Friday, 19 June 2020

சமச்சீர்_கல்விப்_பயணம் : 4

சமச்சீர்_கல்விப்_பயணம் : 4

புதிய பாடநூல் பயிற்சிக் கையேடு 

 தயாரிப்புப் பணி (முதல் பணி )

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்திருந்த DTERT (தற்போதைய SCERT ) இன் இயக்குநராக அப்போதிருந்த திருமதி 

ஜெ. உமாமகேஸ்வரி , மற்றும் இணை இயக்குநர் முனைவர் பெ. பெருமாள் சாமி அவர்கள் கீழ் தான் இப்பணி நடைபெற்றது. இந்தப் பயிற்சிக் கையேட்டின் மேலாய்வாளராக இவர்கள் இருவருமே இருந்தனர். 

DTERT இன் கீழ் இயங்கிய நீலகிரி  மாவட்ட டயட் டான

கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அடைந்த அனுபவமும்  அங்கு சந்தித்த விரிவுரையாளர்களும் அவர்களுடனான இரு நாட்களுக்கான பணிமனை அனுபவமும் எனக்கு முற்றிலும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது. பல மாவட்டப் பயிற்சி நிறுவனங்களிலிருந்து தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களுக்கான  விரிவுரையாளர்கள் அங்கு வந்திருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பார்கள். எனக்கு சமூக அறிவியல் குழுவில் தான் பணி. எனக்கு மிக விருப்பமான வரும் நல்ல வழிகாட்டியுமாக களியாம் பூண்டி விரிவுரையாளர் நடராஜன் ஸார் தான். ஏனெனில் நிறைய விளக்கங்களை பல நூல்களிலிருந்து எடுத்தாள்பவர் . திடீர் திடீரென பல செய்யுள்களைப் பாடுவார். இடையிடையே திண்பதற்கு ஏதாவது டயட் மாணவர்கள் கொண்டு வந்து தருவார்கள். அப்படி ஒரு முறை தேனி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணிமனையில் இருக்கும் போது , திராட்சைத் தோட்டங்களிலிருந்து  திராட்சைப் பழங்கள் கொண்டு வர , அதை எடுத்து சாப்பிடும் முன், இது ஏன் புளிக்குது என்று பதில் சொல்லுங்கள் , பழங்களின் சுவைக்கு என்ன காரணம் என நம்மை சிந்திக்க வைப்பார். அவர் இருப்பது எங்கள் குழுவுக்கு மட்டுமல்ல , எல்லாப் பாடக் குழுக்களுக்கும் கல கலவென இருக்கும்.  

நடராஜன் ஸாருடன் இணைந்து  சென்னையின் 

இன்னொரு விரிவுரையாளரான குமார் ஸார் என்பவரும் தான் எனது அடுத்தடுத்த பணிகளுக்குத் தடம் அமைத்தவர்கள் .குமார் சார் தான் இந்த கோத்தகிரி மாவட்ட ஆசிரியர்  பயிற்சி நிறுவன பணிமனையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதோடு மட்டுமல்ல தொடர்ந்து வந்த பல பணிமனைகளுக்கு அவரே ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 

அந்த இரண்டு நாளில் நான் விரிவுரையாளர்களுக்கு  உதவி செய்யவே அழைக்கப்பட்டிருந்தேன். உதவி என்றால் , அவர்கள் கூறுவதைக் குறிப்பெடுப்பது மட்டும் தான்.  நடராஜன் சாருடைய பணிக்கு குறிப்பெடுத்ததுடன் குமார் சாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடிமையியல் பாடப்பகுதிக்கும் சேர்த்து பணியாற்றினேன்.   ஒருங்கிணைப்பாளர் பணியே அவருக்கு வெகுவாக இருந்தது. அதனால் , நான் ஈடுபாட்டுடன் ஆர்வமாக கவனமாக செய்த பணியை மனதில் கொண்டு 

 எனக்கு குடிமையியல் பகுதி முழுமைக்கும் பொறுப்பைத் தர முடிவு செய்து நடராஜன் சாரும் குமார்  சாரும் இணைந்து முடிவு செய்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலின் குடிமையியல் பகுதியின் அனைத்துப் பாடங்களுக்குமான  பயிற்சிக் கட்டகத் தயாரிப்புப் பணியை என்னிடம் ஒப்படைத்தனர் . உற்சாகமாகிப் போய் இன்னும் கூடுதலாகப் பணியில் இறங்கினேன். 

உணவு உண்ணும் நேரங்களில் மற்ற குழுக்களைச் சார்ந்த அனைவரும் சந்தித்துக் கொள்ளுவோம். மற்ற நேரங்களில் தனித் தனி வகுப்பறைகளில் பாடக் குழுக்கள் தனித்தனியாக அமர்ந்து பணி செய்வோம் .

அப்போதெல்லாம் இன்று உள்ள கட்டாய விதிமுறைகள் , ஆதிக்க மனப்போக்கு இருந்ததை நான்  பார்த்ததில்லை. ஆர்வமான குழு மனப்பான்மையில் ஒரு ஒழுங்கு இருந்தது. மாவட்ட பயிற்சி நிறுவன முதல்வர்கள் அவ்வப்போது நட்புறவாக வந்து பணிகள் குறித்து விசாரிப்பார்கள். அதில் கூட ஒரு விதமான அன்பும் அக்கறையும் இருக்கும். உணவு தயாரிப்பு கூட , ஆசிரியப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விடுதியில் தயாரிக்கும் உணவு எங்களுக்கும் சேர்த்து தயாரிக்கப்படும். மாணவர்களே அன்பு மிகுதியுடன் தலைவாழை இலையில் பரிமாறுவது நடக்கும். குடும்பமாகவே பணி மனைகள் இயங்கும். ஆனால் 10 வருடங்களில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த குடும்பஉறவு முறைப் பணிமனைகளை எல்லாம் அடித்து நொறுக்கி இயந்தர கதியில் பெரிய பெரிய விடுதிகளில் தங்க வைக்க , உணவு ஏற்பாடு என எல்லாமே மாறிப் போனதில் நிறைய போலிமனிதர்களையும் அடையாளம் காட்டும் , நிறைய பேருக்கு அனுபவம் உண்டு. 

அந்த கோத்தகிரி பணிமனை எனது ஆசிரியர் பணியில் , ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் மட்டுமல்ல முன்னத்தி ஏர்களிடம் பெறும் அனுபவங்களும் இணைந்தது. அதற்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதில் பதிய வைத்தது. அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற புதுக்கோட்டையைச் சார்ந்த விரிவுரையாளர் பாடிய ஒரு விரல் ஆடிய தே என்ற பாடல் இன்றும் எனது வகுப்பறையில் அவ்வப்போது மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் . தனுஷ்கோடி என்ற பெயர் கொண்ட தமிழ் விரிவுரையாளர் , புவியியல் பாட விரிவுரையாளரான மீனாட்சி மேடம் என்று பலரும் என்னுடன் நட்பு பாராட்டுபவர்களாக இருந்தது இன்னும் பசுமரத்தாணி நினைவு .

வீட்டு வேலை கொடுத்து அனுப்பினர் . குடிமையியல் பாடப்பகுதியின் தொடர்புடைய நூல்களை காஞ்சிக் கோவில் நூலகத்திலும் , வேறு சில வரலாற்று மாணவர்களிடமும்  புத்தகங்கள் பெற்று தரவுகள் எடுத்து இரண்டாம் கட்ட 3 நாள் பணிமனையான தேனி மாவட்ட உத்தமபாளையம் பணிமனைக்குச் செல்ல ஆயத்தமானேன். மே மாத விடுமுறையில் பெரும்பாலும் இந்த பயிற்சிக் கையேட்டு பணிக்காகவே எனது நேரத்தை செலவிட்டேன்.

இந்த இரண்டு பணிமனைகளிலும் நடந்த பணி பயிற்சிக் கையேடு  தயாரிப்புக்கு ஏதுவாக எல்லா நிலைகளிலும் முடிவுக்கு வர நிறைவான மகிழ்வுடன் விடை பெற்றேன். கையேட்டின் முன்புறம் தயாரிப்புக் குழுவில் எனது பெயரும் பள்ளி முகவரியுடன் இடம் பெற வேண்டும் என நடராஜன் ஸார் எழுதி வாங்கிக் கொண்டார். 

அடுத்து சந்திப்போம் எனக் கூறி வழி அனுப்பினர் , அப்போதே அவர்கள் அனைவரது மனதிலும் இடம் பெற்று விட்டேன். ஜூன் மாதம் இப்பயிற்சிக் கையேட்டினைக் குறித்த முதன்மைக் கருத்தாளர் பயிற்சிக்கு சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமான உத்தம சோழபுரத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கு கண்ட நிறுவன முதல்வர் உட்பட விரிவுரையாளர்களுடன் தொடர்பும் அனுபவங்களும் விரிந்தன. 

முதன்மைக் கருத்தாளர் பயிற்சியாளராக அன்று ஒரு ஆசிரியராகக்  கலந்து கொண்டது அரிது தான். ஏனெனில் அதற்கு BRT என அழைக்கப்படும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் , இந்த பாடநூல் பயிற்சி கையேட்டுப் பணியில் இடம்பெறாத டயட் களின் பாட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களுமே இடம் பெற்றனர். 

இந்தப் பயணத்தின் ஆரம்பம் முதல் நான் கண்ட விரிவுரையாளர்களில் பலரும் திறன் வாய்ந்த நல் மனிதர்கள். அவர்களில் பலர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதல்வராகவும் , சிலர் SCERT இல்  விரிவுரையாளர்களாகவும் அதனினும் உயர்ந்த இடங்களிலும் இன்று காண்கிறேன். பலர் பணி ஓய்வு பெற்றவராகவும் பார்க்கிறேன். 

அடுத்தடுத்து பேசுவோம் 

சமச்சீர்_கல்விப்_பயணம் : 3

#சமச்சீர்_கல்விப்_பயணம் : 3

 #பெருந்துறை_அரசு_ஆண்கள்_மேல்நிலைப்_பள்ளி 

20.01.2005 - இந்த நாள் எனது வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகக் கருதுகிறேன் . ஆம் இன்று தான், சேலம் மாவட்ட செட்டிமாங்குறிச்சி  பள்ளியி

லிருந்து மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றேன்.  இந்தப் பள்ளி தான் எனக்கான வாய்ப்புகளை வாயில்களாகத் திறந்த கோட்டை என்பேன்.  

பள்ளியைப் பற்றிக்கூற வேண்டுமானால் 1500க்கும்  மேற்பட்ட மாணவர்களும் 

50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் , ஊர் மக்கள் ஏராளமானவர் அன்றாடம் காலை , மாலை  நடைப்பயிற்சி செய்யும் இடமான பிரம்மாண்டமான ஆலமரத்துடன் கூடிய மிகப் பெரிய விளையாட்டுத் திடலும் , வெளியில்  சாலையிலிருந்து பார்க்கும் போதே நமது பார்வைக்குள் அடங்கும் வட்ட வடிவப் பூங்காவைத் தாண்டி கொடிக்கம்பம் , இரண்டுக்குமிடையே நிறுவப்பட்டுள்ள #இந்திய_அரசியலமைப்புச்_சட்டமுகப்புரை எழுதப்பட்டுள்ள நினைவுத் தூண் , அதையடுத்த  தலைமையாசிரியர் அறை , இந்த அமைப்பைச் சுற்றி மணற்பாங்கான பரந்து விரிந்த வழிபாட்டுத் திடல் , அடுத்த அடுக்காக சுற்றிலும் முழுமையான அமைப்பாக வகுப்பறைகளைத் தாங்கிய

கட்டிடங்களும் என பள்ளியின்

அமைப்பைக் குறித்துப் பேச நிறைய மனதின் ஆழத்தில் நிறைந்திருக்கின்றன

 அதோடு மரமல்லிப் பூக்கள் சிந்தும் உயரமான மரங்களும் , கொன்றை , புளியமரம் , வேம்பு என பசுமைக்கும் பஞ்சமிருக்காது. (இப்போது இவை எல்லாமே மாற்றம் பெற்று கூடுதலாக கட்டிடங்களும் பசுமை சூழலும் வசதிகளும் பெற்றுள்ளது பள்ளி ) அது மட்டுமல்ல , நெசவு ஆசிரியரும் , விவசாயப் பிரிவும் அப்பள்ளியின் கூடுதல் அம்சங்கள். மூன்று விளையாட்டுத் துறை ஆசிரியர்களும் மூன்று ஓவியத் துறை ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு மற்றப் பிரிவுகளோடு கூடுதலாக  விவசாயப் பிரிவும் என ... பெருந்துறை பள்ளி என்றாலே தனிப் பெரும் சிறப்புண்டு .

முதலில் பணியாற்றிய பள்ளியின் மாணவர்களோ கிராமத்து சூழலை மட்டுமே மையமாக வைத்து என்னுடன் வாழ்ந்தவர்கள். ஆனால் பெருந்துறைப் பள்ளியோ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள  மிகப் பெரிய பள்ளி , ஆனால் மாணவர்களில் பெரும்பாலும் கிராமப் பகுதியிலிருந்து தான் வருவார்கள் . இங்கு பள்ளியைச் சுற்றிலும் கண்கவரும் கடைகள் , கணினி மையங்கள் உட்பட மாணவர் கவனம் ஈர்க்கும் பல வழிகளும் சற்று தொல்லைகளாக இருந்தன .

ஏற்கனவே மூன்றரை ஆண்டு காலத்தில்  கற்பித்தல் முறைகளையும் , மதிப்பீட்டு முறைகளையும் மாணவர்களுடனான அனுபவத்தில் ஓரளவு  கைவரப் பெற்றிருந்ததால் , இங்கு மாணவர்களைக் கையாள்வதில் சிரமம் ஒன்றும் எனக்கு ஏற்படவில்லை. 

அதோடு அங்கு கிடைக்காத பல வாய்ப்புகளையும் இங்குள்ள மாணவர்களுக்கு உருவாக்க முடிந்தது. பெருந்துறை , ஈரோடு பகுதிகளில் அமைந்துள்ள பல கல்லூரிகள் நடத்தும் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதும் , வருடா வருடம் மாவட்ட அறிவியல் கண்காட்சிகளுக்கு வழிகாட்டி ஆசிரியராக இருப்பதும் , JRC உள்ளிட்ட பள்ளியின் கல்வி இணைச் செயல்பாடுகளில் வழிகாட்டி ஆசிரியராக இருப்பதும்  என ஒரே கொண்டாட்டமான காலமாக இருந்தது. இவையெல்லாம் எல்லோருமே செய்யக் கூடியது தான். ஆனால் ஆண்கள் பள்ளியில் , அதுவும் மூத்த ஆசிரியர்கள் , பல வருட அனுபவங்கள் பெற்றவர் பலர் இருக்க பெண் ஆசிரியராக இருந்து ஏற்றுக் கொண்ட பல வேலைகள் உண்டு. எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் யோசிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் , நான் பெண் என்று எதையும் தட்டிக் கழிக்காத சுபாவமும் என்னிடம் இயல்பாகவே இருந்தபடியால்,  இவையனைத்தும் சாத்தியமாயிற்று . அவற்றில் ஒன்று ...

NCC இன் பொறுப்பாசிரியராக 3 மாத காலம் இருந்தது கூட புதிய அனுபவம் தான் என்பேன்.வாரம் 2 நாட்கள் , காலை 6 மணிக்கே  மாணவர்கள் க்ரவுண்டுக்கு வந்து விட நானும் சென்று விடவேண்டும் , 8.30 வரை பரேடு , வடநாட்டு ஆபிஸரோ வேறு

பட்டாலியனோ சரிபார்க்கும் பயிற்சியைப் பார்வையிட வருவார்கள். காஞ்சிக் கோவில் சாலையில் உள்ள பாலாஜி ஹோட்டலில் இருந்து காலை உணவு மாணவர்களுக்கு அவர்களில் இரண்டு பேரே சென்று சைக்கிளில் எடுத்து வருவார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்து பயிற்சிக்கு வரும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரவாரத்துடன் சாப்பிட்டு அன்றைய பிரேயரில் அந்த NCC சீருடையுடன் மாணவர்கள் நிற்பதே பெரிய ஹீரோயிசம் காட்டும் , பேட்ரியாட்டிசம் கூட நிறைய ஒட்டிக் கொண்டிருப்பது தெரியும். இதை ஏன் இவ்வளவு விளக்கமா சொல்றேன்னா , அது ஆண்கள் பள்ளி , பொறுப்பில் இருந்த ஆண் ஆசிரியர் 3 மாத கட்டாயப் பயிற்சிக்காக நாக்பூர் செல்ல வேண்டுமென்றால்  , அந்த 3 மாத காலத்திற்கு இங்கு பள்ளியில் யாரேனும் பொறுப்பு ஏற்க வேண்டும் , ஆனால் எந்த ஒரு ஆண் ஆசிரியரும் பொறுப்பு ஏற்க முன்வராததால் , மாணவர் நலன் கருதி நான் 3 மாத காலப் பொறுப்பு எடுத்துக் கொள்ள சம்மதிக்கவே , NCC பயிற்சி தொய்வின்றி நடந்தது , பயிற்சி முகாமிற்காகவும் நாமக்கல் கந்தசாமி கண்டர் கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன் , இது போன்று ஏராளமான அனுபவங்கள் உள்ளன. 

இப்படியான  சூழல்கள் வரும் முன்னே , அந்தப் பள்ளிக்கு சென்ற நான்கே மாதங்களில்  , 2005 மே மாத முதல் வாரத்தில் விடுமுறை நாளொன்றில் , மாணவர் தேர்ச்சி அறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்த ஆசிரியர் குழுவில் ஒரு செய்தி. லீவில் டயட்டிலிருந்து ஏதோ பயிற்சியாம்  , (பெருந்துறையில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் தான் ஆரம்பமாகும் , ஏறக்குறைய அடுத்தடுத்த வளாகங்கள் ) யாரை அனுப்புவது என உதவித் தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டிருக்க , அந்த நேரத்தில் அந்த பள்ளியின் 10க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மறுத்த வாய்ப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது என்பது தான் உண்மை. 

ஆம் , எல்லோரும் #மறுத்த அந்த #வாய்ப்பை நான் செல்கிறேன் என்ற ஒற்றைச் சொல் அன்றைய நாளில் மற்றவருக்குப் போதுமானதாகவும் எனது தேடல்களின் திறவுகோலாகவும் அமைந்தது. 

மளமளவென்று ஓரிரு நாட்களில் எனக்கான தபால் வந்தது. அந்நிறுவனத்தின் முதல்வர் இளங்கோ அவர்களைச் சந்திக்கச் சென்றேன் ,

அவர் எனது கையில் ஆணையைத் தந்து , என்னம்மா 3 நாள் , வீட்டை விட்டுப் போகணும் , போக்குவரத்துப் பணம் தந்துடுவாங்க , சாப்பாடு , தங்க எல்லாம் ஏற்பாடு செய்துடுவாங்க , போய் Work Shop ல நல்லா வேலை செய்துட்டு வாங்க எனக் கூற  , குறிப்பிட்ட நாளில் கோத்தகிரி பேருந்தில் அப்போதைய DIET இன் அறிவியல் பேராசிரியர் ஜெயந்தி அவர்களுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்த நாள் வாழ்வின் மறக்க முடியாத நாள். முதல் முதல் கல்விக்கான பயணம் அங்கு தான் ஆரம்பித்தது. 

உமா