பெருகி வரும் மரணங்கள் -
அரசுப் பள்ளிகள் மூடல்
எத்தனையோ பேர் போராடி கல்வி உரிமைச் சட்டத்தை இந்தியாவில் அமலுக்குக் கொண்டு வந்தாலும் எங்கயும் நடைமுறையில் இல்லை.
குழந்தைகள் பேரைச் சொல்லி பணமா ஒதுக்கி தனித்தனியா பாக்கெட்ல போட்டுட்டு ஏமாத்தறதுக்கு அரசே எல்லா மாநிலத்திலும் துணையிருக்கு .
பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளுக்கு தேவையான வசதி செய்து குடுக்காத அரச கேள்வி கேட்க யாருமே இல்லை ,
ஆசிரியர்கள் ஒருத்தர் கூட குழந்தைங்க சுகமா , நிம்மதியா பள்ளிக்கூடத்துல
இருக்க, கழிப்பறை , குடிநீர் , கட்டமைப்பு , ஆசிரியர் பணி நியமனம் இது பத்தி எதிர்க் குரல் தர முன்வராத நிலைமை.
சட்டத்தில் இருப்பதை எம் பள்ளிக்கூடத்துல நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்யாத இருக்கும் நானெல்லாம் ஒரு ஆசிரியரா இருக்கத் தகுதி இல்லாதவன்னு நினைச்சு வருத்தம் மட்டும் பட்டுகிட்டு இருக்க மாட்டேன்.
கல்விக்கான வரின்னு எல்லார்கிட்டயும் அரசு கரெக்டா ஃபைன் போட்டு கூட வாங்குதே , அதுக்கு அய்யோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு பயந்துகிட்டு கட்றோமே , எப்பவாச்சும் அந்த கல்வி வரி பணம் எல்லாம் மாநில அரசோ மத்திய அரசோ முழுசா கல்விக் கே செலவு செய்யுதான்னு யாராச்சும் கேள்வி கேட்கறமா ?
ஆயிரம் திட்டங்களைக் கொண்டு வந்து கோடி கோடியா பணம் ஒதுக்கி பட்ஜெட் போட்டாலும் எத்தனை லட்சக்கணக்கான குழந்தைங்க நாடு பூராவும் தெருவோரம் பிச்சை எடுக்கறத கடந்து தானே போறோம் ?
சின்னதும் பெருசுமா அமைப்பு சார்ந்து களப்பணி செய்தாலும் இது பற்றிய விழிப்புணர்வோ ஆதங்கமோ கோபமோ பொதுமக்களுக்கு மத்தியில் ஏன் நம்மால கொண்டு வர முடியல ?
எப்போதும் பற்றாக்குறை , எங்கு உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கம் என்ற பிரிவினை தானே முன்னாடி நிக்குது. பொதுவுடைமைக் கோட்பாடுகள் என வரிகளில் படிச்சா போதுமா ?
சின்ன முயற்சி கூட வாத்தியார் கூட்டம் எடுக்க மாட்டேன்னுது. எடுக்கறவங்க பின்னாடி வரவும் தயக்கம் காட்டுது.
சுருங்கிப் போய் இருக்காங்க இங்க எல்லாரும் , தன் வீடு , தன் குழந்தைகள் , அவர்களது வாழ்க்கை என. இந்த சமூகமும் நமக்குள்ள தானே என கொஞ்ச நேரம் ஒதுக்கினா என்ன ?
இப்படியே போய்க்கிட்டு இருந்தா எல்லா கல்வித் திட்டங்களும் தனியார் MNC நிறுவனங்க கைக்கு போய் கடைசியா அரசுப்பள்ளிக்கூடங்க எல்லாம் , ஒரு காலத்தில் இங்க படிச்சாங்க என சோக வரலாறு சொல்ற இடுகாடாக மாறிவிடும் .
இப்போ வந்து இருக்கும் சமக்க்ஷர அபியான் திட்டம் வெறும் 2 வருஷக் கூத்துக்கு எத்தனையோ ஆயிரம் பில்லியன் பணம் நிதியா ஒதுக்கி இருந்தாலும் , கான்ட்ராக்ட் டீச்சர தேடறாங்களே , இது எப்படி ஒரு அறமாகும் ?
தலைமை ஆசிரியரா இருக்க 25000 தான் தருவோம் னு ஒப்பந்தம் செய்தா முழுமையா கல்விப் பணிய நம்மால அவங்ககிட்ட இருந்து எப்படி எதிர்பார்க்க முடியும் ? அரசுப் பள்ளிக் கூடங்கள் எப்படி நல்ல கல்வி தர முடியாம போகும் ? எல்லா ஊர்களிலும் கேந்திர வித்யாலயாவத் தேடிப் போகும் மக்கள் மாநில அரசுப் பள்ளிகளை ஏன் புறக்கணிக்கனும் ? என்னிக்காச்சும் யோசிக்கறோமா ?
அந்த பள்ளியில கற்பித்தல் பணி மட்டும் தான் ஆசிரியர் பண்றாங்க , ஓரளவு கட்டமைப்பு வசதிகளும் இருக்கு , அப்படின்னா , அதையே அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினா, தானா வந்து குழந்தைகளை சேர்க்கப் போறாங்க பெற்றோர்...
அதைய ஏன் இந்த அரசாங்கம் செய்ய மாட்டேன்னுது ? இங்க இருக்கற
டீச்சர்க்கு கற்பித்தல தவிர மத்த எல்லா வேலையும் தருவாங்க , அதையெல்லாம் செய்து முடிச்சுட்டு நேரம் இருந்தா தான்பசங்களுக்கு பாடம் நடத்த றோம் , இல்லன்னா அவங்க நம்மள கேள்வியா கேட்கப் போறாங்க , அல்லது அவங்கள பெத்தவங்க தான் வந்து கேட்க முடியுமா ?
கலெக்டர் குழந்தைங்களும் டாக்டர் , என்ஜினியர் பசங்க, அதிகாரிங்க பசங்க படிச்சா பயந்துட்டு வேலையும் நடக்கும் , எல்லா பள்ளிக்கூடத்திலயும் கூட்டமும் இருக்கும். ஆனா அவங்க எல்லோரும் மஞ்ச பஸ் க்கு தான பிள்ளைய அனுப்ப றாங்க , நாம மட்டும் இங்க அனுப்பிடுவோமா ? அது எப்படி .. நம்ம குழந்தைங்க இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்சா தானே நமக்கும் பெருமை .
அப்போ கல்வி உரிமைச் சட்டம் எப்படித் தான் விளங்கும் ?போங்க ...
No comments:
Post a Comment