Friday, 5 April 2019

வகுப்பறை உளவியல் - 7

#வகுப்பறை_உளவியல்_7  #மீள்

(எனது வகுப்பறை உளவியல் பதிவுகளும் தினம் ஒரு மாணவர் மதிப்பீடும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை தொடர்ந்து என் காலக்கோட்டுப் பதிவுகளைப் பார்ப்போர் அறிவர்)

#வாசிப்பை_நேசிப்போம்
################
வகுப்பறை வெறும் பாடநூல்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை ...நிறைந்த அனுபவங்களைத் தர பாடநூல்களைத் தாண்டிய வாசிப்பு அவசியம் என்பதை ஆசிரியர்களாகிய  நாம் உணர்வதோடு நடைமுறைப்படுத்தினால் சொல்லொனா இன்பமும் மகிழ்வும் நம்மையும் மாணவரையும் சேரும் என்பதற்கு ஒரு உதாரணம் ... இதோ .....

அது ஏழாம் வகுப்பு ...

அறிவியல் பாடத்திற்கு இடையிடையே வாசிப்பிற்கான ஆவல்களை மாணவிகளிடம் உருவாக்கிய சூழல் ... எப்போதும் என் கைப்பையில் சிறு சிறு புத்தகங்கள் வைத்திருப்பதால்  ஒரிரு மாணவிகளுக்கு ஆரம்ப காலத்தில் (2 மாதம் முன்பு ) அவர்களின் விருப்பத்தின் பேரில் , அப்புத்தகங்களை வழங்கினேன்.

நாட்கள் செல்லச் செல்ல ...

மிஸ் எனக்கும் கதைப் புத்தகம் வேண்டும் , மிஸ்.. எனக்கு குடுத்தா நானும் படிப்பேன் தானே , மிஸ் நாளைக்கு எனக்கு கண்டிப்பாக் கொண்டு வரணும் ... இப்படியே ஒவ்வொரு நாளின் வகுப்பறைகளும்

துளிர் ,கலைக்கதிர் , புத்தகப் பூங்கொத்து புத்தகங்கள் என அவர்களின் பைகளுக்கு இடம் பெயர்ந்தன. . இந்த ஆர்வம் அடுத்தடுத்த நாட்களில் வேறு விதமாக மாற்றம் பெற்றது.

மிஸ் எனக்கு English book மிஸ் இது பத்மா  , எனக்கு Chennai Times நேற்று கொண்டு வந்தது முழு சாப் படிச்சுட்டேன். இன்னைக்கு Paper ஐ நாளைக்கு எடுத்துட்டு வாங்களேன் இது கீர்த்தனா . மிஸ் எனக்கு சின்ட்ரெல்லா புத்தகம் மிஸ் , மிஸ் மிஸ் எனக்கு  ஹிந்தில ஏதாவது புத்தகம் வேணும் மிஸ், படிக்க ஆசை , மிஸ் எனக்கு Spoken English புத்தகம் மிஸ்.... மிஸ் எனக்கு கதைப் புத்தகம் மட்டும் போதும் , பாட புத்தகம் வேண்டாம் இது கார்த்திகா , மிஸ் எனக்கு எதோ ஒரு புத்தகம் இது ஹரிணி , இப்படியே ஷாலினி ஏக்கமுடன் மிஸ் திருக்குறள் புத்தகம் எனக்கு இருந்தா தாங்க ... படிச்சுட்டுத் தரேன் , புனிதவள்ளி இதைப் போலவே மிஸ் எனக்கும் திருக்குறள்.

எல்லோருடைய எதிர்பார்ப்புகளும் 2 நாட்களில் எனது வீட்டில் இருந்த அத்தனைப் புத்தகங்களும் தேடப்ட்டு அவர்களது கரங்களில் ... ஆசையா சையாய் 2 , 3 என ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல எங்கள் வகுப்பில் எல்லா நாட்களும் ஆனந்தமே ....

ஒரு வாரத்தில் அந்தப் புத்தகங்கள் மாறி மாறி அவர்களுக்குள்ளாவே பயணம் செய்து நேற்றும் , முன் தினமும் வேறு வகுப்புகளுக்கும்  இடம் பெயர்ந்துள்ளன ....

கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பின் சுவை தந்தாயிற்று , விடுமுறையில் நூலகத்திற்கு செல்லும் வழிகளையும் சொல்லியாயிற்று ..இதோடு தினமும் ஒரு முறை என் பையில் நான் படிக்க வைத்துள்ள புத்தகங்களையும் எடுத்துக் காட்டி ஆர்வம் தந்து விடும் பழக்கமும் சேர்ந்து .... மிஸ் லீவுல படிக்க புத்தகம் வேணும் , வாங்கித் தநீங்களா ????

இதைவிட வேறு வழிகளில் அவர்களது நெஞ்சைத் தொடுவது எளிதல்ல எனத் தோன்றுகிறது.

தொடரும் உளவியல்
அன்புடன்
உமா

No comments:

Post a Comment