Thursday, 1 March 2018

வகுப்பறை (கடந்த) உளவியல் 5

வகுப்பறை (கடந்த) உளவியல் 5
######################

இது ஒரு உடல் கூறு  அறிவியல் கண்ணம்மா ....

அந்த 4 மாணவிகளும் கடந்த ஒரு வாரமாக ஒரு மிக முக்கியப் பணியில் என்னோடு இணைந்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு நான் வகுப்பெடுப்பது  இல்லை. ஆனாலும் என்னோடு மிக நெருக்கமாகி விட்டனர்.

முதல் நாள் ஒரு மாணவி , மிஸ் நீங்க ட்ரெயினிங் மிஸ்ஸா ?

இன்னொரு ஆசிரியர் , ஏய் , அவங்க எவ்வளவு சீனியர் டீச்சர் , அப்படி கேக்கலாமா ? எனக் கடிந்து கொள்ள ,

எனக்குத் தெரியாது மிஸ் , அதனால் தான் நான் அப்படிக் கேட்டேன் - அந்த மாணவி .

அதெல்லாம் ஒன்றும் இல்லடா கண்ணு, பரவாயில்லை என்றேன்.

சரி நீ ஏன் இப்படிக் கேட்ட ? இது நான்

இல்ல மிஸ் , ட்ரெயினிங் வர மிஸ் ங்க தான் ஜாலியா உங்கள மாதிரிப் பேசுவாங்க ... நம்ம ஸ்கூல் மிஸ்லாம் இப்படிப் பழக மாட்டாங்க ...

ஓ... சரி சரி ... வேலை வேலை ... அரசுப் பள்ளிகளில் இது போன்ற தன்னார்வக் குழந்தைகள் இல்லை எனில் எவ்வளவோ பணிகள் முடங்க வாய்ப்பு இருக்கு.

இதே போல் கடந்த ஒரு வாரமாக பல கதைகள் பேசி எங்கள் நட்பு பலப்பட்டது.

வீடு , வகுப்பறை , பள்ளி , பிடித்த ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , அவர்களது விருப்பங்கள் , விளையாட்டு , வகுப்பறை ரகசியங்கள் , தங்களது பிடித்த பாட்டு , நடனம் இது போல் நிறைய விரிந்தது...

இது இப்படி இருக்க , இன்று மாலை , பணி முடியும் தருவாயில் ... நான் நகர .. அவர்களுக்குள்  மெதுவாக ஏதோ பேசுவதும் , அமைதியும் .. சிரிப்பும் என மாறி மாறி வர ....

ஹே ... கண்ணம்மாக்களே  ... என்னன்னு சொன்னா ... நானும் சிரிப்பேன்தான

ஒருவள் .. ஒன்னுமில்ல மிஸ் என மழுப்ப ,

அவர்களுக்கு அருகில் தரையில் அமர்ந்து கண்ணு இங்க பாருங்க ... எதுவா இருந்தாலும் மிஸ் திட்டமாட்டேன் , சொல்லுங்க .. என்றேன் .

மற்றொருவள் மிஸ் , இவளுக்கு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை இங்கு நான் )
நிறைய ப்ரபோஸ் வருதுங்க மிஸ் ...
யாரோ ஒரு பையன் லவ் பண்றன்னு வந்து சொல்லி இருக்கான் இன்னைக்கு ..இதே போல் அடிக்கடி மிஸ் எனக் கூறி சிரித்தாள் .. மற்ற 3 பேரும் சிரிக்கலாமா என்ன செய்யலாம் எனத் தெரியாது விழிக்க ...

நிலைமையைப் புரிந்து கொண்ட நானும் சூழலை சகஜமாக்க சிரித்து , இவ்வளவு தானா பிரச்சனை .....

கண்ணா , உலகத்துல 90% பெண்களுக்கு இந்த மாதிரி நடக்கும். இது ஒரு அறிவியல் , இந்தப் பருவத்துல எல்லாருக்கும்  வரும்.

அப்போ நம்ம உடம்புல ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு இந்த உணர்வு வரும். ஆனா நாம இதுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது , நாம பார்க்கும் சினிமாப் படங்கள் , கேட்கும் பாட்டு....இதெல்லாம் அந்த உணர்வத் தூண்டி விடற மாதிரி வரும் ... அதனால்
நாம கவனமா இருக்கணும் .....

ஆமா மிஸ் ,புரியுதுங்க மிஸ் , நாங்க அதுல மாட்டிக்க மாட்டோம் மிஸ். கவனமா இருப்போம் எனக் கூறி .... சிரித்த தெளிவான  முகத்துடன் வீடு திரும்பினர்.

நமது பதின்பருவ மாணவர்கள் மிக அதிகமாக கவனச் சிதறுதலுக்கும் , சிக்கல்களுக்கும் , ஆளாக நேரிடுவது , பள்ளிகளில் மிகப் பெரும் சவாலாக இருப்பது இன்னாட்களில் இப்பிரச்சனைகளால் தான்...

பாடம் தாண்டி பேச வேண்டிய பல விடயங்களில் இது முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இன்று என்னளவில் 4 குழந்தைகளை யாவது புரிய வைக்க முடிந்ததே என எண்ணி வீடு வந்து சேர்ந்தேன் .......

அன்புடன்
உமா

No comments:

Post a Comment