Thursday, 18 March 2021

Arakkar TV


1. இந்த தேசிய கல்வி கொள்கை, ஒரு 4 நாலு வருஷ bachelor course ல இருந்து வெளியேற 3 வழிகள குடுக்குது. இத ஆதரிக்கறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு. ஒரு ஆய்வுல நமக்கு தெரியவரது என்னன்னா IIM, IIT போன்ற institutes ல dropout ஆகுறது பெரும்பான்மையா OBC, SC மற்றும் ST மாணவர்கள் தான். மேலும் குறிப்பா எந்த வருஷத்துலயும் வெளில வரலாம்ங்கிற விஷயம், வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்துல இருக்கற மாணவர்கள் மற்றும்  பெண்கள, கல்லூரிய விட்டு வெளில போக ஊக்குவிக்கும். இம்மாதிரியான திட்டங்கள் வெளிநாட்டுல இருக்கு, அதே மாதிரி இங்கயும் வந்தா என்ன தப்புனு கேக்குறவங்களுக்கு நம்ம என்ன பதில் தரலாம் ? (K) (8)


2. இந்த கல்வி கொள்கைள பள்ளி படிப்பில் இருக்கும் போதே வேலை அனுபவம் பெற internship என்பது ஊக்குவிக்கப்படும்னு சொல்றாங்க. இம்மாதிரியான விஷயங்களை பள்ளிப்படிப்பில் ஒரு அங்கமா சேர்க்க ஒரு சமூகமா நாம தயாரா இருக்கோமா ? எடுத்துக்காட்டா சென்னையில், கோவையில் பள்ளிப்படிப்பு படிக்கும் ஒரு மாணவரை சுற்றி இருக்கற வாய்ப்புகளும், விழுப்புரம் பக்கம் உள்ள ஒரு சிற்றூர்ல அல்லது திருவாரூர் பக்கம் உள்ள ஒரு கிராமத்துல இருக்கற மாணவரை சுற்றி இருக்கற வாய்ப்புகளும் ஒன்னா இல்ல. அப்டி இருக்கும் போது ஒரு கட்டமைப்ப உருவாக்காம இம்மாதிரியான விஷயங்கள் எதற்காக சொல்லப்படுகின்றது ? இதை எப்படி புரிந்துக்கொள்வது ? (K) (3) 


3. நம்ம நாட்டுல ஒவ்வொரு மாநிலமும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடுன்னு சொல்ற அளவுக்கு தேவைகள் வேற வேற மாதிரி இருக்கு. ஒவ்வொரு மாநிலத்துக்குமான சுகாதாரம் சார்ந்த தேவைகளும் வெவ்வேறயா இருக்கு. அந்த சூழல்ல ஒரு பொதுவான கட்டமைப்புல எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரே கொள்கைன்னு சொல்றது சரியா ? (A) (4) 


4. வெளிநாடுகள்ல புராதன இலக்கியங்கள, தத்துவங்கள மாணவர்களுக்கு கற்றுத்தருதல் என்பது இருக்கு. அது அவங்களோட சிந்தனையை தூண்டும் விதமா இருக்கும்னும் மொழி வளத்த பெருக்கும்ன்னும் சொல்றாங்க. இந்த கொள்கைள மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தெரியவைக்கப்படும் னு சொல்றாங்க. பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்த நாட்டுல இந்திய கலாச்சாரம்னு இவங்க எத சொல்றாங்க ? (A) (10)


5. வருடா வருடம் ஹிந்தி மொழிய வளக்கறதுக்கும் சமஸ்க்ரிதத்த வளக்கறதுக்கும் அவ்ளோ ஆயிரம் கோடி செலவிடற அரசாங்கம் மற்ற மஸ்யோகிகளை வழக்க எவ்ளோ செலவிட்டுருக்கு. இவங்க மும்மொழிக்கொள்கைன்னு சொல்லும் போது நாடு முழுக்க மூன்றாம் மொழியை எதை கத்துத் தராங்கன்னு தகவல வெளில சொல்லுவாங்களா. அந்த மூன்றாம் மொழிய கத்துத் தருவதற்கான ஆசிரியர்கள் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு மொழி வாரியா இவங்க சொல்லுவாங்களா ? நம்மை தவிர்த்த மற்ற மாநிலங்கள்ல இதற்கான எதிர்வினை எப்படி இருக்கு ? (K) (U) (11) 


6. நம்ம மாநிலத்துல ஒரு மாணவர் பள்ளிக்கு வெகு தொலைவு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருக்கக்கூடாதுன்னு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்போ இந்த கொள்கைள Cluster School என்ற திட்டம் முன்வைக்கப்படுது. அதன் படி ஒரே complex இல் ஒரு secondary school உம் மற்ற primary school களும் அங்கன்வாடிகளும் ஒன்றிணைக்கப்படும் னு சொல்றாங்க. இத பண்றதால ஆசிரியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு பிரச்சனைகளான library, lab போன்ற பிரச்சனைகள சரி பண்ணிடலாம்னு சொல்றாங்க. ஆசிரியர் இல்லாத பள்ளிகள்ல ஆசிரியரை நியமிக்காம, உள்கட்டமைப்பு சரியாய் இல்லாத பள்ளிகள்ல உள்கட்டமைப்ப சரிபண்ணாம மாணவர் வருகை கம்மியா இருக்கற பள்ளிகள்ல ஏன் வருகை கம்மியாகுதுன்னு யோசிக்காம இப்டி இவங்க முன்வைக்கிற திட்டத்துனால வர பாதகங்கள் என்ன ? (A) (2) 


7. தமிழ் நாடு இந்த தேசிய கல்வி கொள்கைய அமல்படுத்த முடியாது, எங்க மாநிலத்துக்குனு ஒரு கொள்கைய அமல்படுத்துவோம்ன்னு சொல்ல நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்துல இடம் இருக்கா ? (K) (12)


8. இந்த கல்வி கொள்கைள Digital என்பதன் மேல பெரிய நம்பிக்கையை வெச்சு இருக்கற மாதிரி தோணுது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு online வழி கல்வி தரப்படும்ன்னு சொல்றாங்க. ஆனா, மாணவர்கள் மத்தியில online வழி கற்றலை அதிகம் பண்ண மூணு விஷயம் தேவைப்படுது. ஒன்னு கட்டணமில்லா broadband சேவை, மாணவர்கள் பயன்படுத்துவதற்கான digital device மூணு இந்த device அ கல்விக்கு பயன்படுத்தும் வழி அவர்களுக்கு கற்றுத்தரப்படுவது. இது எதைப்பத்தியும் பேசாம இவங்க என்ன வகையான online கல்விமுறைய பேசுறாங்க ? (U) (5) 


9. மருத்துவ கல்விக்கு நீட் என்ற தேர்வு மாதிரி, மற்ற படிப்பிற்கும் அதாவது Arts & Science , Engineering மாதிரியான படிப்பிற்கும் ஒரே நாடு ஒரே தேர்வு னு இவங்க இம்மாதிரியான தேர்வுகள் நடத்த National Testing Agency என்ற அமைப்பிற்கு அதிகாரம் வழங்கப்படும்ன்னு சொல்றாங்க. உலகம் முழுக்க இம்மாதிரியான தேர்வுகள் தேவையா தேவையில்லையா ன்னு யோசிச்சிட்டு இருக்கற இந்த நேரத்துல இப்டி பட்ட நுழைவுத் தேர்வுகள அமல்படுத்த நினைப்பதை எப்படி எடுத்துக்கொள்வது ? (K) (6) 


10. நம்ம மாநிலத்துலயே ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ன்னு பேசிட்டு இருக்கற இந்த வேளைல, இந்த கல்வி கொள்கைல Non Detention Policy பற்றி என்ன சொல்லிருக்காங்க ? ஒரு அரசு பள்ளி ஆசிரியையா நீங்க இந்த கொள்கை மாற்றத்த எப்படி பார்க்கிறீங்க ? (U) (1) 


11. இந்த கல்விக் கொள்கைளை இட ஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. மேலும் ஆசிரியர்கள் நியமனம் முழுக்க "merit" அடிப்படையில தான் நடக்கும்னு சொல்லிருக்காங்க. மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு குறித்தோ ஆசிரியர் நியமனத்துல இடஒதுக்கீடு குறித்தோ எதுவும் இல்லை. அடுத்த இரண்டு தலைமுறை மாணவர்களை பாதிக்கும் அளவிற்கு தாக்கம் உள்ள இந்த கொள்கைள ஐடா ஒதுக்கீடு பற்றி பேசாதிருப்பது தற்செயலா ? (A) (7)


12. இந்த கல்வி கொள்கைள கல்வியில் தனியார் பங்கு குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்ன ? (U) (9)


No comments:

Post a Comment