அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்ன ஆயிற்று
கொரோனா ஊரடங்கினால் கல்வி ஆண்டின் முதல் பருவம் முடியப் போகும் தருவாயில் கூட
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது இல்லாமல் இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள் .
தனியார் பள்ளிகளில் இந்த அசாதாரண சூழலிலும் எப்போதும் போல மாணவர் சேர்க்கை நடைபெற்று இணைய வழி வகுப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. ஏதோ ஒரு வகையில் மாணவர் கற்றல் - கற்பித்தலில் தொடர்பில் உள்ளனர்.
ஆனால் வேலையிழந்து பொருளாதாரத்தில் நலிவுற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெற்றோர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்காகக் காத்து தவிக்கின்றனர்.
மற்றொரு புறம் நோய்த் தொற்று காரணமாக சொந்த ஊருக்கு குடிபெயர்ந்துள்ள ஏராளமான குடும்பத்தில் வாழும் பள்ளி வயதுக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளின் சேர்க்கைக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரும் தேர்ச்சி என்ற சூழலில் 11 ஆம் வகுப்பு சேர்க்கையும் இன்னும் ஆரம்பிக்கப்பட வில்லை.
மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையில் ஏமாற்றங்களாக உணருகின்றனர் பெற்றோர் .
இவ்வாறு அரசுப் பள்ளிகளை நம்பி இருக்கும் குழந்தைகள் கேள்விக் குறியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்துவதாக ஒரு புறம் கருத்து நிலவுகிறது .
ஏற்கனவே அரசுப் பள்ளிகள் மீதான எதிர்மறை விமர்சனங்கள் இந்த மாணவர் சேர்க்கை தாமதப் படுத்தும் சூழலால் பொது மக்களின் மனதில் நம்பிக்கை இழப்பதாக அமைந்து விடாமல் இருக்க அரசு இதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment