தினம் ஒரு (மாணவர்) மதிப்பீடு : 6
**********************************
எத்தனைக் கல்விக் கொள்கைகள் வந்தாலென்ன ? எத்தனைக் கல்விக் கமிஷன்கள் கல்வியை எளிமைப்படுத்த வந்தாலும் பள்ளியின் மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும். அவர்களை இயல்பாக அணுகவிடுவதில்லை நாம் எவரும். இதன் விளைவு குழந்தைகள் மனதில் ஏக்கம் பிறந்து விடுகிறது. அன்பிற்கு , சந்தோஷத்திற்கு , தங்களுக்காக நேரம் ஒதுக்குவதற்கு என எல்லாவற்றிற்கும் ஏங்குகின்றனர்.
இந்த 6 ஆம் வகுப்பு மாணவியைப் பற்றி , 3 மாதங்களுக்கு முன்னால் எனக் காலக்கோட்டுப் பதிவில் "எனக்குக் கணக்குப் பிடிக்காது " என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அவரது இந்த feed back கடிதம் ஒற்றை வரியை ஒட்டுமொத்த மாணவிகளின் குரலாக கல்வித் துறைக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்துகிறது. இனியாவது "சந்தோஷம் " என்ற அந்த ஒற்றை வார்த்தையை இக்குழந்தைகளுக்குத் தர முயற்சிப்போம் .( பிழைகளைத் திருத்தாமல் மாணவியின் கடிதம் அப்படியே உங்களுக்காக)
(இதில் என்னை அவர் குழந்தையோடு குழந்தையாக பாவித்து செல்லக்குட்டி என அழைப்பது பேரானந்தமாய் உணர்கிறேன்.)
My Chellakutty Miss Feed back to letter Uma mageshwari Miss. எனக்கு கணக்கு பிடிக்காது நீங்க வந்துனால் எனக்கு கணக்கு ரோம்ப ரோம்ப பிடிக்கும் இந்த மாதிரி Miss எங்கமே பார்க்க முடியாது ஆனால் எங்க பள்ளியிலும் நல்லா பாத்து பாங்க அந்த பள்ளியில் 6,7 ,8 , 9 , 10 , 11 , 12 ஆம் வகுப்பு இல்லை அங்க இருக்கர ஒரு ஒரு Miss உங்கள மாதிரி இருப்பாங்க ,Miss நீங்க இருக்கர வரிக்கும் எங்க Class ரோம்ப மகிழ்ச்சியாக இருபோம் Miss உங்கள எல்லா Student க்கு ரோம்ப பிடிக்கும் நீங்க எங்கல good habits கத்துக் குடுக்கிறங்க Miss ஒரு ஒரு Sum எங்களுக்கு புரிந்து சொல்லி கொடுக்கிறங்க Miss , உங்கள நான் எப்போமே பார்க்கனும் Miss , I LOVE You Miss , உங்கள மாதிரி Missங்க இருக்கர வரிக்கும் நான் ரோம்ப சந்தோஷமாயிருப்பேன் Miss ..
By E .Priya VI A1
இந்தக் கடிதத்தின் இறுதியில் வரும் ஒற்றை வரியே என்னை கவலையுறச் செய்கிறது. இன்றைய பள்ளி குழல், பொதுவாக... சந்தோஷமில்லாமல் இருப்பதையே இது உணர்த்துகிறது.
தொடரும்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment