Tuesday, 23 September 2014

1.பெருந்துறை ஆண்கள் பள்ளி....


1.   பெருந்துறை ஆண்கள் பள்ளி 
               கற்பித்தல்-கற்றல் அனுபவங்கள் 
                                          என்னை ஆசிரியராக உருவாக்கிய செட்டிமாங்குறிச்சி  மாணவர்களின் நினைவுகளோடு 2005 ஜனவரி மாத இறுதியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன் . அங்கு  மாணவர்கள் மட்டும்தான்.ஆகவே வகுப்பறைகள் எங்களுக்குப்  பள்ளியைத் தாண்டி விரிந்திருந்தது. கற்பித்தல் அணுகுமுறைகள் ஓரளவிற்கு ஏற்கனவே  பரிச்சயமானதால் வேறு எந்த வழிகளில் அவர்களை அழைத்துச் செல்லலாம் என  யோசித்தபோது , அவர்களின் தேவை புரிய ஆரம்பித்தது .அது...............................
                                         அவர்களுக்குத் தேவை ,வகுப்பறை    
           மட்டுமல்ல ,அங்கே  அவர்கள்   களைத்துப்
      போகிறார்கள் ; அவர்களின் வயதின் துள்ளலுக்கும் ,    
           அறிவின்   பலத்திற்கும்  இன்னும் வேறு  வேறு 
     அணுகுமுறைகள் தேவைப்பட்டன .
                       எங்கள் பெருந்துறை   அரசு ஆண்கள்     
     பள்ளியானது  நகரின் மையம் , பயிலும்  மாணவர்களோ          சுற்றிலும் உள்ள சிறு சிறு கிராமத்துப் பையன்கள் .  
     அவர்களது கனவுகள் , ஏக்கங்கள்  எண்ணிலடங்காது . 
          ஆகவே அந்தத்  தேடலே எனக்கு,    பலமாகவும்
          பாலமாகவும் இருந்தது

                                        அவர்களை வழிகாட்டி நெறிப்படுத்துவதும்          ஒரு சவாலாகவே இருந்தது,ஏனெனில் கிராமச் சூழலில்
     இருந்து முற்றிலும் மாறுபட்ட நகரத்திற்கு வரும்,   
     பொழுது  விடலைப் பருவத்தில் (6-8 வகுப்புகள்) நிறைய
     மாணவர்களுக்கு ஒன்றும்  புரிவதில்லை.ஆகவே,அந்த
     இயல்புகளை மாற்றி அவர்களை ஒருநிலைப்படுத்த
     ஒவ்வொரு வருடமும் ஜூன்,ஜூலை மாதங்கள்
     ஓடிப்போகும்…
                   அதுவே பழக்கமாகிப் போய்,நிறைய
     மாணவர்கள் என்னிடம் சீக்கிரம் ஒட்டிக்கொள்வார்கள். 
     6-8  வகுப்புகள்  என்பதால் தேர்ச்சிக்காக இன்றுபோல்
     உருவடிக்கும் வழக்கம் எங்கள் வகுப்புகளில் எப்போதும்
     இல்லை.ஆகவே எனக்கும் மாணவருக்குமான
     உறவும், சிந்தித்தலும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
                    வகுப்பறையைத் தாண்டி இருவரும்
     யோசிக்க ஆரம்பித்தோம்….விளைவு…பள்ளியில் எந்த
     போட்டிகள் அறிவிக்கப்பட்டாலும் ஒரு கூட்டம்
     என்னோடு வந்துவிடும்….அதிகமாக அப்போதெல்லாம்
     வருவது மாவட்ட அளவிலான அறிவியல்
     கண்காட்சிதான்.
                   மேல்நிலைப் பள்ளியானதால் அங்கு
    அறிவியல் பட்டதாரி இளநிலை,முதுகலைஆசிரியர்கள்
    இருந்தாலும் அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதை விட  
    10,12 ஆம்  வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் முனைப்பாக
    இருப்பார்கள்,ஆகவே அது எனக்கு நல்ல சந்தர்ப்பமாக
    இருக்கும்…..
                             மேல்நிலை வகுப்பு மாணவர்களும் ஆர்வமாக
    என்னிடம் வந்து வழிகாட்டக் கூறுவார்கள்…நான் எதுவும்   
    செய்ய மாட்டேன்,அவர்களை ஊக்குவித்தால் போதும்,    
    போட்டி  போட்டுக் கொண்டு அறிவியல்  மாதிரிகள்   
    வந்துவிடும்….
               இப்படி ஒவ்வொரு வருடமும், எனது பள்ளி  
    மாணவர்கள் ஈரோடு மாவட்ட அளவில் முதல், இரண் 
    டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்து வெற்றி பெறுவர்…..
               மாணவர்களிடம் ஆற்றல் பொதிந்து,புதைந்து  
   உள்ளதை நாம் கண்டுபிடிக்க  அவர்களுக்கு உதவினாலே  
   போதும்….எப்போதும் நம்மைச் சுற்றிச் சுற்றியே   
   வருவார்கள்….(மீண்டும் பேசலாம்)


No comments:

Post a Comment