அட ... புதுப்பிரச்சனை (26.11. 18)
ஏற்கனவே குழந்தைகளால் போக்குவரத்து நெரிசல் , பேருந்துப் பயணம் , டிரெய்ன் என குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர இயலுவதில்லை , குறைந்தது 50 பேர் தினமும் தாமத வருகை தான். ..
ஆனால் , இன்று நாங்கள் 8.45 இலிருந்து காலை பள்ளி வளாகத்தில் .. கையில் அலைபேசியின் ஆதிக்கத்துடனேயே ..
காரணம் என்னவென்று கேளுங்கள் ... மாணவிகளின் வருகை TNSCHOOLS செயலி வழியாக 9.30 க்குள் அனுப்ப வேண்டும் ...
எனக்கு அந்த app ஓபன் ஆகவே இல்லை மிஸ் , உங்களுக்கு ?... என் மொபைலில் சுத்திகிட்டே இருக்குதுப்பா ... எனக்கு hang ஆகுது மிஸ் , எனக்கு இன்ஸ்டால் ஆகவே மாட்டேன்னுதுப்பா , எனக்கு ஓபன் ஆச்சு , ஆனா அதுக்குப் பிறகு வேல செய்யலப்பா .. இப்படியான குரல்கள் 9.30 வரையில் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்க ... எனக்கு please wait தான் காமித்துக் கொண்டே இருக்க , அட போங்கப்பா .. நான் கணக்கு நடத்த போய்ட்டேன். இது கொஞ்ச நேரத்தில் மறந்தே போனது. ..
2 பிரிவேளை முடிந்து ஆசிரியர் அறைக்கு செல்ல ... என்ன உமா மிஸ் .. நீங்க இன்னும் அட்டன் டென்ஸ் ஆன் லைன்ல போடலயா ???, எனக்கு please wait தான் காமிக்குது என்றேன்.
எனக்கும் தான் , ஆனா நான் எலிசபெத் மிஸ் மொபைல் லில் போட்டுட்டேன் என்றார் தமிழ் .. ஓ.. அப்படியா ? சரி எனக்காகவும் உதவினார் எலிசபெத் (வாழ்க) இது நடந்தது 11.15க்கு .. எங்களுக்கு எல்லாம் க்ரீன் டிக் வந்தது. உங்களுக்கு மஞ்சள் காமிக்குது .. இவ்ளோ நேரம் ஆகிடுச்சு என்பதாலா ?? எலிசபெத் கேட்க ...
நானோ .. பரவாயில்லை மிஸ் எனது வகுப்பு போட முடியவில்லை என்றால் என்னை யாராவது மெமோ கொடுக்கட்டும் , அப்போதுதான் இதற்கு சில கேள்விகளை யாவது என்னால் கேட்க முடியும் , என்றேன்.
தொடர்ந்து உணவு இடைவேளையில் கூட .. யாரும் உணவு உண்பதை மறந்து இதை எடுத்துக் கொண்டு ஒரு கையில் அட்டென்டன்ஸ் , ஒரு கையில் மொபைல் ...
மனம் உளைச்சலுடன் சுழல ஆரம்பித்து ஆசிரியர்களது மனநிலை .....
எனக்குள் சில சந்தேகங்கள் .... பல கேள்விகள் ....
* எல்லா ஆசிரியர்களும் ஆன்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கணும்னு இந்திய கல்வி உரிமைச் சட்டம் சொல்லுதா ?
* அப்படியே இருந்தாலும் எல்லா ஊர்களிலும் இணைய இணைப்பு சப்போர்ட் பண்ணுமா ?
* காலைல புத்துணர்வா பாடம் நடத்தாம இந்த வேலைய டீச்சர்க் கிட்ட தந்து மன உளைச்சல் தரும் முறை எந்த வகையில் சரி ?
* எல்லா வசதிகளையும் அரசு செய்து விட்டு பிறகு இதை நடைமுறைப்படுத்தலாமே ?
* இவை எல்லாம் எதுக்காக ? என்ன மாற்றம் வந்துவிடும் ?
* இதை எல்லாம் ஆசிரியர் சங்கங்கள் கேட்காதா ??
* ஒரு ஆசிரியர் இதையே பார்த்தால் , முதல் பிரிவேளை வேறு வகுப்புக்கு செல்கையில் பாடம் பாதிக்கப் படாதா ?
* இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் புரிய வைக்க களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களிடம் கூறவும் , தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு சொல்லவும் என்ன தயக்கம் ?
* பிரச்சனைகளைக் கூறினால் தானே தீர்வுகளை நோக்கி நகர முடியும் ?
எனக்கான பிரச்சனையை யாரிடம் கூற ?
களம் விரியும்
உமா
No comments:
Post a Comment