ஒரு ஆறாம் வகுப்புக் குழந்தையிடமிருந்து இவ்வளவு அழகானக் கடிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மிக மிக நேர்த்தியாக பொன்னிறத் தாளில் நட்சத்திரங்களை வெட்டி ஆங்காங்கே ஒட்டி அதில் வெண்ணிறத் தாளில் I Love you Miss,I like you miss , I mess you miss -by we all students என அழகாக எழுதி ,
அதைப் பிரித்தால் இன்னொரு வெள்ளை நிறத் தாளில் உறை தயாரித்து அதில் miss you are the best best friend of me , என எழுதி அருகே ஒரு ஆரஞ்சு நிற இரப்பர் பொம்மையை ஒட்டி this is you என எழுதி , மற்றொரு புறத்தில் மற்றொரு பறவைப் படத்தை வைத்திருக்க ,
அதையும் பிரிக்க உள்ளே வண்ண எழுத்தில் I 💟 U எனவும் , first you read the English Next you read the Tamil எனவும் எழுதி மிக அழகிய பூ வேலைப்பாடுள்ள ஒரு பாசியை ஒட்டி உறையாகத் தயாரித்திருக்க ,
உள்ளே பிரித்தால் முழு நீள வெள்ளை நிறத் தாளில் ஆங்கிலத்திலும் வலது மேல் ஒரு இருதய வடிவத் தாளை வெட்டி அதில் வெளிர் சிவப்பு நிறம் தந்து அதற்குள் சில வரிகள் தமிழில் .... ( அப்படியே மாணவியின் எழுத்துகளைத் தருகிறேன் )
Good Habit
Maths miss you are the great miss you are the best miss you are lessoning the maths I am study well.miss you come to this class the will change totally and study well you Will not beet anther you always smiling and congrats me an anther. I like your smili. I prayed of you.I like your service.you have proved as a had India girl.You are the Achimemt girl.
You don't have the Bad habit keep it up.
I love you so much to you.
Thank you
Yours loving friend
R.Saranya vi A1
தமிழில் ...
நீங்கள் இந்த வகுப்பறைக்கு ஒரு நல்ல கணக்கு ஆசிரியர் படிப்பை விட மரியாதை தான் முக்கியம் என கூறியது நீங்கள் தான் எனவே இந்த பள்ளிக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் ...
மாணவர் மதிப்பீடுகள் தொடரும்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment