Saturday, 3 January 2015

வருட ஆரம்பம் கதிர்வேல் மாணவன்



              வருட ஆரம்பம்-2015

             ஜனவரி 1 எனது மாணவன் ஒருவன் அலைபேசியில் அழைத்திருந்தான்.அவனது பெயர் கதிர்வேல்,பெருந்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 வருடங்களுக்கு முன்னர் அவனது 7ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியராக இருந்தேன்.பல வருடங்களானாலும் சில மாணவர்கள் நம்மோடுதானே பயணிக்கின்றனர்..அவனும் அப்படித்தான்..அறிவியல் செயல் மாதிரிகள்(working models) செய்வதில் அவனுக்கு அலாதிப் பிரியம்..”ஏதாவது சாதிக்க வேண்டுங் டீச்சர் ” என அடிக்கடி கூறுவான்.பல பரிசுகள் மாவட்ட,மண்டல அளவிலும்,மாவட்ட அறிவியல் கண்காட்சியில் முதல்,இரண்டாம் இடங்களைத் தக்க வைப்பான்..இங்கே.எனது பங்கு வெறும் Motivation,Possitive approach, Guidance மட்டுமே….பிறகு நம்பிக்கை தருவது..உங்களால் முடியும் ( we can-you can) அவ்ளோதான்…

              அவன் இப்போது 10ஆம் வகுப்பு முடித்து தொழிற்கல்வி பயில பெருந்துறை அருகே ஒரு கல்லூரியில் சேர்ந்துள்ளான்,”டீச்சர், First semester la,நாந்தான் முதல் மதிப்பெண் எனது வகுப்பில்,கல்லூரியில் 3ஆம் இடம்”, என சந்தோஷமாகக் கூறியதைக் கேட்டவுடன் எனக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை…வருடத்தின் முதல்நாள் எனது மாணவனின் மகிழ்ச்சியான இந்த செய்தி …..போதும்..மாணவர்கள் நம்மை மறக்கவில்லை..அவர்களது பண்புகளும் மாறவில்லை…நாம் விதைத்த வித்து..ஆரோக்கியமாக வளருகிறது என மகிழ்ந்தேன்..அவனது பழைய படம் ஒன்று இங்கே…அவனை நீங்களும் வாழ்த்துங்கள்….



No comments:

Post a Comment