலைமையைப் புரிந்து கொண்ட நானும் சூழலை சகஜமாக்க சிரித்து , இவ்வளவு தானா பிரச்சனை .....

கண்ணா , உலகத்துல 90% பெண்களுக்கு இந்த மாதிரி நடக்கும். இது ஒரு அறிவியல் , இந்தப் பருவத்துல எல்லாருக்கும்  வரும்.

அப்போ நம்ம உடம்புல ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு இந்த உணர்வு வரும். ஆனா நாம இதுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது , நாம பார்க்கும் சினிமாப் படங்கள் , கேட்கும் பாட்டு....இதெல்லாம் அந்த உணர்வத் தூண்டி விடற மாதிரி வரும் ... அதனால்
நாம கவனமா இருக்கணும் .....

ஆமா மிஸ் ,புரியுதுங்க மிஸ் , நாங்க அதுல மாட்டிக்க மாட்டோம் மிஸ். கவனமா இருப்போம் எனக் கூறி .... சிரித்த தெளிவான  முகத்துடன் வீடு திரும்பினர்.

நமது பதின்பருவ மாணவர்கள் மிக அதிகமாக கவனச் சிதறுதலுக்கும் , சிக்கல்களுக்கும் , ஆளாக நேரிடுவது , பள்ளிகளில் மிகப் பெரும் சவாலாக இருப்பது இன்னாட்களில் இப்பிரச்சனைகளால் தான்...

பாடம் தாண்டி பேச வேண்டிய பல விடயங்களில் இது முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இன்று என்னளவில் 4 குழந்தைகளை யாவது புரிய வைக்க முடிந்ததே என எண்ணி வீடு வந்து சேர்ந்தேன் .......

அன்புடன்
உமா