Thursday, 18 March 2021

DPl

DPl 



      கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல்      

               பயிற்சிப் பணிமனை

                              ( Educational Digital Resources workshop cum Training )


நாள்:21.08.2114---23.08.2014 (3 நாட்கள்)

இடம்: SIEMAT கருத்தரங்க அறை- DPI வளாகம்,சென்னை.

              

                 இந்நாட்களில் கல்வி கற்றல்-கற்பித்தல் என்பது கரும்பலகைகளோடு  நின்றுவிடாமல்,  தொடுதிரை(Touch Board),Digital content, Video lessons ,Multimedia,  எனப் பல்வேறு பரிமாணங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

               தமிழகத்தின் பள்ளிகளில்  பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பகுதியினர், இந்தத் தொழில்நுட்பங்களைக் கற்பித்தலில் புகுத்தி வருகின்றனர்.அவர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் இருக்கும் கல்விசார் கணினி வளங்களைத் தொகுத்துப் பெற்றும் , பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்தி அவர்கள் புதிய முறையில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி மேலும் கல்விசார் கணினி வளங் களைத்  தயாரித்துப் பயன் பெறவும், நம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஏற்படுத்தித் தந்த முயற்சியே  இந்த  3 நாள்  ICT-பயிற்சி. இது பற்றிய ஒரு பதிவை இங்கு உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.

                     இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து 40 ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். முதல் நாள் காலை 9 மணி முதல்  ஆசிரியர்கள்  வர வர பெயர்ப்பதிவு நடந்தது,அதை SCERT-ன் உதவிப் பேராசிரியர் அஷோக்  கவனித்து வந்தார். 10 மணிக்கு முன்னதாகவே  39 ஆசிரியர்கள்,தங்கள் வருகையை உறுதி செய்தனர். அனைவரும் தங்களோடு மடிக்கணினி களை எடுத்து வரும்படி  முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் கைகளில்  மடிக்கணினியோடே இருந்தனர்.

                 10.30 மணி அளவில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் (SCERT) பயிற்சி (Training)  இணை இயக்குனர் திருமதி உமா அவர்கள் பயிற்சியின் துவக்க உரையாற்றினார்,அப்போது அவர் கூறியவை.. “இதுபோன்ற  ஒரு பயிற்சியை நாங்கள் இதுவரை கண்டதேயில்லை,ஏனெனில் முதல் நாளான இன்றே காலையில் வந்தது முதல் கவனித்து வருகிறேன், யாரும் குனிந்ததலை நிமிரவே யில்லை. எல்லோரும் கணினியில் ஏதோ செய்து கொண்டே இருக்கின் றனர்.. அல்லது அது பற்றி அவர்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே  எங்களின் இந்த  ஆசிரியர்களைத் தேர்வு செய்ததே முதல் வெற்றியாக எண்ணுகிறோம் என்று மகிழ்ச்சியோடு  கூறியதோடு, தொடர்ந்து பயிற்சியை எடுத்துக்கொண்டு,  கணினி வளங்கள் தயாரித்து SCERT-க்கு அளிக்க வேண்டும்”, என்றும்   கூறி அனைவரையும்  வாழ்த்தி அமர்ந்தார்.

                தொடர்ந்து  SCERT இன் இயக்குனர், திரு கண்ணப்பன் அவர்கள் சிற்றுரையாற்றினார்.EMIS பற்றியும்,இந்தப் பயிற்சியின் நோக்கங்கள் என்ன,இதன் தொடர் பணியாக ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பவை பற்றியும் எடுத்துரைத்தார்.மேலும்  இங்கு வந்திருக்கும் ஆசிரியர்கள் பற்றியும் கூறினார்.

                       ”ICT-ல் தேசிய விருது வாங்கியிருக்கும் ஆசிரியர்கள் பெர்ஜின், திலீப், மற்றும் சிலர் வந்துள்ளனர்,10வருடங்களுக்கு முன்னதாகவே கணினி வாங்கி எங்கோ மலையிலிருந்து அந்தக் குழந்தைகளுக்குக் கற்பித்தலில் கணினியைப் பயன்படுத்திய தர்மராஜ்,கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் புதுமை படைத்து  ஜப்பான் சென்று பயிற்சி பெற்ற அன்பழகன்,பள்ளியை சமூகத்தோடு இணைத்துப் பெரும் மாற்றங்கள் செய்து வரும்  கருப்பையன் என்று பல்வேறு நிலைகளிலிருந்து ஆசிரியர்கள்  வந்திருக்கிறீர்கள்..பல புதிய ஆசிரியர்களும் வந்துள்ளீர்கள்..

                     ஆகவே  இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி நமது பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும், பல்வேறு கிராமங்களின் பள்ளிகளுக்குக் கொண்டு சென்று பயன்படுத்தவும்       e-content தயாரித்து வழங்க முதல் முயற்சியாக உங்கள் 40 பேரை பல்வேறு மாவட்டங்களின் பிரதிநிதிகளாக அழைத்துள்ளோம்.             

                   இதற்கு முன் கடந்த வருடம் டிசம்பர் 4 அன்று 90 ஆசிரியர்களை அழைத்து ஒரு அறிமுகப் பயிற்சியை SCERT தந்தது, அப்போது நமது ஆசிர் ஜூலியஸ்,தளவாய் ஆகியோர் EMIS,e-content    பற்றி  விளக்கினர்.  அது ஒரு நாள் பயிற்சி,மற்றும் ஆயத்தப் பயிற்சி மட்டுமே . ஆனால் இந்தப் பயிற்சியை 3 நாளாகத் திட்டமிட்டுள்ளோம், தொடர்ந்து செய்யுங்கள்”, என்று தனது கருத்தை இரத்தினச் சுருக்கமாகக் கூறி, பயிற்சியைத் துவக்கி அமர்ந்தார்.

                 பயிற்சி ஆரம்பித்தது.முதலில் நமது SCERT பேராசிரியர் திரு ஆசிர் ஜூலியஸ் அவர்கள், கருத்தாளர் எட்வின் பாக்யராஜ் அவர்களை அறிமுகம்  செய்து வைத்தார்.

                அவர்  ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்த ஏதுவாக பவர்பாயிண்ட்(PPT) மென்பொருளை  எவ்வெவ்வழிகளில் பயன்படுத்தி e-content தயாரிக்கலாம்.தயாரிக்கும் போது எவற்றை மனதில் கொள்ள வேண்டும்,அதில் இருக்கும் Options ஒவ்வொன்றையும் பயன்படுத்த செயல்விளக்கம் கொடுத்தார்.

              40  ஆசிரியர்களில் , ஆரம்ப நிலையில் இருப்போர், PPT தயாரிப்பதில், பயன்படுத்துவதில் சற்று அதிகம் அனுபவமுள்ளோர், நம்மால் மீத்திறன் எனக் குறிப்பிடும் அளவில் உள்ளோர் எனக் கலவையாக இருந்தனர்.ஆகவே  ஒவ்வொருவருக்கும் பல்வேறு நிலைகளில் சந்தேகம் வர, கருத்தாளர் பாக்யம் அவற்றைத் தீர்த்து வைத்தார். நமது  ஆசிரியர்களிலும் அதற்குத் தீர்வுகளைத் தர திறன் பெற்றவர் இருக்க, அவர்களும் மற்றவருக்கு உதவினர்.

               Mirror Image, PPt இல் video ஏற்றம் Recording சேர்த்தல் இதுபோன்ற சிலவற்றையும் கூறினார், ஆனால் அங்கு வந்திருந்த ஆசிரியர்களில் 75 சதவிகிதம் இதைத்தாண்டி திறன் பெற்றவராக  இருந்ததால் அடுத்த நிலைகளை எதிர்நோக்கி இருந்தனர் அவரது இலவச மென்பொருள் இணைப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளக் கூறினார் ..இடைஇடையே ஆசிர் அவர்களும் அவரோடு இணைந்து எங்களுக்கு வழிகாட்டினார்.

               டீ, மதிய உணவு என நேரம் போனதேத் தெரியாமல் அன்று மாலை பயிற்சி முடிவுக்கு 6.30 மணிக்கு வந்தது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் SIEMAT அறைகளிலேயே தங்கி இருந்ததால் 6.30 மணிக்குப் பிறகும் பயிற்சி தொடர்ந்தது. ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களை மீத்திறனாளிகளோடு குழுவாக அமர வைத்து ,தெரியாதவற்றை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வழிகாட்டி, ஒருங்கிணைத்தார் சித்ரா ஆசிரியர். Video எடுப்பது , Movie maker பயன்படுத்துவது அவற்றில் ஏற்படும் சந்தேகங்கள்,மேலும் அவரவர்க்கு மென்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் சந்தேகங்கள் தீர்ப்பது என இரவு 9.30 மணிவரை வகுப்பு நடந்தது... ஆகவே இந்தப் பயிற்சியின் முதல் நாள் இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது….




                           


                                    22.08.2014

                இரண்டாம் நாளின் எங்கள் பயிற்சி காலை 8 மணியிலிருந்தே தொடங்கியது, அவரவர் பயிற்சிக்  கூடத்தில் அமர்ந்து கணினியை இயக்கிக்  கொண்டிருந்தினர்…9.30 மணிக்கு ஆசிர் ஜூலியஸ் பேராசிரியர் Flash software பற்றிய விளக்கங்களைக் கொடுத்து ,பயிற்சியை ஆரம்பித்தார்.முதல் நாள் கருத்தாளராக இருந்த எட்வின் பாக்யராஜ் அவர்கள் மீண்டும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேட்குமாறு கூற .அனைவரும் Flash பற்றியே எதிர்பார்ப்போடு இருந்ததால் ஆசிர் வகுப்பெடுத்தார்.

                             வாய்ப்பே இல்லை..இப்படி ஒரு வகுப்பு எங்களுக்கு கிடைக்க…ஆம்..ஒரு தொடக்க நிலைப் பள்ளிக் கூடக் குழந்தைக்கு எப்படி ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொடுக்க அந்த வகுப்பு ஆசிரியர்கள் முயற்சிப்பார்களோ அது போல் அவர் ஒவ்வொரு விஷயமாக எங்களுக்கு அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்..அதற்குமுன் அனைவரது கணினியிலும் Macromedia flash software install செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்துகொண்டார்.

                          எழுத்துக்களைக் கசடறக் கற்றுக் கொடுத்தால்தானே வார்த்தைகளைப் படிக்க முடியும்? அதுபோல் எங்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலிருந்து Flash –all Tools, layers, scene, background, color change, Align, properties, pixel, stage , tween, graphic, creating motion tween, என எங்களுக்கு ஒவ்வொன்றாக அடுத்தடுத்து ,படிப்படியாகக் கற்றுக் கொடுத்தார்..சந்தேகம் என எத்தனை முறைக் கேட்டாலும் DEMO செய்து காட்டினார்..

                       இடையில் அவர் ஆய்விற்காக செய்து கொண்டிருக்கும் ஒரு Alphabets flash animation work பற்றிய விளக்கம் கொடுத்தார்..அதில் பயன்படுத்திய button system பற்றி நாளை சொல்வதாகக் கூறினார்.

                       செயல்பாட்டில் மெதுவாக இருக்கும் ஒரு சிலரை சிறுவயது குழந்தைகளைக் கூப்பிட்டு எப்படிச் சொல்வோமோ அப்படியே செய்யவைத்தார். எனது வகுப்பறையில் கணக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும்போது , என்னைப் பார்ப்பது போலவே  இருந்தது. அனைத்தும் அவர் முதலில் செய்ய, தொடர்ந்து எங்களையும் செய்ய வைத்தார் ஒரு ஆசிரியரின் வெற்றி அங்கேதான் இருக்கிறது..மாணவர்களான எங்களை செயல்பட வைத்துவிட்டார்….

                      அன்று முழுவதும் அவர் ஒன்று செய்ய நாங்கள் அடுத்து அதை செய்ய என நாள் போனதே தெரியவில்லை. ஒரு பந்து நகர்வது போல,உருளுவது போல,மரங்கள் அடர்ந்த காட்டில் மேகங்கள் நகர்வது போல,காகங்கள் பறந்து செல்வது போல இப்படி  சொல்லிக்கொண்டே போகலாம்….... அவர் செய்யும் போதே பல மாணவ  ஆசிரியர்கள் படகு நீரில் மிதப்பது போல, காட்டில் மரங்கள் ,வீடு என நாங்களும்  கூடவே செய்தோம்…                    

                    அன்று மாலை மைக்ரோ சாஃப்ட் (Micro soft-partnership learning programme State Manager) ஹரிஹரன் வந்து ,நமது 40 பேரடங்கிய குழுவை சந்தித்து , அதிலிருக்கும் Digital lessons, courses, software பற்றியும் பகிர்ந்து கொண்டார். பயிற்சி வகுப்புகள் பெயருக்கு முடிந்தாலும் இரவு 1.30 மணிவரை கருத்தரங்கு அறையில் Flash - e-content செய்தோம்..யாரும் எழுந்து போகவே இல்லை..

                    ஆசிர், மாலை வகுப்பு முடியும்போது நாளை  எனக்கு நீங்கள் எல்லோரும்  ஏதாவது செய்திருக்க  வேண்டும்  என்றார்..அதன் பொருட்டு என்றாலும் , அனைவருக்கும் ஆர்வம் வந்து விட்டதால் விடாமல் செய்தனர்.                               

                     குழுவாக, தனியாக…..என அவரவர் செய்ய ஆரம்பித்தி ருந்தோம்.  கணக்கு ஆணிமணிச் சட்டம் நேசமணி முயற்சிக்க, ஜான் குழு தமிழக மாவட்டங்களை button இல் செய்ய முயல , சங்கரநாராயணன் காற்றாலை செய்ய,விஜயகுமர் மின்சுற்று செய்ய , திலீப்  சூரியக் குடும்பக் கோள்களை சுற்ற வைக்க முயற்சிக்க,சீனுவாசன் கணக்கு வாய்பாடு ஏற்கனவே perfect ஆக செய்திருக்க,தேவிகா அணுக்கரு மூலக்கூறுகள் வேதியியல் பாடத்திற்கு செய்திருக்க , நானும் அஜயும் 10ஆம் வகுப்பு கணக்கு ,வட்டத்திற்குத் தொடுகோடுகள் வரைதல் கணக்கை முயற்சி செய்ய என ஒரு புறம்…..மற்றவர் செய்ததைப்  பார்க்க எனக்கு நேரமில்லை..                       

                      இப்படி இரண்டாம் நாள் இரவு 1.30 க்கு எங்கள் பயிற்சி முடிவுக்கு வந்தது.


                     

                         23.08.2014

                அடுத்து மூன்றாம் நாள் காலையும்  9 மணி அளவிலேயே அனைவரும்  கருத்தரங்க அறையில்  கூடி விட்டனர்..இன்று ஒரு அறிமுகம் அனைவரைப்பற்றியும் 9-10.30 வரை  நடந்தது.அறிமுகம் செய்து வைத்தவர் 40 பயிற்சியாளர்களில் ஒருவரான சித்ரா ஆசிரியர்.ஏற்கனவே  40 பேருக்கும் Google Drive வழியாக PPT slide share செய்திருந்தோம்.அதில் அவரவரைப் பற்றிய சுய அறிமுகம் தரச் சொல்லியிருந்ததால் 25 க்கும் மேற்பட்டவர் பதிவு செய்திருந்தனர்..ஒவ்வொருவரும் ஒரு துறையில் குழந்தைகளுக்காக தங்களை ஈடுபடுத்துவதில் சிறந்தவராக இருந்தனர்.

                 தொடர்ந்து நேற்றய அனைவரது flash work அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.சந்தேகங்கள் தீர்த்து வைத்தார்.மீண்டும் ஒருமுறை ஆரம்பத்திலிருந்து எங்களுக்கு செய்து காட்டி,எங்களையும்  செய்ய  வைத்தார். BUTTON System, அதற்கு அடுத்த லெவல் என்று  தொடர்ந்து DEMO செய்தார்.மேலும்  எனது சந்தேகம் கணக்கில் வரைவதற்கு பயன்படுத்தப்படும் GRID பற்றி விளக்கம் தந்தார்…

              Scene creation, multiple scenes usage இப்படி  நிறைய மீண்டும் செய்தோம்..NROER Registration அனைத்து பங்கேற்பாளருக்கும் கருணைதாஸ் ஆசிரியர் செய்தார்.இறுதியில்  அனைவரிடமும் Feed back வாங்கப்பட்டது. திரும்ப  SCERT இணை இயக்குனர் திருமதி உமா அவர்கள் ஆசிரியர்களது  கருத்துகளைக் கேட்க,அவர்களும் இந்த  பயிற்சி பற்றிய அவர்களது உணர்வுகளை கூறினர்.

               அன்பழகன் பேசும்போது,இதற்கான குழுக்கள்  ஒவ்வொரு  மாவட்டத்திலும், மாவட்ட  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழியாக  அமைக்கப்பட்டு ஆசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,அந்தக் குழுவில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்  இருக்கலாம் என ஒரு சிந்தனையை முன் வைத்தார்.மற்றவர் பேசும் போதும் இது மிக அருமையான பயிற்சியாக இருந்தது..தொடர்ந்து செயலாற்றுவோம் என்று கூறினர்.

              திரும்ப எப்படி தொடர்ந்து இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்று கலந்துரையாடி ஆசிர்  அவர்கள் நன்றி கூற,அஷோக் அவர்கள் வருகை சான்று ,போக்குவரத்துப் படிகள் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்க  3 நாள் பயிற்சி இனிதே  முடிவுக்கு வந்தது..ஒரு குடும்ப  விஷேஷத்திற்கு வந்தவர்களைப் போலத்தான்  அனைவரும் சொல்லிக்கொண்டு . போனார்களே தவிர..பயிற்சிக்கு வந்தவர்களைப்போல அல்ல..அனைவரது  மனதிலும்  திரும்ப பள்ளிகளுக்குச் சென்று e-content  உருவாக்கம் செய்வதிலேயே  இருந்தது….


தொகுப்பு

சு.உமாமகேஸ்வரி,

பட்ட்தாரி ஆசிரியர்(கணக்கு),

அரசு மேல்நிலைப் பள்ளி,

நல்லாம்பட்டி,


ஈரோடு மாவட்டம்






 Three Days at SIEMAT Seminar Hall-ICT Programm



கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல்      

               பயிற்சிப் பணிமனை

                              ( Educational Digital Resources workshop )


நாள்:18.09.2014--20.08.2014 (3 நாட்கள்)

இடம்: SIEMAT கருத்தரங்க அறை- DPI வளாகம்,சென்னை.

                       

                          இந்நாட்களில் கல்வி கற்றல்-கற்பித்தல் என்பது கரும்பலகைகளோடு  நின்றுவிடாமல்,  தொடுதிரை(Touch Board),Digital content, Video lessons ,Multimedia,  எனப் பல்வேறு பரிமாணங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

                       தமிழகத்தின் பள்ளிகளில்  பணிபுரியும் ஆசிரியர்களில்  பெரும்பகுதியினர், இந்தத் தொழில்நுட்பங்களைக் கற்பித்தலில் புகுத்தி வருகின்றனர்.அவர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் இருக்கும் கல்விசார் கணினி வளங்களைத் தொகுத்துப் பெற்றும் , பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்தி அவர்கள் புதிய முறையில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி மேலும் கல்விசார் கணினி வளங்களைத்  தயாரித்துப் பயன் பெறவும், நம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT)  கடந்த ஆகஸ்ட் மாதம் 3 நாள் பணிமனையை ஏற்படுத்தியிருந்தது.

                    அதன் தொடர் பணியாக செப்டம்பர் மாதம் 18,19, மற்றும் 20 ஆகிய  3 நாள்கள் கொண்ட பணிமனையை மீண்டும்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்  46 ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். தாங்கள்  தயார்  செய்திருந்த கற்றலுக்கான கணினி வளங்களை செழுமைப் படுத்தி  SCERT வசம் ஒப்படைப்பு செய்வதன் பொருட்டு வந்திருந்தனர். அதனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இங்கே….


18.09.2014

                     முதல் நாள் காலை 9.30 மணிக்கே அனைவரும்  SIEMAT கருத்தரங்க அறையில் குழுமியிருந்தனர். பயிற்சியாளர் திரு ஆசிர் ஜூலியஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று,இந்தப் பணிமனையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.கடந்த ஆகஸ்ட் மாதப்  பயிற்சிப் பட்டறைக்குப்  பிறகு  ஆசிரியர்கள் தயாரித்த e-content அனைத்தையும் சரி செய்து,சந்தேகங்கள் இருப்பின், அவற்றைக்  கேட்டு செழுமைப் படுத்திக்கொள்ள வழிகாட்டினார்.

                   மேலும் புதியதாக இம்முறை வந்தவர்களை அறிமுகப்படுத்திகொள்ளக் கூறி, ஒவ்வொருவரையும் அவர்களிடமிருந்து புதியதாக என்ன கொண்டு வந்துள்ளீர்கள்?எங்களுக்குக் கொடுங்கள் எனவும் கூறினார்.அதில் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிங்காரவேலு என்ற ஆசிரியர் அலைபேசி Android applications வழியாக தனது மாணவருக்கு வகுப்பறையில் வளங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியது புதுமையாக இருக்கின்றது என்றார் ஆசிர் அவர்கள்.

                        தொடர்ந்து, இம்மாதிரி படக்காட்சிகளாகப்  பாடப் பொருள்களை உருவாக்கத் துணை செய்வது  ”வரைவு  தயாரிப்பது ” (SCRIPT WRITING).அது பற்றிய 3 நாள் பணிமனையை சமீபத்தில் SCERT ஏற்பாடு செய்திருந்தது,அதன் பயிற்சியாளர்  திரு ரெஜி அவர்களை ஆசிர் அறிமுகம் செய்து வைத்தார்.இவர் கல்வித் தொழில்நுட்பத் தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையத்தில் (E-TV Studio), e-content- க் கான  குரல் ஒலியைப் பதிவு செய்து கொள்ள ஆசிரியர்களை வழிகாட்டி,அதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.

                       இருவரும்  இணைந்து பங்கேற்பாளர்களைக் குழுவாகப் பிரித்து ,எந்த தலைப்புகளில் அவர்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர் (அ) செய்து வந்துள்ளனர் எனப் பதிவு செய்ய  வழிகாட்டி, ஒவ்வொருவரையும் தாள்களில் பதிவு செய்துதரக்கூறி, அதற்கான அச்சிட்ட தாள்களை ஆசிர் வழங்க பங்கேற்பாளர்கள் அவரவர்  e-content தயாரிப்பு விவரங்களைப் பதிவு செய்தனர். e-content தயாரிப்புப் பணிகள் விருவிருப்பாகத்  தொடர்ந்தன.

                        தொடர்ந்து ஆசிர் எங்களோடு இருந்து  ஒவ்வொருவரின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர்களது தயாரிப்புகளை திரையில் ஓடவிட்டு திருத்தங்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவரவர் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.முதல் நாள் பணிமனை இரவு 8 மணி வரை அரங்கத்தில் நீடித்தது,அதற்குப் பிறகும் அவரவர் தங்களது அறைகளில் தொடர்ந்தனர்.


19.09.2014

        இன்று காலை ஆசிர் அவர்கள் முதல் பணிமனையின்போது கற்றுத் தந்த Flash Macromedia software ஐ மீண்டும் சுமார் ஒரு மணி நேரம் வகுப்பெடுத்தார்.ஏனெனில்,கடந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களைத் தவிர புதிய முகங்கள் சிலரும் இப்பயிற்சிக்கு வந்திருக்க எங்களுக்கு வலுவூட்டினார். SCERT இயக்குனர் ஐயா, பயிற்சியாளர்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளை கவனித்து, தொடர்ந்த Flash Macromedia வகுப்பையும் உடனமர்ந்து கவனித்தார்.

            தொடர்ந்து மேல்வகுப்புகளுக்கான மதிப்பீட்டு உத்திகளுக்குப் பயன்தரும் HOT POTATOES என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பலர் 12,10,9.ஆம் வகுப்புகளுக்கு அனைத்துப் பாடங்களுக்கும் வினாத் தொகுப்புகள் தயார் செய்திருக்க,அதன் பயன்பாடு பற்றிய ஒரு சிறு வகுப்பை பங்கேற்பாளரில் ஒருவரான ஆசிரியர் உமாமகேஸ்வரி வழங்கினார்.

           இரண்டாம் நாள் ஆசிரியர்கள் தயாரித்திருந்த கல்விசார் கணினி வளங்களை மேலாய்வு செய்வதன் பொருட்டு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலிருந்து பேராசிரியர்கள்  வந்திருந்து ஒவ்வொரு குழுவாக கருத்தரங்க அறையிலேயே பார்வையிட்டனர்.

            அது மட்டுமன்றி SCERT –இணை இயக்குனர் திருமதி உமா அவர்கள்,பேராசிரியர்கள் ஆசிர் ஜூலியஸ்,சங்கீதா இவர்களின் குழு அன்று முழுவதும் 75 க்கும் மேற்பட்ட e-content வளங்களை மேலாய்வு செய்து கொண்டிருக்க, அடுத்த நாள் இவற்றைப்  பார்வையிட நமது மாநில, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் திருமதி சபிதா அவர்கள் வருகை புரிய உள்ளார் என்ற செய்தி அனைத்துப்  பங்கேற்பாளர்களின் செயல்களையும் உற்சாகப்படுத்தி துரிதப்படுத்தியது.

          இடையில் பங்கேற்பாளர்களில் ஒருவராக வந்திருந்த ஈரோடு மாவட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனியின் பொம்மலாட்ட வகுப்பு மற்ற அனைவரையும் கவர்ந்தது.அவரின் நேரிடை வகுப்பு (Live Puppetry show) உடல் உறுப்புகள் பற்றி இரு பொம்மைகள் பேசிக் கொள்வது போலும்,பாரதியார் பாடலொன்றிற்கானதும் இருக்க அவர் ஒருவரே ஆண்,பெண் என இரு குரலிலும் பேசி பொம்மைகள் பேசுவது போல் வகுப்பெடுக்கக், கண்டு ரசித்த அனைவரும் குழந்தைகளாகிப்  போனார்கள்.

           இங்கு பத்திரிக்கை நிருபர்கள் வந்திருந்தனர்.அவர்களிடம் இந்தப் பணிமனை பற்றிய விளக்கங்கள்,ஆசிரியர்கள் செய்துள்ள Animation contents இவை பற்றி ஆசிரியர் சித்ரா எடுத்துக்கூற, நேரிடையாக ஆசிரியர்களைப் பேட்டி கண்டும்,அவர்களது தயாரிப்புகள் பற்றிப் பார்வையிட்டும் செய்திதொகுத்துக் கொண்டிருந்தார்கள்.

         அன்று இரவு 12 மணி வரை ஆசிரியர்கள் தாங்கள் செய்த அனைத்தையும் மற்றவருடன் பகிர்ந்து கொண்டும்,புதியன படைக்க சிந்தித்தும், தயாரிப்புப் பணிகளில் ஈடுபட இரண்டாம் நாள் பணிமனை முடிவுற்றது.


20.09.2014

                  இன்று காலை 9 மணிக்கு முன்னரே அனைவரும் ஆவலாக பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரை எதிபார்த்திருந்தனர். SCERT இயக்குனர் முனைவர் s.கண்ணப்பன் அவர்கள்,இணை இயக்குனர்கள் திருமதி ஸ்ரீதேவி,திருமதி உமா அனைவரும் காலை முதல் ஆசிரியரது கல்விசார் கணினி வளங்களைப் பார்வையிட்டு மேலாய்வு செய்து கொண்டிருக்க,வேலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பஷீர் அவர்கள்,சேலம் மாவட்ட ஆசிரியப் பயிற்றுனர் சாந்தி,மஞ்சுளா மற்றும் சிலரும் மேலாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

               நமது பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் திருமதி சபிதா அவர்கள் எங்களோடு இணைய , ஆசிரியர்களின் கல்விசார் கணினி வளங்கள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து வந்தார்.பொறுமையாக அவை பற்றிய விளக்கங்கள் கேட்டறிந்து, ஒவ்வொன்றைத் தயார் செய்தவர் யார் எனக் கேட்டு தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

§      அறிவியல் பாடத்திற்கான ஜீரண மண்டலம் ,

§      விதை முளைத்தல்(வேலூர் DIET)

§      நெம்புகோல் வகைகள்(ஆசிரியர் பெர்ஜின்),

§      மீன்களின் இயக்கம்(ஆசிரியர் ஞானப்பிரகாசம்),

§      மாணவிகளின் ஆங்கில வகுப்பு                    (ஆசிரியர் செல்வி மணியம்மை),

§      உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு                  (ஆசிரியர் ஜெகனாதன்),

§      எரிமலை,English Preposition (ஆசிரியர் விஜயகுமார்),

§      புகைப்பிடித்தலின் தீமை,குப்பைபோடுதல் விழிப்புணர்வு    (ஆசிரியர் தேவிகா),

§      விலங்குகள்-பறவைகள் ஒலியறிதல்,                English-Rhyme, விண்வெளிவிந்தைகள்,Prepositions (ஆசிரியர் ஜான் மேரி இம்மானுவேல்)

§       ஆங்கில எழுத்துக்கள் (A-Z)எழுதும் முறை (உதவி பேராசிரியர்  ஆசிர் ஜூலியஸ்)என

                            

                  வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து கற்றலை எளிமைப் படுத்த நமது ஆசிரியர்கள் PPT, Video, Flash animation மற்றும் பல  வழிகளில் நமது மாணவர்களுக்காக செய்திருந்த பல வளங்களில்  மேற்கண்டவைகளை மட்டும் திரையில் கண்டார் நமது கல்விச் செயலர்.  பள்ளிக் கல்வி இயக்குனர் திரு ராமேஸ்வர முருகன்,இணை இயக்குனர்கள் திரு செல்வராசு,திரு பழனிசாமி,திருமதி லதா ஆகியோரும் உடனிருந்தனர்.

                 தொடர்ந்து இணை இயக்குனர் திருமதி ஸ்ரீதேவி எங்களோடு இருந்து மற்றும் சில கணினி வளங்களை மேலாய்வு செய்தார்.இந்த மூன்றாம் நாளில் அரசு பள்ளிகளிலிருந்து சில மாணவர்களும் வந்து தங்கள் HOT POTATOES வினாத் தொகுப்புகளை இயக்குனர் அவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தனர்.

                மீண்டும் மாலை கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை இயக்குனர் வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக் கூறி அமர, செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….

                “ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக இருந்தது. ஆசிரியர்களை  உற்சாகப்படுத்துவதாகவும், செயலில் இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.

                  பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது  கண்டு எனக்கு  வருத்தமாக  இருந்தது. ஆகவே மாண்புமிகு முதல்வர்  அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதி பெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாக அனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் இணைப்பதற்கான (Integration of School Educational Departments) முயற்சி இது. முதல் முயற்சியாக நம் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்கள், குழந்தைகள்,பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே நம் (ICT Award) விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும் கொண்டு அடுத்த ECS ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  

ECS-இன் தேவை

                  ஒரு  சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால் புரியும்..எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாக இல்லை.சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனே கிரகித்துக்கொள்வார்கள். அதை அவர்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்கள்.

                  பாடப் புத்தகங்களைத் தாண்டி, நம்மிடம் கல்வித்தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்வி செயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT) செலவின்றி கிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் நமக்கு ஒரு நிலையம் உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.PART –II Scheme இல் இதற்கான நிதியுதவி ஒதுக்கி,  முதலில் SCERT கடிதம் அனுப்பியது.

                  பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால்  நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச் செய்யமுடியாது. உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.  பாடநூல்களை மிகச் சரியாக குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால் மட்டும்தான் முடியும்.

                 நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) மதிப்பீடு செய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட வரைவு (Syllabus) சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் விதத்திலும்  மதிப்பீடு செய்யப்படும்.

                இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம், பாடப்பொருள்  ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும். தர்க்கரீதியாக சரியாக(Logic) இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம் உங்கள் மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல வளமாக இருக்கும்.

               கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு ஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம் முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,அந்த வாய்ப்பை இந்தப் பயிற்சி தரும், பயிற்சி என்றுகூட சொல்லக்கூடாது, ORIENTATION எனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள் வருவார்கள்.அவர்கள் செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அதிசயமாக இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்ம டீச்சர்ஸ்.

                 எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாக உயர் வகுப்புகளுக்கான E-Content  தயார் செய்ய வேண்டும் . நிறைய DIETs இருக்கு.அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3 மாதங்களுக்குள், இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள் வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”….

                 

                        இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,எவ்வளவு நம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார். அவ்வளவு சந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்… நம்மை வாழ்த்திவிட்டு விடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.

                      தொடர்ந்து ரெஜி அவர்கள் நாம் தயாரிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய ஒரு அட்டவணையைப் பற்றி வகுப்பெடுத்தார்.திட்டமிட்டு,வளங்களைத் திரட்டி,அதன் பிறகு வரைவு தயாரித்து, இறுதியில் கருத்துப்பிழைகள், மொழி, இலக்கணப் பிழைகள் இவற்றைப் பார்த்து பிறகுதான் இறுதி வடிவத்திற்கு வரவேண்டும்,பயிற்சி தேவை..இதன்படி உங்கள் வளங்களைத் தயார் செய்யுங்கள் என்றார்,மிகப் பயனுள்ளதாக இருந்தது.

                      இதையே வழிமொழிந்து,இயக்குனர் அவர்களும் மீண்டும் எங்களோடு இதன் தொடர் பணியாக நாம் செய்ய வேண்டுவனவற்றைப் பற்றிக் கூறினார்.வரும் மாதத்திற்குள் ஒரு Final Touch க்கு வந்துவிடவேண்டும்,அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் ஆசிர்,ரெஜி ஆகியோரை தொடர்பு கொண்டு Studio வில் குரல் பதிவு செய்து முடியுங்கள் என்றார்.

                 அதேபோல் 3 நிமிடங்கள் கொண்ட CONCEPT நிறைய செய்யுங்கள் என்றார்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும்தான் ஒவ்வொரு கிராமக் குழந்தைக்கும் கொண்டு சேர்க்கும் உழைப்பாக இருக்கும் என்றார்,அதன் வழியே தமிழகக்கல்வித் துறையின் பெருமையை உலக அரங்கில் பெருமைப்படுத்தலாம் எனவும் கூறினார்.

               இறுதியாக, இணை இயக்குனர் ஸ்ரீதேவி அவர்கள் எங்கள் அனைவரிடமும் நீங்கள் தயாரித்த எதுவும் வீணில்லை,ஒலி மாற்றம் தேவை என்றால் இங்கு செய்து கொள்ளலாம், எந்த தேதியில் OUTPUT கிடைக்கும்,அக்டோபர் 10 இறுதி என்றும் ஆசிர்


அவர்களும் கூறிவிட,ஆரம்பத்தில் இருந்தே பயிற்சியின் வருகை,போக்குவரத்து படிகளுக்கான அனைத்து வேலைகளையும் திரு அஷோக் அவர்கள் கவனிக்க,இறுதியில் வருகை சான்றுகள் தரப்பட்டு ,அனைத்து ஆசிரியர்களும் பெரும் பொறுப்புகளில் தங்கள் நினைவுகளை இணைத்து மகிழ்வுடன் சென்றனர்……..விரைவில் நமது கல்வியில் புதிய பரிமாணம் ஜொலிக்கும்…எதிர்பார்ப்போம்.






தொகுப்பு

சு.உமாமகேஸ்வரி,

பட்டதாரி ஆசிரியர்(கணக்கு),

அரசு மேல்நிலைப் பள்ளி,

நல்லாம்பட்டி,


ஈரோடு மாவட்டம்


   

           கணினி வழிக் கற்பித்தலும் நவீன தொழில்நுட்பமும் –                    

                           மாநிலக் கருத்தரங்கு-15.5.2014


                 மேற்கண்ட தலைப்பு கொண்ட இந்த ஒரு நாள் கருத்தரங்கு மிகக் குறுகிய காலத்தில் திடீரென மிக பிரமாண்டத்தினைத் தொட்டது எனலாம்.ஆம் அதற்கானத் தடம் அமைத்துக் கொடுத்தவர் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்கள். அவரது வழிகாட்டுதலின்படி ,  அந்த ஒரு நாளின் நிகழ்வுகள் விருதுநகர் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படுமளவிற்கு இருந்தது என்றால் அது மிகையாகாது. இதோ அன்றையப் பொழுதின் நிகழ்வுகளை உங்களோடு பகிர்கிறேன்.

                   பள்ளிக் கல்வி நவீனமயமாதலின் ஒரு பரிணாமம் தான் கணினி வழிக் கற்றல்- கற்பித்தல் எனலாம்.

                            ”கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

             மாடல்ல மற்ற யவை”  - என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, குற்றமில்லாக் கல்வியை குழந்தைகளுக்குத் தரும் நாம், இன்று கணினியோடு இணைந்தும் ,சமூக அக்கறையோடும் பல்வேறு கூறுகளில் அவர்களைத் திறம்பட செயல்படவும் கல்வி வழிவகுக்கிறது. 

      தற்காலத் தேவையான‘கணினிவழிக்கற்பித்தலை’  ஆசிரியர்களுக்கும்,தலைமையாசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்த விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்,எடுத்த முயற்சியால்   .தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த,  கணினி வழிக் கற்பித்தலில் சிறந்த  மற்றும் சமூக அக்கறையோடு குழந்தைகளை அணுகும்  11 ஆசிரியர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர்.இவர்களுடன் விருதுநகர் மாவட்டத்தின், சிறந்த   


கணினிச்செயல்பாடுகளில் ஈடுபடும் விஸ்வநத்தம் உயர்நிலைப்பள்ளி 


ஆசிரியரான கருணைதாஸும் ஒருவர்.

       காலை 9.30 மணிக்கு, சரியாக நிகழ்வு ஆரம்பமானது.வரவேற்புரையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தர, அரங்கு நிறைந்திருந்தது.400க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளித்  தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தைச் சார்ந்தவர்கள் உரையாற்ற, தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பள்ளிகளுக்கான பல்வேறு செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.மாணவர்கள் வேலைவாய்ப்பினைப்பெற அவரது உரை தலைமையாசிரியர்களுக்கு உதவியாக இருந்தது.தொடர்ந்து 11 கருத்தாளர்களான ஆசிரியர்களுக்கும்  நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

      எங்கள் குழுவின் வழிகாட்டியாய் சித்ரா டீச்சர்  அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து, பகிர்தலைத் தொடங்கி வைத்தார்.

      முதலில் கருப்பையன் தலைமையாசிரியர், தனது பள்ளியைச் சமூகப் பங்களிப்போடு எங்ஙனம் மேம்படுத்தி வருகிறார் என்பதை அனைவரும் ரசிக்கும்படியும், ஒரு ஆசிரியரின் பணி கற்பித்தலோடு நின்றுவிடுவதில்லை என்ற கருத்து ஆணித்தரமாக அனைவரது மனதில் பதியும்படியும் பகிர்ந்து கொண்டார். ”பணி ஏற்கும் போது ஆசிரியர் அமர்வதற்கு ஒரு நாற்காலி கூட இல்லாத பள்ளியின் வகுப்பறைகளை இன்று நவீனமயமாக்கி, கணினி வசதி, தொடுதிரை வசதி என மேம்படுத்தி, பள்ளிச் சூழலை மாற்றி மறுமலர்ச்சியை அந்த கிராம மக்களிடம் கொண்டு வர, தான் மேற்கொண்ட முயற்சிகளைத் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் எடுத்துரைத்து, அவர்களது பள்ளிகளிலும் இது போன்று செயல்திட்டங்களை செயலாற்ற ஆர்வமூட்டி அமர்ந்தார். அரங்கமே சந்தோஷப்பட்டது, இப்படியும் ஆசிரியர்களா?!!!என்று.... கணிசமாக நேரம் 12 ஐத் தொட்டது. இன்னும் 10 ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர வேண்டும் அல்லவா?

      இரண்டாவதாக ஐயப்பன் ஆசிரியர் ஆரம்பப்பள்ளியில்ஆங்கிலம்???!!!என்ற தலைப்பில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஒரு மொழியை  எவ்வாறு  கற்பிக்க வேண்டும்? என்று ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெறுமளவிற்கு நடைமுறையில் பரிசோதித்து தான் செல்லும் பள்ளிகளுக்கெல்லாம் அது ஒன்றாம் வகுப்பாக இருந்தாலும் சரி 5ஆம் வகுப்பாக இருந்தாலும் சரி அச்சமின்றி ஆங்கில மொழியை அசால்ட்டாகப் பேசிப் படிக்கப் பயிற்றுவித்து வரும் இவர் அதன் வெற்றியை அரங்கத்தின் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்தது என்ன தெரியுமா?மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் அவரிடம் ஆச்சர்யமாகக்  கேட்டுவியந்தனர்.தங்களது பள்ளிக் குழந்தைகளுக்கும்  ஐடியாக்களைக்கேட்டு,அலைபேசிஎண்ணையும் விடாமல்வாங்கினர்.

முதன்மைக் கல்வி அலுவலரின் எண்ணம் ஈடேறத் துவங்கி விட்டது.தொடர்ந்து 30 நிமிட உணவு இடைவேளை விரைந்து செயல்பட ஆங்காங்கே ஏற்பாடுகளை செய்திருந்தார் ஒருங்கிணைப்பாளார் கருணைதாஸ்.

மீண்டும் 2 மணிக்கு அரங்கம் நிறைந்தது.ஆசிரியர் திலிப் ஆங்கிலப் பட்டதாரியாக இருந்தாலும் கணினி மீது காதல்... ஆதலால் தேசிய விருது,ICT ACT Award(Chennai), PEARSON award(Delhi) , NIIT Tech Savvy Guru Award (National Level),என வரிசையாக விருதுகளைப் பெற்றிருக்கிறார்.NROER இல் Curriclam Reviewer, இப்படி அடுத்தடுத்த முன்னேற்றப் படிகள்.முக்கியமாக நமது 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் ஆசிரியர் ,4 மற்றும் 5 ஆம் வகுப்புகளின் சமூக அறிவியல் பாடநூல் Page DESIGNER…. இப்படி நிறைய்ய்ய்ய்ய...… தனது தொடர்ச்சியான முயற்சியால் தனது பள்ளி, ஊர் அருகாமைப் பள்ளி மாணவர்களுக்கு இவரது வீட்டிலேயே கணினி வழிக்கற்பித்தல் RICE(Rural Information Center for Empowerment) என்ற ஒரு அமைப்பினைத் துவங்கி.... விடாது குழந்தைகளுக்குக்  கணினி வகுப்புகள், பள்ளிகளில் பயன்பாடு, மின்னஞ்சல்,blog மற்றும் எல்லா நவீன முறைகளையும் பின்பற்றி  மாணவரது வகுப்பறைக் கற்பித்தல் மேம்பாடு....... இப்படிச் சொல்லிக் கொண்டேப்  போகலாம். அவரின் இன்றைய தலைப்பு – கணினியில் இலவச மென்பொருள், பள்ளிகளில் இவற்றை மாணவர்களுக்கு உதவும் வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் எனப் பகிர்ந்து கொண்டார்.பங்கேற்பாளர்களை மாணாவர்களாகவேக்  கருதி ஆயத்தப்படுத்துவதற்கு செயல்பாடுகள் கொடுத்து தனது வகுப்பினை கலகலப்பாக்கினார்.

      தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா ஆசிரியை ஆங்கிலத்தில் ஆர்வம் ஏற்படுத்த புதிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் தனது வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இசைநயத்துடன் ,மனப்பாடப் பாடல்களை  எவ்வாறு கற்பிப்பது  என எளிமையாக விளக்கினார்.

      அடுத்து ஆசிரியர் பெர்ஜின் சாயல்குடியில் இயற்பியல் ஆசிரியராக இருந்தாலும், ஆசிரியர்களுக்கு பயிற்றுநராக இருந்து கணினியைப் பரவலாக ஆசிரியர் சமூகத்தில் பயன்படுத்த வழிகாட்டி இருக்கிறார். இவரது  பணிகள் ஏட்டில் அடங்காது. கணினியில்  அவ்வளவு கற்பித்தல் புதுமைகள் செய்து மற்றவரோடு பகிர்ந்து கொண்டு கற்றலை மேம்படுத்தி வருகிறார். இவர் கணினி வழிக் கற்பித்தலில் முன்னோடி எனலாம். தேசிய விருது பெற்றிருக்கும் இவர் பகிர்தல் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார். தலைமையாசிரியர்கள் அரங்கத்தில் தங்களை ஒப்படைத்து விட்டு நிகழ்வுப் பகிர்தல்களை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.அனைத்து நிகழ்வுகளும் டிஜிட்டல் காமிராக்களிலும், அலைபேசிகளிலும் பதிவாகின என்பதும் கவனிக்கப் படவேண்டும். இடையிடையே தேநீர் பருகுவதும் நடந்தது.ஆனால் வகுப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன .

தொடர்ந்து குருமூர்த்தி திருச்சி மாவட்டம் இவரை அடையாளம் காட்டுவது, எதனால் என்றால் , ஒட்டு மொத்தத்  தொடக்க வகுப்புகளின்  அனைத்துப்  பாடங்களுக்கும் கணினியில் படமாக்கி, youtube-லிருந்து காட்சிகளாகப் பதிவிறக்கம் செய்து ஒலி கொடுத்து பாடங்களாக்கி குறுந்தகடுகளாக மாற்றி மாணவர்களுக்கு கற்பிக்கிறார். நம்ப முடிகிறதா உங்களால்.ஆனால் உண்மையாக செய்கிறார்.விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இவரைப் பாராட்டி இந்தப் பணிக்காக கணினியைப்  பரிசளித்திருக்கிறார்.எத்தனை அருமையான ஆசிரியர்கள்?!!!!! அதனினும் உயர்ந்த அதிகாரி….

      அடுத்து களமிறங்கியவர் அன்பழகன் ஆசிரியர் உத்திரமேரூர் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இவரது கற்பித்தல் பணி செயல்பாடுகளைக் கூறுவதென்றால்  பக்கங்கள் போதாது..... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஆகையால் ஒன்றே ஒன்று கூறுகிறேன்.அகில உலக அளவில் ஜப்பான் நாட்டில் அறிவியல்-கணிதம் கற்பித்தல் ஆசிரியர்களுக்கான 45 நாட்கள் பயிற்சி நடைபெற்றது.அதில் கலந்து கொள்ள 12 உலகளாவிய ஆசிரியர்களில் நமது இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆசிரியர்,தமிழகத்தைச் சார்ந்த இவரே. எனில் இவரின் திறன்,ஆற்றல், கற்பித்தல் பணி பற்றி நான் கூற வேண்டிய அவசியமில்லை. இவர் தனது ஜப்பான் அனுபவத்தை அந்நாட்டு அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு கணினி வழி அறிவியல் கற்பித்தலை, தான் மேற்கொண்ட அனுபவங்களை காட்சிப் படங்களோடு பகிர்ந்து கொண்டார். இப்போது  அரங்கம் ஸ்தம்பித்தது.மேலும் Google+ மூலம் எளிமையாகத் தொடர்பு கொள்வது எப்படி எனவும் விளக்கிக் கூறினார்.

      அடுத்ததாக நீலகிரி மாவட்ட தேனாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தர்மராஜ்.பார்ப்பதற்கு சிறு பிள்ளையைப் போலிருந்தாலும் அவர் செய்து வரும் காரியங்கள் அனைத்தும் மிக உயர்ந்தவை. மலைவாழ் மக்களின் குழந்தைகள் நூற்றுக் கணக்கான மாணவர்கள் படிப்பதற்கு உதவி வருகிறார் இவரும் இவரது நண்பர்களும்.தனது பள்ளிக் குழந்தைகளை இயல்பான சூழலில் அது ஓவியமோ, பேச்சோ, எழுத்தோ தைரியம் தந்து ஊக்குவித்து வரும் இவர் பள்ளியை வண்ண உருவங்களால் அழகிய நிலையில் மாணவர் விரும்பும் விதத்தில் மாற்றியமைத்துள்ளனர். இவர் ‘கல்வியில் வரைபடத்  தலைப்பினைப்’ பகிர்ந்து கொண்டார்.

      அடுத்ததாக இந்தக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான கருணைதாஸ் ஆசிரியர்.PEARSON NDTV AWARD என்னும் தேசிய விருது பெற்றவர்.தொடர்ந்து மூன்று முறை INTEL AWARD மற்றும் MICROSOFT AWARD ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.தனது தலைப்பான “இணையம் வழியாக வகுப்பறைகளை இணைத்தல்” பற்றி விளக்கமளிக்கிறார்.உண்மையாகவே மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி திரு ஹரிகரன் அரங்கத்தின் பங்கேற்பாளரோடு இணையம் வழியாக நேரிடையாகப் பேசி அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.அரங்கத்தில் உள்ள அனைவரும் கண்டு வியப்புற்றனர். கருணைதாஸ், அன்பழகன், ரேணுகா இவர்கள் அனைவரும் இந்த வருட ICT  விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் எனில் அவர்களின் திறனை நீங்களே மதிப்பிடலாம். இந்த வருட ICTACT-2014  விருதினை அரசுப்பள்ளியினைச் சேர்ந்த நமது கருணைதாசும், திலீப்பும் பெற்றுள்ளனர்.

      தொடர்ந்து சித்ரா டீச்சர் இவர் இடையிடையே தனது பகிர்தலை சுருக்கிக் கொண்டார்.நேரம் போதாமையால் இவரின் தலைப்பு கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்.இவரைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.அந்த அளவிற்கு கற்பித்தல் பணியினை அர்ப்பணிப்பாகச்,அறப்பணியாகச் செய்து வருகிறார்.பாடநூல் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.மத்திய அரசின் தேசிய விருது பெற்றவர். MICROSOFT AWARD நிறுவன விருதிற்காக வாஷிங்டன் சென்று வந்தவர்.சிறந்த ஆசிரியர்க்ளை ஒன்றிணைக்கவும் அவர்களது கற்பித்தல் செயல்பாடுகளைப் பதிவு செய்யவும் ஆசிரியர்களின் முழு விவரங்களைப் பதிவு செய்து வருகிறார்.பல்வேறு நிலைகளில் கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவரது மாணவர்களே கணினியில் கைதேர்ந்தவர்கள்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார் இவரது மாணவர் அருண்.கணினியில் திறம்பட செயல்பட்டதற்காக………. ஆகையால் இவரும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

      இறுதியாக நான்  உமாமகேஸ்வரி   எளிய முறையில் கணக்கு கற்பித்தல் என்ற தலைப்பில் கணினி வழிக் கற்பித்தலைப்  பகிர்ந்து கொண்டேன். வகுப்பறைக்குள் மாணவர்களை நம் வசப்படுத்துவது எளிது, எனவும், கணக்கு பற்றிய எனது மாணவர்களது பார்வை எங்களது நல்லுறவால் மாறி கணக்கை எளிதாக கற்றுக் கொள்ள விரும்புகின்றனர் எனவும் பகிர்ந்தேன். எனக்கும் அவர்களுக்கும் உள்ள வகுப்பறைக் கற்பித்தல் அனுபவங்களை இணையத்தில் blog இல் தொடர்ந்து எழுதுகிறேன். கணக்குப் பாடத்தினை Autocollage  மென்பொருளைப் பயன்படுத்தி எனது மாணவர்களை கற்றுக் கொள்ள பயிற்சி அளித்தேன். நானும் சித்ரா டீச்சருடன் சேர்ந்து பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் ஆசிரியர் எனது முக்கிய அணுகுமுறை மாணவரை வகுப்பறையை விட்டு வெளிஉலகத்தோடு தொடர்புபடுத்தி  தன்னம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துதல். பல்வேறு நிலைகளில் மாவட்ட, மாநில போட்டிகளில் அவர்களைப் பங்கெடுக்கத் தூண்டுவது, வழிகாட்டி இறுதி வரை உடனிருந்தால் எனது மாணவர்கள் வகுப்பறைகளைத் தாண்டி அனுபவங்களைப் பெற்று வெற்றியாளர்களாக இருக்கின்றனர். ஆகையால் தலைமையாசிரியர்களிடம் என்னைப் போன்ற ஆசிரியர்கள் உங்கள் பள்ளியில் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.அவர்களுக்கான வழிகளை அடைக்காமல் வழி காட்டுங்கள் என்று பகிர்ந்து கொண்டேன்.இறுதியில் மாவட்டக்  கல்வி அலுவலர் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

      இவைதான் அன்றைய ஒரு நாள் அரங்கின் நிகழ்வுகள் – பகிர்வுகள் 400 தலைமை ஆசிரியர்களின் வழியாக 4 ஆயிரம் ஆசிரியர்களின் வழியாக 4 இலட்சம் மாணவர்களுக்கு இவை பரவும்.இது நல்ல ஆரம்பம்.விருதுநகர் கல்வியில் மேலும் விருத்தியடையும்.எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கும் புத்துணர்வு. நாங்கள் அனைவரும் மனதார நன்றி கூறினோம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்களுக்கு மற்றும் சிறப்பாக ஒருங்கிணைத்த கருணைதாஸ் ஆசிரியருக்கும் நன்றி…


 தொகுப்பு

எஸ் .உமா மகேஸ்வரி, ப.ஆ.(க)

அரசு மேல்நிலைப்பள்ளி,

 நல்லாம்பட்டி,


ஈரோடு மாவட்டம்.


                SUCCESS=DCP*2 …!!!!!        உல்லாஸ் – போலாரிஸ் - மாணவர்கள்-நாங்கள்

நாள் :30.08.2014

இடம்: சென்னை-ஆழ்வார்ப்பேட்டை- The Music Academy

                      நமது வாழ்வில்   ஒவ்வொருநாளும் ஒரு எதிபார்ப்பு இருக்கும்.எல்லோருமே நேர்மறை சிந்தனைகளை வரவேற்பவர்களாகவே இருக்கிறோம்..அதற்கான தளம் கிடைத்தால் அவர் நேர்மறை சிந்தனை யாளர். நேற்மறை சிந்தனைகளை மட்டுமே கேட்கும்.  ஒரு நிகழ்வு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இசை அரங்கத்தில் நடைபெற்றது .

                       உல்லாஸ் ட்ரஸ்ட், மாணவர்களுக்கான பரிசு , கல்வி உதவித் தொகை,  பள்ளிகளுக்கான விருது  மற்றும் சிறந்த தலைமை   ஆசிரியருக்கான விருது வழங்கும் தனது 17ஆம் ஆண்டு விழாவாக போலாரிஸ் நிறுவனத்துடன்  இணைந்து நடத்தியது.

                       உல்லாஸ் ட்ரஸ்டின் தன்னார்வத்தொண்டு தோழி சுகன்யா, சித்ரா டீச்சரையும் என்னையும் அழைத்திருந்தார். காலை 9 மணிக்கு முன்னதாகவே விழா தொடங்கியது.விழா  நிகழ்ச்சிகள் அனைத்தும்  மாணவர்களின்  தன்னம்பிக்கையை வலூவூட்டுவதாகவே  அமைந்திருந்தது.அனைத்து  பங்கேற்பாளர்களுக்கும் Ullas Trust–இன்  My  Diary of Dreams  வழங்கப்பட்டது .

 திரு  சேகர்  (IPS) DGP (Vigilence), Tamilnadu Generation  &Corporation Ltd,

 Dr. வி.கிருஷ்ணமூர்த்தி CEO . Meenakshi Multispeciality Hospital  

 திரு.பாஸ்கி-Actor  cum Standup Comedian

 திரு .தாமு..-FilmActor & MimicryChampion, The MasterTrainer LeadIndia 2020      

                  A National   Movement  


                                  இவர்கள்  அனைவரும் அன்றைய  சிறப்பு விருந்தினர்கள்..இவர்கள் தவிர 950 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரி யர்கள்,தன்னார்வளர்கள் என  அரங்கம்  நிரம்பி  வழிந்தது. முறையான  விழாத் துவக்கத்தோடு முதலில் பாஸ்கி  எங்கள்  முன் நின்றார்.

திரு.பாஸ்கி-(Actor  cum Standup Comedian)

                                  அரை மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினார்… பேசினார்.. பேசிக் கொண்டே இருந்தார்.அனைவரும் சிரித்து சிரித்துப்  புத்துணர்வு  பெற்றனர். அவர், சிரிக்கவைத்து  சிந்திக்கவும் வைத்துவிட்டார்.யார் நம்மை  இகழ்ந்தாலும்  நமது தன்னம்பிக்கையை விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தால்  வாழ்வில் வெற்றி பெறலாம்..அதற்கு நானே  உதாரணம் என, தனது வாழ்வின் நிகழ்வுகளை எங்களோடுப் பகிர்ந்தார்.நேற்மறை  சிந்தனைகளின் ஊற்றாக இருந்தது அவரின் பேச்சு.

 திரு சேகர்  ((IPS) DGP (Vigilence), Tamilnadu Generation  &Corporation Ltd)

               அடுத்ததாக DGP சேகர் அவர்கள் சீருடை மிடுக்குடன் மேடை ஏறினார். எத்தனைப் பெருமிதம் ! எத்தனையோ  மாணவர்களின் கனவு விதைகளை துளிர்க்கச் செய்தது அவரின் தோற்றம்,பேசிய விதம் மற்றும் கருத்துக்கள். ஆம், அற்புதமான  ஒரு உரை நிகழ்த்தி எங்கள் அனைவரை யும் சிந்திக்க வைத்தார் .

                      வரலாற்று நிகழ்வுகள்,நெப்போலியன்,பால்பன்,திலகர் என அனைவரது வாழ்க்கைப் பதிவுகளையும் குறிப்புகளாகக் கூறினார். மேலும் சுதந்திரப்  போராட்ட வீரர்கள் தேசப் பற்றுடன் எவ்வாறு வாழ்ந் தனர் எனவும்  இளைய தலைமுறையினர் தம்மிடையே தேசப் பற்றினை வளர்த்துக்  கொண்டு வாழ வேண்டும் எனவும் உற்சாகப்படுத்தி, தேனீக் களின் உழைப்பையும் மாணவரது வாழ்க்கைப் பயணத்திற்கு  உதாரண மாகக்  காட்டி, வழிநடத்தி  அமர்ந்தார்.

   

Dr. வி.கிருஷ்ணமூர்த்தி (CEO . Meenakshi Multispeciality Hospital )

                         எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்…….என்ற திருக்குறளைக் கூறி ஆரம்பித்து தனது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறினார். எவ்வாறு ஆசிரியராலும்,பெற்றோராலும் மாணவரது வாழ்க்கை செதுக்கப்படுகிறது. தந்தை சொல் மிக்க  மந்திரமில்லை என்ற கருத்து தனது வாழ்விற்கு எவ்வாறு பொருந்தியது என உதாரணங்களொடு விளக்கினார்.

                      நாம்  கற்கும் ஒவ்வொன்றையும் வாழ்வில் கடை பிடிக்க  வேண்டும்,கற்றபின் நிற்க அதற்குத் தக……என்ற வள்ளுவனின் வழி நின்றால் நாம் அனைவரும் நல்லுலகம் படைக்கலாம் என்றார்.அடுத்தவரின் உழைப்பை மதிக்க வேண்டும் ,மற்றவருக்குப் பயனுள்ள  வாழ்வை வாழ வேண்டும் எனக் கூறி மனிதம் வளர மாணவரை  மட்டுமல்ல அனைவரையும் சிந்திக்க  வைத்து  அமர்ந்தார்.

திரு .தாமு..-(FilmActor & MimicryChampion, The MasterTrainer LeadIndia 2020)                      A National   Movement)  

                     தாமு அவர்களின் ஆரம்பமே மிக அருமை. ஒரு மனிதர் 4000 முறை  கைத்தட்டினால்  புற்று நோய் கூட வராது எனக் கூறி, அதோடுவிட்டு விடாமல், மாணவர் முதல்  அரங்கம் முழுதும் இருந்த ஆசிரியர்,மற்றவர் என ஒருவர் விடாமல் கைகளைத் தட்டிக் கொண்டே இருக்க வைத்தார்.ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவருக்கு  அம்மா,அப்பா,குரு,தெய்வம்,மாணவர்கள் என அனைவரையும் கைத்தட்டல் காரண கர்த்தாக்களாக்கினார்

                           அவரவர்  தாயை  எவரும் வாழ்வில் விட்டு  விடாது காக்க வேண்டும்,குருவாக இருக்கும் ஆசிரியர்களை மறக்கக் கூடாது எனச் சொல்லி எல்லோரையும்  உணர்ச்சி பூர்வமாக சிந்திக்க  வைத்தார்.மாணவர்களால் அனைத்தும்  முடியும்…என்று கூறி உற்சாகப்  படுத்தினார்.அரங்கத்தினர்  அனைவரையும்  MIMICRI (Train sound) செய்ய  வைத்து அசத்தினார்.

                         குடும்பம்-பெற்றோர்- பள்ளி-ஆசிரியர்கள்-சமூகம்-ஒழுக்கம்-மனிதப்பண்புகள் இவையனைத்தையும் ஒன்றிணைத்துப் பேசி,அனைவரது உள்ளங்களையும் சிந்திக்க வைத்தார்.

                         அனைத்து  ஆசிரியர்களையும்  மேடைக்கு  அழைத்து, அரங்கத்தில் இருப்போரையும் மாணவரையும் அவரவர்  ஆசிரியர்களுக்காக  சில நிமிடங்கள்  இறைவனைப் ப்ரார்த்திக்க வைத்து ஆசிரியர்களைப்  பெருமிதப்படுத்தினார்.அனைத்து  ஆசிரியர்களும் மனம் நெகிழ்ந்த  தருணம் அது…….

பரிசளிப்பும் பாராட்டும்

                      ஒவ்வொரு சிறப்பு அழைப்பாளரும்  பேசி  முடித்த  பின்பு இடையிடையே அவர்கள் முன்னிலையில்   அனைவருக்கும் பரிசளிப்பும்  பாராட்டும்  நிகழ்ந்தது. அதன் சிறப்பு என்னவெனில்,  ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோர்களுக்கு மாணவர்களது  படைப்புகளே, நினைவுப்  பரிசுகளாக  வழங்கப்பட்டன…பெரிய  திரைகளில் அவர்களது ஓவியங்கள் திரையிடப்பட்டு  மாணவர்களது  திறன்கள்  அங்கீகரிக்கப்பட்டன.

SUCCESS=DCP*2 …!!!!! 

                        போலாரிஸ் நிறுவன உரிமையாளர்  திரு அருண் அவர்கள் இறுதியில்  மேடை ஏறினார். வெற்றியின்  சூத்திரமாக  SUCCESS=DCP*2  என ஆவணப்படம் தந்து  உல்லாஸ் மாணவர் எவ்வாறெல்லாம் தேடப்பட்டு , வழிகாட்டப்பட்டு, வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர் என ஆங்கிலத்தில்  விவரிக்க ,அதை மொழி மாற்றம் செய்து தமிழிலும் கூறப்பட்டது.

வெற்றி(SUCCESS) =கனவு(DREAM)*

                    வலிய நம்பிக்கை(CONVICTION)*

                    திட்டமிடல்(Planning)*தொடர் முயற்சி(Perseverance)   


என  மிக  அருமையான  ஒரு  காட்சிப்  படத்தை  பார்வைக்கு ஓட விட்டு  மாணவரைக்  கனவு காண ஊக்கப்படுத்தினார்.ஒரே  நேரத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவரை தங்களது கனவுகளை  எழுத வைத்து  ,அவரது  நண்பர்களைக் கொண்டு அவர்களின்  கனவுகளைப்  பகிர்ந்து கொள்ளச்  செய்து  விழாவை இறுதிக்குக் கொண்டு வந்தார்.

அனைத்து  9-12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு ,புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்களின் அடுத்த வாழ்வியல் திறன்களுக்கான வகுப்புகள் பற்றியும் அறிவிக்கப்பட்டது.

                      இதுவரை மேடைகளில் பார்த்திராத  நாட்டுப்பண்  வடிவம் எங்கள் அனைவரையும்  சிலிர்க்க  வைத்தது.மாற்றுத் திறனாளிகள்,காது கேளாதோர்,பேச இயலாதோர் நிறைந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் இசைக்கப்பட்ட நாட்டுப்  பண்ணிசை அதோடு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த  மாணவ,மாணவிகள் மேடையை இந்த நாட்டுப் பண்ணின் இசைக்கு வடிவம் தர அந்த ஷனம் அனைவரையும் மெய் சிலிர்க்க  வைத்தது….

                     ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றம் பெற்று  வெற்றி பெற வழிகாட்டிய POLLARIS & ULLAS அந்த நாளின் நாயகர்களாக ஆயிரமாயிரம்  மாணவருக்கு கருத்தில்  பதிந்தன.

**********************************நன்றி***********உமா*******************************

தொகுப்பு


சு.உமாமகேஸ்வரி,                                                            பட்டதாரி ஆசிரியர்(கணக்கு) ,                                                அரசு மேநிலைப் பள்ளி,                   

நல்லாம்பட்டி,                                                              

 ஈரோடு மாவட்டம்.


26.6.2014

                                        ICT Awareness- Teachers Meet

                     காலை 8.45 மணி முதலே பயிற்சியின் பங்கேற்பாளர்கள் வரத் துவங்கினர்.அவர்கள் வர வர, அவர்களிடம் தன் விளக்க அச்சுப் பிரதித் தாள்கள் (Participant’s Details Forms) எண்களின் வரிசையிட்டுத் தரப்பட்டு வந்தது.அதனோடு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தனித்தனி பதிவுத் தாள்கள் 3 பிரதிகள் தரப்பட்டு அவர்களது பெயர்,பள்ளி முகவரி,அலைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி இவை அனைத்தின் பதிவுகளும் தொடர்ந்தது.. சரியாக 9.50 மணியளவில் பங்கேற்பாளர்கள் 50 பேரும் வருகை புரிந்தது இந்த நாளின் முதல் வெற்றி…தொடர்ந்து 5 ஆசிரியர்கள் வருகை புரிந்து  பங்கேற்பாளர்கள் 55 ஆகினர்.

          ஆனால்,விழாவின் மிக முக்கியக் கருத்தாளரான, திருவாளர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலை 9.15 க்கே பயிற்சி அறைக்கு வந்துவிட்டார்.அவ்வளவு எளிமை,ஆனால் நிறைந்த அனுபவம்.நிகழ்வு ஆரம்பிக்கும் வரை,பங்கேற்பு ஆசிரியர்களை,அறிமுகம் செய்யக் கூறியதுடன்,இன்றையக் கல்விமுறை,கணினி வழிக் கற்பித்தல் பற்றிய ஆசிரியர்களின் எண்ணங்கள் என இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார்.ஒரு புறம் ஆசிரியர்களின் வருகைப் பதிவும் நடந்து கொண்டிருந்தது.

         சரியாகப் 10.15 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் பயிற்சி ஆரம்பமானது.பயிற்சி ஒருங்கிணைப்பாளரான அன்பழகன் பயிற்சி பற்றிய சிறு விளக்கம் தந்து துவக்கினார்.அன்னலரசு ஆசிரியர் அனைவரையும் வரவேற்று அமர்ந்தார். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் திரு க.வேதாச்சலம்               அவர்கள் மிக நல்ல உதாரணத்துடன் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தி அமர்ந்தார்.அவர் கூறியது, ”ஒரு சிறுவன் பலூன் வியாபாரியிடம் வண்ண நிற பலூன்கள் பற்றிக் கூறி, தனக்கு, கறுப்பு நிற பலூன் வேண்டுமென்று கேட்க,அதற்கு வியாபாரி வெளியில் காணும் நிறமல்ல அதன் உயரப் பறப்பதற்குக் காரணம்,உள்ளே நிரம்பி இருக்கும் காற்றே காரணம் என்றும்,அது நம் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று ஒப்பிட்டுக் கூறினார்.அந்த சிறுவன் மார்ட்டின் லூதர் கிங் என நாம் அறிவோம்.

    அடுத்ததாக, பயிற்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆசிரியர் ,நமது கருத்தாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிப் பங்கேற்பாளரோடு உரையாற்றினார்.அவரின் Profile இரண்டு பக்கங்களைத் தாண்டியது, முழுவதும் அவரது Projects,பணியாற்றிய நிறுவனங்கள் தான். பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆரம்பித்து, IGNOU,CIET,NCTE,Election Systems,Doordharshan,Vigyan Prasar,Dept of Science and Tecnology,Defence …….இப்படி முடிவில்லாத வகையில்  நாட்டின் பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகள்,ஆராய்ச்சி,வடிவமைப்பு,ஆலோசகர் என………இன்று வரை தேனீயைப் போன்று சுறுசுறுப்பாக இருக்கும் அவரைப் பார்ப்பதே பெரும்பாக்கியம் எனலாம்.

    ஆனால் ஆசிரியர்களான நமக்காக.கணினி வழிக் கற்பித்தலில் பயன்படுத்தும் மென்பொருள்கள் பற்றியும் அவற்றை எங்கள் அனைவருக்கும் வழங்கி உதவவுமே வந்துள்ளார் என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.இவரைப் பற்றிய அறிமுக உரைக்குப் பிறகு,விருதுநகர் மாவட்டத்திலிருந்து இங்கு கருத்தாளராக வந்திருந்த கணித பட்டதாரி ஆசிரியர் திரு கருணைதாஸ் பற்றிய அறிமுக உரையையும் வழங்கினார்.

      கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வகுப்பு Education Media-How to achieve in classroom?என ஆரம்பித்து  Touch Screen வழியாக hify யாக ஆரம்பமானது.கணினியின் வரலாறு,கல்வியில் அதன் பயன்பாடு, Educational Media-விற்கும் Media in Education-க்கும் உள்ள வேறுபாடு இவற்றை ஆழமாகப் புரிய வைத்து விளக்கம் கொடுத்தார்.Edu Sat-ல் குஜராத் மாநில ஆசிரியர்களை இணைய வைத்தது முதல்  தற்போதைய CAMPTEL என்ற அவரது கண்டுபிடிப்பு வரை கணினி வழிக் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பல நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டுமளவிற்கு High Configeration-ல் இருந்தது. Follow up  செய்வதே சில சமயங்களில் கடினமாக இருந்தது.

        கணினியில் பயன்படுத்தும் மென்பொருள்களில், கல்விக்காகவும் ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தல் பயன்பாட்டுக்கும் தேவையான மென்பொருள்கள் பற்றி அறிமுகம் செய்தார்.காணொலிக் காட்சிப் படங்களாக மாற்றுதல், வகுப்பறை நிகழ்வுகளைப் பதிவு செய்தல், எவ்வாறு பயன்படுத்துதல் என அனைத்தையும் Demo செய்து காண்பித்தார்.

         இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்களான Blog,Face Book, Delicious,You Tube,Twitter,Slide Share,Podcast  எனப் பலவற்றைப் பற்றி விழிப்புணர்வு தந்தார். அனைத்துப் பரிமாற்றங்களும் தொடு திரை வழியாகவே கவனிக்கப்பட்டன , கற்றுக்கொள்ளப்பட்டன,பகிரப்பட்டன எனலாம்.

  தொடர்ந்து Audacity என்ற மென்பொருளை ஆசிரியர்களது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளச் செய்து,காணொலிக் காட்சிப் படங்களாகவும்,அவற்றுக்கு குரல் சேர்த்து MP3 உருவாக்க செயல் விளக்கம் கொடுத்தார்.அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்தோடு மட்டுமின்றி,75% பேர் தங்களோடு கொண்டு வந்திருந்த மடிக் கணினியில் Audacity யைப் பதிவு செய்து MP3 உருவாக்கம் கற்றுக் கொண்டனர்.

       இடையிடையே மாணவக் கருத்தாளர்களாக வந்திருந்த சித்ரா ஆசிரியரின் பள்ளி மாணவர்களான அருண்குமார் மற்றும் பரத்குமார் இவர்களைப் பற்றிய அறிமுகம்,கிருஷ்ணமூர்த்தி அய்யா கொடுத்த மென்பொருள்கள் பலவற்றையும் வந்திருந்த ஆசிரியர்களது மடிக்கணினியில் COPY  செய்யும் பணி, இவையும் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.

     மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு,Open office என்ற மென்பொருள் பயன்பாட்டு முறையை விளக்கினார், மேலும் ஒரு ஆசிரியர் தனது கற்பித்தல் பணிக்காலத்தில் ஒரு வருடத்தின் வகுப்புகளைப் பதிவு செய்வதின் மூலம் 160 வகுப்பறை நிகழ்வுகளைப் பாதுகாத்து அடுத்து வரும் மாணவர்களுக்கோ,ஆசிரியர்களுக்கோ, தர முடியும் என்று கூறினார். அந்தப் பதிவுகளை MP3 ஆக மாற்றுவதன் மூலம் ஒரு சிறிய Pen Drive –ல் பாதுகாக்கலாம் என ஆலோசனை தருகிறார்.எத்தகைய ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை!!!அவரின் அனுபவத்தில் விளைந்த உண்மை இது.

     தொடர்ந்து, பள்ளிகளில் வானொலி நிலையங்கள் (Radio Programmes) ஆரம்பித்து,உங்கள் பகிர்தலைத் தொடருங்கள் என்றும் வழிகாட்டினார்.அதற்கான website கூறி, பதிவதற்கான இறுதி நாள் இவை அனைத்தும் கூறினார்.

       மேலும் நம்மிடம் உள்ள Video பதிவுகளைப் புற ஒலிகளை நீக்கி எவ்வாறு Proffessional ஆக மாற்றுவது என்றும் software தந்து வழிகாட்டினார். அடுத்து PPT-யைJPEG image ஆக மாற்றம் செய்து நாம் பிண்ணனிக்குரல்  தந்து,கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் வழிகளைச் செயல் விளக்கத்தோடு தர, நமது ஆசிரியர்கள் அனைவரும் 15 நிமிடங்களுக்குள்ளாகவே கற்றுக் கொண்டனர்.இறுதியில் Slide Share பற்றிய விளக்கங்கள் தந்தார்.  

        நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மென்பொருள்கள்(softwares) அனைத்தையும் திரையில் ஓட விட்டு விளக்கினார்.எவ்வளவோ கருத்துகளைத் தந்த பிறகும்,இன்னும் இன்னும் உங்களுக்கு நிறையக் கூற வேண்டும் என ஆவலாகச் சொல்லி,அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.ஏனெனில்,73 வயதின் முதுமை அவரிடம் இல்லை, மாறாக அனுபவம் மட்டுமே,25 வயது இளைஞனின் வேகம்,தெளிவு,ஆர்வம்,புத்துணர்வு இவையே அவராக இருந்தார்.

        இறுதியாக உங்களுக்கு ஒரு Tips எனக் கூறி,வீட்டிலேயே Recording Room அமைத்துக் கொள்ள வழிகாட்டினார்.வீட்டின் ஒரு மூலையில் சிறிய அறையைத் தடுத்து அதில் நான்கு பக்கங்களும் கடைகளில் கிடைக்கும் முட்டைகள் வைத்து வரும் அட்டைகளை இடைவெளி இல்லாமல் ஒட்டிவிடுங்கள்,இப்போது Record Room தயார்,குறைந்த செலவில் உங்கள் பாடங்களை வீட்டிலேயே Record செய்து Share செய்யலாம் என்று கூறினார்…….

        அடுத்து விருதுநகர் மாவட்ட கருத்தாளர் கருணைதாஸ்,தனது மாவட்டத்தில் கணினி வழிக்கற்பித்தல் பற்றியும்,பள்ளிகளில் பயன்படுத்தும் கணினி மென்பொருள்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார் . Google Drive, Google Docs, Spread Sheet பற்றியும்,அது அவரது மாவட்டக் கல்வி அலுவல் வேலைகளில் எவ்விதம் பயன்படுகிறது எனவும் பகிர்ந்து கொண்டார்.

        பங்கேற்பாளரிடம் காலையிலேயே வழங்கப்பட்ட Self Evalution Tool-லில் அவரவரே மதிப்பீடு செய்தனர். 90% அனைவரும் அத்தனை மென்பொருளையும் அறிந்திருந்தனர். தொடர்ந்து அஸ்தினாபுர மாணவக் கருத்தாளர்கள் தாங்களே தயாரித்த Video Document ஐ போட்டுக்காட்ட,பங்கேற்பாளர்களிடம் Feed back பெறப்பட்டது.இறுதியில் நிகழ்ச்சி நிறைவுக்கு வரும் தருணம் வந்தது.பங்கேற்பாளர்களில் 4 ஆசிரியர்கள் Feed back வழங்கினர்.அதன் சுருக்கம்,இந்த ஒரு நாள் வழிகாட்டல் பயிற்சி போதவில்லை எனவும், மிக நன்றாக இருந்தது எனவும்,தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களும்,பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களும் ஒன்று கூடி சந்தித்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டது புதிய அனுபவமாக இருந்தது எனவும் கூறினர்.      

       இறுதியில் பயிற்சி ஒருங்கிணைப்புக் கருத்தாளர் ஆசிரியர் உமாமகேஸ்வரி நன்றி கூற ,வருகைசான்று அனைவருக்கும் வழங்கப்பட்டு நாட்டுப்பண் பாட 26.6.2014 இன் ICT Teachers Meet முடிவுக்கு வந்தது.

ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தாளர்கள்

*திருகிருஷ்ணமூர்த்தி-தேசிய&பன்னாட்டுக் கருத்தாளர்&பல்திறன் மனிதர்

*திரு அன்பழகன்,ப.ஆ(அறிவியல்),உத்திரமேரூர்-காஞ்சிபுரம் மாவட்டம்

*திருமதி சித்ரா, ப.ஆ(ஆங்கிலம்)17-அஸ்தினாபுரம்காஞ்சிபுரம் மாவட்டம்

*திருமதி உமாமகேஸ்வரி,ப.ஆ(கணக்கு)நல்லாம்பட்டி,ஈரோடு மாவட்டம்

*திரு கருணைதாஸ் ப.ஆ(கணக்கு)விஸ்வநத்தம்,விருதுநகர் மாவட்டம்

*அருண்குமார் -9ஆம் வகுப்பு,அ.உ.நி.பள்ளி அஸ்தினாபுரம்.காஞ்சிபுரம்

*பரத்குமார் 9ஆம் வகுப்பு, அ.உ.நி.பள்ளி அஸ்தினாபுரம்.காஞ்சிபுரம்


எழுத்து:

சு.உமாமகேஸ்வரி, ப.ஆ.(கணக்கு)

அ.மே.நி.பள்ளி, நல்லாம்பட்டி

ஈரோடு மாவட்டம்


7.7.2009 முதல் 7.7.2019 வரை ♥️♥️♥️


நமது வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும் ...


நினைவுகள் பின்னோக்கிச்  சென்றாலும் பயணம் முன்னோக்கி நகர்வதும் மாற்றங்கள் பல நிகழ்ந்திருப்பதும்  எனக்குள் நம்பிக்கையை விடாது வார்த்தெடுக்கிறது என்பதை இங்குப் பதிவு செய்கிறேன்.


2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் நாள்  இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நான் பல்வேறு போராட்டங்களுக்கிடையே தான், கணிதத்தில் இளநிலைப் பட்டமும்  இளநிலைக் கல்வியியல் பட்டத்தையும் அஞ்சல் வழியேப் படித்து முடித்தேன். 2007 இல் B.Ed முடித்து காத்திருக்க 2009 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வில் கலந்து கொண்டு கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற தருணம் வாழ்வின் மிக முக்கியத் திருப்பம்.


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு ஆண்கள் பள்ளியில் 2005 இலிருந்து பணியாற்றிய நான் , திடீரென வேறு பள்ளிக்குச் செல்ல பதவி உயர்வு காரணமாக இருந்தாலும் .....மிகவும் நேசித்த பள்ளி அது , அங்குள்ள ஒவ்வொரு மரமும் , வகுப்பறையும் , நூலகப் புத்தகமும் எனக்குப் பரிட்சயம் , நேசம் அனைத்தும் கொட்டி என்னையும் வளர்த்துக் கொண்டு பள்ளியில் பல பொறுப்புகளையும் கவனித்து மாணவர்களின் அன்புக்குரிய ஆசிரியராகவும் வாழ்ந்த நாட்கள். அந்தப் பள்ளியைப் பிரிந்து செல்வது தேம்பித் தேம்பி அழ வைத்த நாளாகிப் போனது ஜூலை 7 , 2009 


ஈரோடு பகுதியில் வேறெந்த பள்ளியிலும் இடம் இல்லாததால் #மொரட்டுப்பாளையம் என்ற அந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியைத் தேர்வு செய்தேன். என் ஊரான காஞ்சிக் கோவில் கிராமத்திலிருந்து பெருந்துறை செல்ல பேருந்து அரிதாகவே வரும். அப்படியிருக்க , அங்கிருந்து ஊத்துக் குளி சென்று (இதற்கு பெருந்துறையிலிருந்து அடிக்கடி பேருந்து உண்டு ) ஊத்துக்குளியிலிருந்து  திரும்பவும் மொரட்டுப் பாளையம் செல்ல 11 என்ற ஒரு பேருந்து தான் இருக்கும். அதைப் பிடித்து பள்ளிக்கு வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிப்பதற்குள் செல்ல வேண்டும் ...

மிகப் பெரிய சவால் அது , அங்கு மாணவர் எண்ணிக்கையும்  RTE படி இல்லை , 10 ஆம் வகுப்பில் 65 மாணவர் இருப்பார்கள் , 8ஆம் வகுப்பில் 80 பேர் இருப்பார்கள். அத்தனைக்கும் எப்போதும் ஆசிரியர்கள் காலிப் பணியிடம் அதிகமாக இருக்கும் பள்ளி அது. வீட்டிலிருந்து காலை  7.05 க்குக் கிளம்பி பெருந்துறை பஸ் பிடித்தாக வேண்டும் , ஓடிப் போய் ஓடிப் போய் பஸ் பிடிக்க வேண்டும். பல நேரங்களில் பேருந்து குறித்த நேரத்தில் வராது. அப்படியான நேரங்களில் அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும் வகையில் மன அழுத்தம் மிகும். அப்படியான சூழலில் ரோட்டில் போகும் எந்த வாகனம் இரு சக்கர வாகனத்தையும் கை காட்டி நிறுத்தி பெருந்துறை போய் விடுவேன். அங்கிருந்து ஊத்துக் குளிக்கு பஸ் கிடைப்பது எளிது. மீண்டும் ஊத்துக் குளியிலிருந்து பஸ் கிடைப்பது குதிரைக் கொம்பு , அங்கு ...4 சக்கர வாகனம்... லாரி, குட்டி யானை  எல்லாத்திலும் ஏறிப்  போவேன். 10 ஆம் வகுப்பு என்பதனால் காலை 8.30 மணி சிறப்பு வகுப்பு வாரம் ஒரு நாள் வரும். அதற்குள் போக வேண்டுமானால் வீட்டில் 6 மணிக்கே கிளம்ப வேண்டும். மகன் ,கனிஷ்கர் அப்போது முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் , அவனை எழுப்பி , குளிக்க வச்சி , சமைச்சி ...

வேற பிரச்சனை எல்லாம் சமாளிச்சி தான் மொரட்டுப் பாளையம் சென்று மாலை 7 மணி ஆகும் வர. அங்கு என்னிடம் 8 ஆம் வகுப்பில் படித்த  குப்பாயி என்ற மாணவியும் 6 ஆம் வகுப்பு படித்த அவரது தம்பி பாலாஜியும் தற்போது சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாணவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.


இப்பள்ளியில் பணிபுரியும் போது தான் எனது , இந்திரா காந்திப் பல்கலைக் கழகத்தில் , M.Ed படிப்பையும் போராடி முடித்தேன். அப்போது இருந்த ஆர்வத்தின் பயணத்தில் தான் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்  தயாரிப்புப் பணியில் ஈடுபட அரசு வைத்த தேர்வில் கணக்குப் பாடத்திற்காகக் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன்.  , சமூக அறிவியல் பாடப்புத்தக வாய்ப்பு வந்ததை சரியாகப் பயன்படுத்தியதால் வாழ்க்கை திசை மாறியது.


மொரட்டுப்பாளையம்  பள்ளி இரு பாலரும் படிக்கும் பள்ளி , நான் பணியில் இணைந்த சில மாதங்களில் அது திருப்பூர் மாவட்டமாகப் பிரிக்கப்பட , Training எல்லாம் பல்லடம் தாண்டி போடுவாங்க , ரொம்ப சிரமமாக இருந்தது , சமச்சீர் புத்தகம் பணியும் சென்னைக்கும் மொரட்டுப்பாளையத்து குமாக போய் வந்ததும் என ஓடிக் கொண்டே இருந்தேன் , அந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் 96% தேர்ச்சி தந்தனர் மாணவர்கள் . 2 வருடம் கழித்து பெருந்துறை ஆண்கள் பள்ளிக்கே மாறுதல் பெற்று வர , சமச்சீர் புத்தகங்களும் தயாராக ஆரம்பிக்க அந்தப் பணியிலும் இயங்கினேன். புத்தகமும் வெளி வந்தது , தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர் கைகளில் நான் முழுப் பொறுப்பேற்ற சமூக அறிவியல் புத்தகம் என் பெயர் தாங்கி, தவழ்ந்தது. பேரானந்தப் பட்டேன் .


பெருந்துறையில் ஒரு தலைமை ஆசிரியர் காந்திமதி என்பவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் . 5 வகுப்புகளில் இருந்த Last Bench Students எனப்படும் 35 மாணவர்களுக்கு (அந்தந்த வகுப்பு ஆசிரியர்களால் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ) வகுப்பு ஆசிரியராகவும்  அனைத்துப் பாடங்களையும் நான் ஒருவளே எடுக்கவும் என்பதாக இருக்க , நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு மாதம் சென்றிருக்கும் , காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை அவர்களோடு மட்டும் இருப்பதும் அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பதும் சிறிது மன உளைச்சல் தர , 

ஆங்கிலம் , கணக்கு , சமூக அறிவியல் என 3 பாடங்கள் மட்டும் எனக்கு வழங்கப்பட்டது. இவர்களின் கதைகளைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். தொடர்ந்து இங்கும் 2 வருடம் இருந்த பிறகு பணி நிரவலில் நல்லாம் பட்டி என்ற பள்ளிக்குச் சென்றேன். அங்கும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள். இங்கும் இரு பாலரும் படித்தனர். அங்கு எழும் பிரச்சனைகளுக்கு அளவே இருக்காது . காதல் குறித்து 8ஆம் வகுப்பிலிிருந்து அந்த கிராமத்து சூழலில் உள்ள குழந்தைகளின் புரிதலே வேறு. அவர்களை மீட்டெடுக்க ஆசிரியர்கள் மொத்தமும் இணைந்து பல்வேறு வேலைகளைச் செய்வோம் . அங்கு ஒரு வருடமே இருந்தேன் . 2013 இல் பாடப் புத்தகம் தயாரிப்புப் பணிக்காக சென்னை DPl வந்தேன் .  கல்வி குறித்த துறைகளின்  பல பிரிவுகளில் பாடநூல் ஆசிரியராக , படிி திருத்துநராக, பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளராக , மாற்றுத் திறனாளி மாணவர் பணிகளுக்காக, கணினித் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக , நீதிமன்ற வழக்குப்  பிரிவு ஒருங்கிணைப்பாளராக என அது பல திசைகளில் விரிந்தது. கல்வி குறித்த இணைய தள பணிக்காக எழும்பூர் ஆவணக்காப்பகத்திலும் சில காலம் பணியாற்றினேன்.


அந்த சமயத்தில்  அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு  (A3)உருவாகி தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் திறமையாக செயல்படுகின்றனர் என்பதை பல தளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தேன். நாளிதழ்களும் மாத இதழ்களும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை எம்மிடம் பரிந்துரைக்கக் கேட்க ஆரம்பித்த தருணம் ,2016 இல் திருச்சியில் ஒரு மிகப் பெரிய ஆசிரியர் சந்திப்பு நடத்தி மாற்றங்களுக்கான விதை வேர் விட ஆரம்பித்தது. 


DPI வளாகத்து கல்விப் பணிகளில்  இருந்து என்னை விடுவித்துக் கொண்டு மீண்டும் குரோம்பேட்டை பள்ளிக்கு ஆசிரியராக பணியேற்று குழந்தைகளோடு வாழ ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆயிற்று ...


அதற்கு இணையான வருடங்களில் கல்வி குறித்த நிறைய தேடல்கள்  இயல்பாக வர பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்னை வரவேற்க Dr SSR Rajagopalan Srinivasa , Dr வசந்திதேவி Vasanthi Devi , JK   Krishnamoorthy Jayaraman

,பேராச. மாடசாமி இவர்களுடனான பயணம் துவங்கி அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகளை சமூகப் பிரச்சனையாகப் பார்க்கும் பார்வை பெற்றேன். அதனை தீர்ப்பதற்கான வழி முறைகளைத் தேடியும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தை மையப்படுத்தியும் மாநிலம் முழுக்கப் பயணங்களும் உரையாடல்களும் என இந்த பத்தாவது வருடம் ஓடிக் கொண்டிருக்கிறது. 


பெண் குழந்தைகளுக்கானப் பள்ளி என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படுவதும்  உளவியல்  குறித்த அதிக உரையாடல்களும் என பயணம் கூடுதல் பொறுப்புகளுடையதாகிறது.


இன்னும் பொறுப்புடன் தொடர முயல்கிறேன். 


உமா



 DIGITAL CONTENT PREPARATION WORKSHOP AT TRICHY

                                                      21.01.2015-23.01.2015 


               இப்போது(21,22,23 ஜனவரி) திருச்சியில் நமது ஆசிரியர்களுக்கான ICT  Digital content preparation workshop நடைபெற்று வருகிறது..SCERT நடத்தும் இப்பணிமனையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக்கொண்டும்,அவரவர் ஆர்வத்திற்கேற்ப கணினி வளங்கள் தயாரிப்பில் தங்களை இணைத்துக் கொண்டும் பொலிவூட்டிக்கொண்டுள்ளனர்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்,உயர் ,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்புப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இங்கே சங்கமித்து தங்கள் படைப்புகளை திரட்டிக்கொண்டுள்ளனர்.




          SCERT-TVA-ACL ( - அண்ணா நூற்றாண்டு நூலகம் )


    18.04.2016 முதல் 22.04.2016 .


  ..........Workshop............


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்... கடந்த ஒரு வாரமாக TVA (தமிழ் இணையக் கல்விக் கழகம் ) நடத்திய கான் அகாடமி (khan Academy videos)காணொலி ஆவணங்கள் மொழிபெயர்ப்புப் பணிமனை நடைபெற்றது.. மாநில முழுவதும் உள்ள விருப்பம் உள்ள ஆசிரியர் 70பேர் கலந்து கொண்டு தங்கள் உழைப்பை நல்கினர்.நம் "அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் கள் "குழுவின் ஆசிரியர்கள் 40க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டது சிறப்பு. மேலும் குழு ஒருங்கிணைப்பாளர்களாக 6ஆசிரியர்கள் முறையே....பெர்ஜின் ஸார்,

மேக்டலினா மேம், சகோதரர்கள் சத்தியவேல்,

பொள்ளாச்சி பாலா,

சுரேஷ் நியுமிஸ்மாட்டிஸ்ட்,தம்பி அஜய்....ஆகியோரும் மிக சிறப்பாகத் தங்கள் குழுக்களை ஒன்றிணைத்து பணியை துரிதப்படுத்தினர்.ஒவ்வொரு நாளும் கற்றலுக்கான நாளாக அமைந்து அனைவரையும் பல கற்றல் நுணுக்கங்களை கடைபிடிக்கத் துணைநின்றது. .SCERT இன் உதவிப்பேராசிரியர்கள் ஐவர் மீளாய்வுப் பணியில் ஆசிரியர் செய்த மொழிபெயர்ப்புப் பாடப்பொருட்களை ஆய்வு செய்தனர்.. தமிழ் இணையக் கல்விக் கழக உயர் அலுவலர்கள் திரு பரிதி மற்றும் திரு.சி.வ.தினகரன் நம்மோடு உடன் இருந்து ஒத்துழைப்பு நல்க, இப்பணிமனையின் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கௌதம் மற்றும் அவரது தொழில் நுட்பக் குழு நண்பர்கள் சுதர்ஸன் ,

சந்தோஷ்,சீதா,போபு ஸார்,அருண்,செய்தி வாசிப்பாளர் நண்பர் ஆகிய அனைவரும் நமது பணிக்கு கூடுதல் பலம். அதோடு மட்டுமன்றி..... அண்ணா நூற்றாண்டு நூலகம் தந்த சூழல் நம்மை சற்றே கூடுதலாகப் பணியாற்றிடத் தூண்டியது..அங்கு நூலக நிர்வாகி திருமதி காமாட்சி அம்மையார், நூலகர் திரு ஜெபா அவர்களும் பல நேரங்களில் நமது பணியைப் பார்வையிட்டு உடனிருந்து மகிழ்ந்தனர்.பணிமனையின் முத்தாய்ப்பாக....

திரு உதயச்சந்திரன் IAS அவர்கள் தன்னுடன் மேலும் இரு IAS அதிகாரிகளை அழைத்து வந்து நம் ஆசிரியர் செய்யும் பணிகளைப் பார்வையிட்டதோடு நம் ஆசிரியர்களின் பன்முகத் திறனையும்...SCERT ICT பணிகள் பற்றியும் சற்று நேரம் விளக்கமாகப் பேசி ஊக்கப்படுத்தினார்.

மகிழ்வான தருணம் அது....ஒட்டு மொத்தப் பணிமனையும் அழகானதொரு அனுபவத்தை அனைவருக்கும் தந்திருக்கும் என்ற ஆழமான நம்பிக்கையோடு.....

உடனிருந்து எங்களை வழிநடத்தும் சிறந்த கல்வியாளர்

திரு ஆசிர்ஜூலியஸ் உதவிப்பேராசிரியர் SCERT அவர்களுக்கு.....தங்களுக்கு நன்றியாக இச்சமுதாய மாற்றத்தை மேற்கொள்ளத் துணையிருப்போம் என நமது ஆசிரியர்கள் சார்பாக உறுதிகூறுகிறோம்..

நன்றி....

இவண்

சு.உமாமகேஸ்வரி

பட்டதாரி ஆசிரியர்

மற்றும்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மொழிபெயர்ப்புப் பணிமனை.


இன்றைய நாள்....(26.04.2016)


இரண்டாம் கட்டப் பணிமனை.....தமிழ் இணையக் கல்விக் கழகம் SCERT உடன் இணைந்துநடத்தும் ''கான் கல்வி காணொலிகள் (khan Academy educational videos)'' மொழிபெயர்ப்புப் பணி மனையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் வரும் வெள்ளி வரை 4 நாட்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (ACL) நடைபெற இருக்கின்றது.. முதற்கட்டப் பணிமனையைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்துடன் கலந்து கொள்ள இசைவு தெரிவித்து வருகிறார்கள்...70 பங்கேற்பு ஆசிரியர்கள் , 6 குழு ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள்,4 SCERT உதவிப்பேராசிரியர்கள்,(Review team) என மிக வலுவான குழு இப்பணிமனையை முன்னெடுக்க.....மொத்தப் பணிக்கும் ஆசிரியர்களை எங்கள் வழிகாட்டி Asir Julius அவர்கள் வழிநடத்துகிறார்..இப்பணிமனைவெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.


இவண்

சு.உமாமகேஸ்வரி

பட்டதாரி ஆசிரியர்

மற்றும்

மாநில ஒருங்கிணைப்பாளர்


SCERT.... TVA...ACL...IAS....DIRECTOR... PROFESSOR.....இரண்டாம் கட்டமொழிபெயர்ப்புப் பணிமனை.....நன்றியுரை...

கடந்த 4 நாட்களாக நடந்த பணிமனையில் நமது தமிழக ஆசிரியர்கள் 60பேர் கொண்ட குழு மிக நேர்த்தியாக அற்புதமான முறையில் தங்கள் பணிகளைச் செய்ததன் பொருட்டு 450 மொழிபெயர்ப்புத் தாள்கள் முடிக்கப்பட்டு TVA விடம் ஒப்படைக்கப்பட்டது.இரண்டு பணிமனைகளிலும் சேர்ந்து மொத்தம்1137 மொழிபெயர்ப்புகள் முடிவடைந்துள்ளன.

இந்த இரண்டாம் கட்டப் பணிமனையிலும் மீளாய்வாளர் அறுவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் அறுவர் என மிக அற்புதமான குழுக் கட்டமைப்பு இப்பணிமனையை வெற்றி பெற உதவியது.

1.முனைவர் இளங்கோ

2.மேக்டலின் மேம்

3.திரு அஜய்

4.திரு.ஜான்ராஜா

5.திருமதி ஜெயலலிதா

6.திரு ஜெயராஜ்.....இவர்களே ஒருங்கிணைப்புக் குழு...


1.முனைவர் உஷாராணி

2.திருமதி புளோரா

3.திரு அசோக்

4 .திருமதி பிருந்தா

5.திரு சரவணன்

6.திரு ராஜ்குமார்......இவர்களே மீளாய்வுக்குழு(Review team)

மேற்கண்டஅத்துணை மனித உழைப்பிற்கும் நன்றி..

இவர்கள் பன்னிருவர் தவிர ஒவ்வொரு குழுவிலும் பங்கேற்பாளராக இருந்த அறுபது தனித்தனி ஆசிரியர்களுக்கும் உங்கள் மேலான பணிக்கும் ஒத்துழைப்புக்கும் உளமார்ந்த நன்றி...


இவர்களைத் தவிர.... தமிழ் இணையக் கல்விக் கழக குழு நண்பர்கள்.....

1.முனைவர் பரிதி

2.திரு தினகரன்

3.திரு கௌதம ராஜா

4.திரு சுதர்ஸன்

5.திரு சந்தோஷ்

6.திரு போபு

7.திரு ராஜேஸ்

8.செல்வி சீதா மற்றும் குழு ஆகியோரின் அருமையான இணைந்து செயல்படும் பாங்கிற்கு மனமார்ந்த நன்றி..

அண்ணா நூற்றாண்டு நூலக நிர்வாகப் பொறுப்பு.. திருமதி காமாட்சி அம்மையார் , உதவி நூலகர் திரு ஜெபா,

திரு விக்ரமின் தூய்மைக்குழு மற்றும் பாதுகாப்புப் பணி அலுவலர் அனைவருக்கும் நன்றிகள்.....

அனைவருக்கும்அறுசுவை உணவை சிரித்த முகத்தோடு வழங்கிய பிரதீப் கேட்டரிங் டீமிற்கு மனம் நிறைந்த நன்றிகள்....

இந்த மொத்தப் பணியும் நிறைவடைய அடிப்படை தங்குமிடம் வழங்கிய அண்ணா மேம்பாட்டு நிறுவன விடுதி வசதிகள் தந்த குழுவிற்கும் நன்றிகள்....


சங்கிலித்தொடர்போல மேற்கண்ட அனைவரும் இணையக் காரணமாக இருந்த நமது வழிகாட்டி... Asir Julius பேராசிரியர் Scert Ict cell...அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்....

ஆசிர் ஸாரை அடையாளம் கண்ட IAS உதயச்சந்திரன் அவர்கள்,தமிழ்இணையக் கல்விக் கழக இயக்குனருக்கு மனம் நிறைந்த நன்றிகள்......

இவர்களின் கூட்டுழைப்பிற்கு இயக்குனர் SCERT அவர்கள் official support ஆசிரியர்களுக்கு பணிவிடுப்பு அனுமதி தந்து உதவியதற்கு மேலும் நன்றிகள்....

இவண்

சு.உமாமகேஸ்வரி

பட்டதாரி ஆசிரியர்

அமேநிபள்ளி

நல்லாம்பட்டி

ஈரோடு மாவட்டம்.

9976986098.


                          25th July..2016...

           YOU TUBE CHANNEL.... TNSCERT

Very happy...I'm part of this   mission....for all children ..

Today's special.....Our SCERT ICT cell has initiated to upload Tamil Songs for primary children . And ....for 12 th std students very few content also we uploaded...am very happy to share with you....This initiative has taken by a team in SCERT, Try to enjoy and give it to your school children and your own children also...if anyone willing to upload in TN SCERT channel send your Digital content

Please send yours....

scertchannel@gmail.com

25th July..2016...Very happy...I'm part of this mission....for all children ..

YOU TUBE CHANNEL.... TNSCERT

Today's special.....Our SCERT ICT cell has initiated to upload Tamil Songs for primary children . And ....for 12 th std students very few content also we uploaded...am very happy to share with you....This initiative has taken by a team in SCERT, Try to enjoy and give it to your school children and your own children also...if anyone willing to upload in TN SCERT channel send your Digital content

Please send yours....

scertchannel@gmail.com



13.05.2016.....


Today's special...... Thank you for ICT igniter of Tamil nadu Teachers ...MrAsir Julius

🎊Lady Willingdon Institute of Advanced Study In Education

"A Two day National Seminar on Illuminating Minds Through

Quality Education Across The Nation" 12th & 13th May,2016..

🎊Myself presented a paper about the area....

"Importance of Research in Quality Education(Through ICT initiative across Tamilnadu)"

🎵 My special theme about ..when Top-Down Approach of administration replaced by The mixture of Top-Down approach and Down-Top Approch....It has working and giving Tremendous result that so productive...

🎵Our teachers from various district also joineThendral Saaidral SLoganathan Vellore Vellorelore and Mrs Arokiya Mary from Thiruvarur Dt too....


IIT Chennai-May 8th



நேற்றும் இன்றும் சென்னை IIT இல் வாசம்...உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு.....

3rd International Edufest 2016 6th may ....8th may conference....on Excellence in school Education

Academic Leadership

"Teachers Transforming Children"....

My role -as a Speaker about 'Our initiatives towards ICT implementation in Tamilnadu State....'

After my presentation just 5 minutes... the entire Seminar hall appreciated...but I didn't explain everything our initiatives...just jist I shared....yesterday was a wonderful day for me..

Honestly I said....today afternoon only I was joined IIT seminar hall again...but everyone identified me..."u r uma ma'am... yesterday your presentation was simply superb...Government schools are doing like this..!!!!..as like ....many people they told....really I felt wondering because all viewers are International/Matriculation/CBSE school founders and Principals only ...

They are telling me...we are having lot of money but not such kind of work....then they appriciate my confident level of talking....

🎈From Vellammal International school ....team of teachers want to take photo with me...

🎈From Gurukulam school Kerala state principal also want to spend time with me...shared her school initiatives and invited me to her school for giving ICT aware among the teachers...

🎈From Mysore... 2 more principals asked my contact no and discussed their school children need...regarding English teaching methods...

🎈From Coimbatore 3 CBSE school principals want to discuss regarding our work...and also ask appointment to meet their team at Coimbatore.......

and few too....from various states...

......so it was a great experience and raised my energy level....

This is not for fame....but even I am a Government school teacher...the view has changing nowadays.... Once we were treated after all Govt school teachers.... Not now.....Thank you...

S.Umamaheswari

B.T.Maths

GHSS

Nallampatti

Erode Dt

9976986098

uma2015scert@gmail.com



Memorable days…











இந்தக் கல்வி ஆண்டின் இறுதிநாள்.....30 ஏப்ரல்/2016..

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே...பவானி ஒன்றியத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் ஊ.ஒ.து.பள்ளிக் குழந்தைகளோடு எனது இன்றைய நாள்.....

வெகுநாட்களாக இப்பள்ளி தலைமை ஆசிரியர் தோழி வாசுகி அவர்கள் தனது பள்ளிக்கு அழைத்துக் கொண்டிருக்க.... நமது இருகட்டமொழிபெயர்ப்புப் பணிமனை முடிந்த கையோடு ஊர்ப்பக்கம் சொந்த வேலையாக செல்ல வேண்டியிருக்க.....வெள்ளி இரவு கிளம்பினேன்...அப்போது ஏதேச்சையாக ஏதாவது ஒரு பள்ளிக்கு போனால்நன்றாக இருக்குமே.....எனத்தோன்றியது...என்பள்ளி மேல் நிலைப் பள்ளி ஆதலால்..... ஏப்ரல் 23கடைசி வேலைநாள்...மாணவரைப் பார்க்கமுடியாது...ஆகவே தோழியின் பள்ளி......

கவுந்தப்பாடியிலிருந்து ....எங்கள் ஊர் காஞ்சிக்கோவில் செல்லும் வழியில் 3 ஆவது கிலோமீட்டரில் சாலைஓரம் அமைந்து அழகாகக் காட்சி தரும் குட்டி ஸ்கூல்.....நேர்த்தியா...சுத்தமா..

..வச்சு இருக்காங்க.....

குழந்தைகள் எல்லாம் தேர்வுகள் ஏற்கனவே முடிஞ்சதால பொதுஅறிவு வினாப் போட்டி வச்சுக்கிட்டும்....ஐஞ்சாம் கல்லு விளையாடிகிட்டும் ஜாலியா இருக்க...... நானும் அவங்களோட விளையாடினேன்.......

அப்புறம்......அவங்க பள்ளிக்கூட வகுப்பறை சுவர்களிலே மாட்டியிருந்த அட்டைகளைப் பார்த்தா...பல செயற் குழுக்கள்..... முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாரபட்சமில்லாம......

வேலையப் பகிர்ந்து செய்வது மிகப் பெரிய வழிகாட்டல்...ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியுடன் என்னிடம் தங்கள் பள்ளி பற்றிய,தங்கள் பணி பள்ளிக்கு என்ன..... என்பதைப் பற்றிய சந்தோஷப் பகிர்வுகளை மழலைமொழியில் கொஞ்சிக்கொஞ்சிக் கூற......எனக்கோ பேரானந்தம்.....ஒரே குறை அவர்களுக்கு...... தங்கள் பள்ளிக்கு கணினி ஒன்று வேண்டுமாம்.....தந்திடுவோம்.....

இப்போது உங்களுக்காக....அவர்களது புகைப்படங்கள் சில....




இது DPl வரும் முன்பு 2012 இல் பள்ளி ஆசிரியராக இருக்கும் போது கலந்து கொண்ட நிகழ்வு , இதை அனுராகம் என்ற அமைப்பில் அனுப்பி மலேசியாவிற்கு செல்ல தேர்வானேன். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் செல்ல இயலவில்லை. 


        கற்பித்தல்-கற்றல்  மாற்று சிந்தனைத்துளிகள்


படைப்பு :

           சு.உமாமகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர்,(கணக்கு) 

           அரசு ஆண்கள்  மேல்நிலைப்  பள்ளி,

           பெருந்துறை,

           ஈரோடு  மாவட்டம்.

முன்னுரை:

              கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்   .

               மனிதன்  தோன்றிய  நாள்  முதலே கற்றுக்  கொண்டு  இருக்கின்றான் . தானே கற்றல்  வழியாகத்தான்   பல  நூற்றாண்டுகள்  வாழ்ந்திருக்கின்றான் என்று கூறினால்  மிகையாகாது . அங்கு  கற்பித்தல் என்பது  மறைமுகமாக  வாழ்ந்து வந்தது. இங்ஙனம்  வாழ்ந்த  கற்பித்தல்  இன்றைய  21 ஆம்  நூற்றாண்டில் பயிலும்  மாணவனுக்கு  ஒரு  சவாலாக  அமைந்துள்ளது  என்றால்  அது  சாலச் சிறந்தது.

கற்றல்-கற்பித்தல்:

             மாணவர்களைப்  பொறுத்து , வகுப்பறையில் நிகழும் மிக  இன்றியமையா  அனுபவங்களே கற்பித்தலும்  கற்றலும்  எனலாம் .ஆசிரியர்களின்  துணையின்றி இயல்பாகக்  கற்கும்  திறன்  பெற்றவன்தான்  மாணவன் . ஏனென்றால்  கற்றல்  மனிதனின்  அடிப்படைப் பண்பு . ஆனால்  வரையரைகளுக்குட்பட்ட கற்றல்களை   ஏற்படுத்திக்கொள்ள  மாணவன்  தன்னை இணைத்துக்  கொள்ளும்  தருணமும்  தளமும் தான்  வகுப்பறைக் கற்பித்தல் அனுபவமும்  வகுப்பறையும்…….

  மாற்றுச்  சிந்தனை 

             கட்டகங்களின்  பக்கங்களை  நிரப்பிவரும் பாடப் பொருளின்  துணைக்கருவியான  புத்தகங்களை  நாம்  தொட்டுக்  கொள்ளலாமே  தவிர ,சிந்தனைகளை  அவற்றுள்  தொலைத்துவிடக் கூடாது என்பது  எமது  கருத்து ,  கொடுக்கப்பட்டப் பாடங்களை  அவன்  புரிந்தும்  புரியாமலும்  மனனம் செய்யவோ,இயந்தரத் தனமாய்  ஒப்புவிப்பதோ  எந்த  நடத்தை மாற்றங்களையும் , அவனுள் எந்த  நிலையிலும் ஏற்படுத்தி , கற்றலை  நிகழ்த்திவிடாது  என்பதும்  எனது எண்ணம்..அது பெரும்பாலான  ஆசிரியரது  கருத்துக்களும் ஆகுமே.    

             ஆகையால் பாடங்களோடு  தொடர்புடைய உலக  அனுபவங்களைப் பெற  அவனுக்கு  உதவி  செய்வதும் ,வழிகாட்டுவதும் ,துணை  நிற்பதும் ஆசிரியர்களான  நமது  தர்மம்.

              வாழ்க்கையோடு  இணைந்த  கல்வியாக  வகுப்பறைக் கல்வியும்  மாற்றம்  பெற  வேண்டுமானால்  நம்  சிந்தனையிலும்  மாற்றம்  தேவை. ஏனெனில்  மிகச்  சிறந்த  சிந்தனை என்றாலும்  அது  ஒருவழிச்  சிந்தனையாக  இருந்தால் , மாணவரை புதுமைகளைப் படைக்கவோ , அவர்களது திறன்களை வெளிக்கொண்டு சாதனைகளைப் படைக்க  வாய்ப்புகளின்றியோ பயன்ற்றுப்  போய்விடும்…

             இதனடிப்படையில் ஆசிரியர்களான நாம்  மாற்றுச் சிந்தனைக்கு  வழிகோல வேண்டும் .இதனடிப்படையில்  தோன்றியதுதான் கீழ்வரும்  மாற்றுச் சிந்தனைத் துளிகள்….

ஹப்புல்ஸ் கான்செப்ட்(HUBBLE’S CONCEPT):

        ஒளியூட்டப்பட்டத் தொலைநோக்கி:

                    வான்பொருள்களைக் கண்டறிய,உற்று நோக்க முதன் முதலில் தொலைநோக்கித் தந்தவர் நமது  கலிலியோ.அறிவியலின் பரிணாம  வளர்ச்சியில் இன்று அவை  ஹப்புல்ஸ் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன .

                  ஹப்புல்ஸ் (HUBBLE’S)-இது வானவெளியில் சூரிய மண்டலத்திற்கு அப்பால் பறந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பும் ஒரு தொலைநோக்கி .இதன்  அடிப்படைத் தத்துவம் என்னவெனில் ,இருளில் இருக்கும் பொருள்களை ஒளியூட்டி படம் எடுப்பது ,அவற்றை  ஆராய்ச்சிக்காக பூமியின் ஆராய்ச்சி வல்லுனர்கள் சேகரிக்கின்றனர் .

                 இந்த அடிப்படைத் தத்துவம் விண்ணுலகு முதல் மண்ணுலகு வரை நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளதை நாம்  கண்ணுறலாம் . ஆம்  இது ஒரு மிகப் பெரிய சிக்க்கலான கருத்து. ஆனால் இதை எளிமையாக  மாணவருக்கு  கற்பித்தலில் தருவதற்காக நான் வடிவமைத்த எளிய கற்றல் உபகரணமே ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular) .

ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular)

                தூரத்தில் உள்ள பொருட்களைத் தெளிவாக பெரிது படுத்தும் கருவி இது. இதற்கு எளிய முறையில்  “டார்ச்” இணைத்து ஒரு இருட் டறையில் உள்ள பொருளை மையமாக  வைத்து  நோக்கும் போது அது தெளிவாகத் தெரியும் . இதை எமது மாணவர்களுக்கு வகுப்பறையில் செய்து காண்பிக்கும் போது மிகவும் உற்சாகமாக்க் கண்டு புரிந்து கொண்டனர் .இதன் வழியாக நான்  தொடர்புபடுத்திய செய்திகள் பின்வருமாறு..இதையே  தொலை நோக்கிக்கும் பொருத்தலாம்..

§      ஹப்புல்ஸ் தத்துவம்,

§      இருட்டில் தெரியாத் பொருட்களைக் காணல்,

§      அன்றாட வாழ்வில் நாம் காணும்-நேஷனல் ஜியோகிராஃபிக்கல் தொலைக்காட்சி சேனல்கள்,காவல் துறையினரின் ஒரு பிரிவான புலனாய்வுத் துறை,இங்கெல்லாம் இந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

§      (Bank Robbery) வங்கித் திருட்டுகள்-தடுப்பு முறைகளிலும் இது போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது.

§      அறிவியல் துறையில் பல வேர்களுக்கு இந்தத் தத்துவம் ஆதாரமாக உள்ளது.

§      இதை ஆடிகள், பொருட்களின் பிம்பங்கள் பாட்த்திற்கும் பயன்படுத்தலாம் .

                  

ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கி (Lighting Microscope)

        சாதாரணமாக  அறிவியல்  ஆய்வுக்  கூடங்களில் பயன்படும் நுண்ணோக்கிகள் வழியாக, நம்மால் பாக்டீரியா,வைரஸ் இவற்றைப்  பார்க்க முடியாது. இவற்றைக்  காண அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  எலக்ட்ரான் நுண்ணோக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் .

        அவற்றின் மதிப்போ பல கோடிகளில்.அவை பற்றிய தெளிவான அறிவை நம் மாணவருக்கு வழங்குதல் என்பது நம் நிலையில் சற்றுக் கடினமே .இதன் தத்துவமும் ஒளியூட்டலே .ஆகையால் ,நமது  அறிவியல் ஆய்வக நுண்ணோக்கிக்கு ”டார்ச்” கொண்டு ஒளியூட்டினோம்… ஒளியூட்டப்பட்ட  நுண்ணோக்கி வழியாகத் தொடர்புபடுத்தியவை…………

*      சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண நுண்ணோக்கியை,இருளில் (அ) சூரிய ஒளி கிடைக்காத இடங்களிலும் இந்த ஒளியூட்டலின் மூலம் பயன்படுத்தலாம் .

*      DNA-ஆராய்ச்சி என இன்று உலகில் அறிவியல் ஆய்வுகளில் மிக முக்கியமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகளின் தத்துவம் இதனடிப்படையில் அமைந்ததே.(இங்கு தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .அவை மிகப் பெரும் செலவுகளில் வடிவமைக்கப் பட்டிருக்கும் Developed versions)

*      ஜெனிடிக் என்ஜினியரிங் என்று  கூறப்படும் ஆய்வுப்  படிப்பில் இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் பயன்படுத்தப்படும்.

*      சாதாரண  நுண்ணோக்கிகளில் ஆல்கே,பூஞ்சை இவற்றை Slide வழியாக்க் காணலாம்.ஆனால் வைரஸ்,பாக்டீரியா இவற்றைக் கண்டறிய எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மட்டுமே உதவும்.

*      இருளிலும்,மழைக்கால மாலை வேளைகளிலும் ,பள்ளிகளில் செயல்முறை(Practical Exams) தேர்வு/செயல்முறை வகுப்புகளிலும் இது போன்ற எளிய ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தலாம்.


 மாணவரிடையே கிடைத்த அனுபவங்கள்/விளைவுகள்

                 இவற்றைக் கண்ட மாணவர்கள் ஒவ்வொரு செயலையும் அறிவியல் மனப்பான்மையோடு நோக்குகின்றனர். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி புதிய கோணங்களில் அறிவியல் படைப்புகளை உருவாக்க  முயலுகின்றனர். அன்றாட வாழ்க்கை  நிகழ்வுகளைத் தொடர்புபடுத்த  எத்தணிக்கின்றனர் .

                 இவைதான் கற்பித்தல்  வழியே நாம் எதிர்பார்க்கும் விளைவு .அது ஆரம்பமாயிருக்கின்றது.

மற்றுமொரு விளைவு:

                  இந்தப் படைப்புகளை எங்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த சிந்தனையை பல நூறு மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர் .அவர்களிடம்  ஏன்?எதற்கு? எப்படி? எனப்  பலவிதக் கேள்விகள். ஆர்வமிக்க  மாணவர்கள்  சிந்திக்க  இவை பயன்பட்டன .குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் வளர இந்தக் கற்பித்தல் உபகரணம் தூண்டுகோலாக  அமைந்தது . ஏராளமான மாணவர்கள் தொடர்பு படுத்துதலை வரவேற்று ,புரிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

                 ஏராளமான  ஆசிரியர்களும்  இதைக்  கண்டறிந்து கொண்டனர் .மாற்று  சிந்தனைகளைத் தமக்குள் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாக எடுத்தவரும் உண்டு .இந்த கருத்துக்கு,ஆசிரியரது பிரிவில் மாவட்ட முதலிடம் பரிசும் எனக்குக் கிடைத்தது.இதற்கு என்னை ஊக்குவித்தவர்கள் மாணவர்களே…

முடிவுரை:

               எங்கோ ஒரு துளி ,எங்கோ ஒரு பொறி இவை  ஒவ்வொரு  மாணவரையும் கற்கவும் ,படைப்பாற்றல் திறனை  வெளிக்கொணரவும் அமைந்துவிடும் . அதற்கான களங்களை அமைத்துத் தருவதும் ,சூழலை உருவாக்குவதும் தான் மிகப்பெரும் சமுதாய மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியரின் முதல் கடமை . ஆகையால்  நமது  கற்பித்தலில் “ வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதலும் ,மாணவனை அவரது திறனை வெளிக்கொணர தயார் படுத்துதலும்” கண்டிப்பாக  இருக்க வேண்டும் .

            அறிவியல் ஆராய்ச்சியாளராக வருவதற்கும் நம் மாணவர்களை இவை போன்ற கற்பித்தல் உபகரணங்கள் தூண்டலாம்  என்று சொன்னால்  மிகையாகாது . இதே போன்று கணிதம் ,மொழிப்பாடங்கள் என எல்லாத் துறைகளிலும்  அவர்களை நாம்  ஆயத்தப்படுத்த ,இவை போன்ற தொடர்புபடுத்தும்  உபகரணங்களை அமைப்பது இன்றியமையாதது .

                ”கற்பித்தல்  கடலில் பயணம் செய்ய

                கட்டகங்கள் மட்டுமே கப்பல்களாகாது !!!

                கட்டுமரங்களையும்  நாமே உருவாக்கும்

                கற்பித்தல் உபகரணங்களாலாக்கினால்

                கரை  சேர்ந்து இனிதாக்கலாம்


                கற்பித்தல் கடல் பயணத்தை!!!!!!!கற்பித்தல்-கற்றல்  மாற்று சிந்தனைத்துளிகள்.



கீழ் வரும் நிகழ்வு நான் கூறிய சித்ரா ஆசிரியருடன் இருந்த போது செய்தவை 


         விடுமுறைக்  கொண்டாட்டம்                             - DEC  31ST 2014


முன்னுரை :

             திடீரென  எழுந்தது  விடுமுறைக்   கொண்டாட்டச்  சிந்தனை .  எங்கள்  குழுவின்  ஒருங்கிணைப்பாளர்  சித்ரா  ஆசிரியையின்  சிந்தனையில்   உதயமானதுதான்  இந்த   விடுமுறைக்  கொண்டாட்டம்    

           17-அஸ்தினாபுர   உயர்நிலைப்  பள்ளியின் 8-ஆம்  வகுப்பு மாணவர்கள்  ஐந்து  பேர் - அருண்குமார் , சத்யா , நிவேதா , பரத்குமார் ,  பால்  எபினேசர் மற்றும் குரோம்பேட்டை    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின்  10ஆம்  வகுப்பு  மாணவி  யாழினி   இவர்கள்தான்  இந்தக்  கொண்டாட்டத்தின்  பங்கேற்பாளர்கள்…….

 பொருள்  : 

           2013  ஆம்  ஆண்டின்  கடைசி  நாளான  டிசம்பர்  31  எங்களுக்கு  இந்த  வருடத்தின்  மறக்க  முடியாத  நிகழ்வாக  மாறியது  எப்படி..?....இதோ  சொல்கிறேன்  கேளுங்கள்  முகநூல்  நண்பர்களே……

           காலை  7 மணிக்கெல்லாம்  B.Ed  மாணவி  காயத்ரி ,  அஸ்தினாபுர  பள்ளிக்  குழந்தைகளைப்  பேருந்தில்  அழைத்து  வரக்  கிளம்பிவிட்டார் .  காலை  9.30   மணிக்கு  குரோம்பேட்டை  , சோழன்  பிளாட்டில் காலை  , சிற்றுண்டியுடனே  கொண்டாட்டம்  ஆரம்பமானது .                        

           9.45  மணியளவில்  அன்றைய  நாளின்  நிகழ்வு  அட்டை தயாரானது . 8 விதமான  குதூகலக்  கொண்டாட்ட  வகுப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன . விடுமுறைக்  கொண்டாட்ட  (Holiday Joly Day Chart) அறிவிப்புப்  பலகை  மாணவி  யாழினியால்  சிலநிமிடங்களில்  தயார் செய்யப்பட்டது .

                      சரியாக  10  மணிக்கு முதல்  அனுபவம்  அவர்களோடு  பகிர்ந்து  கொள்ளப்பட்டது .


1.ஆட்டோ கொலாஜ் (Auto  Collage) : (கணக்குத்  திறனை வளர்த்தல்)

வழிகாட்டி ஆசிரியர்  :                                

                           சு.உமாமகேஸ்வரி,                                                            பட்டதாரி ஆசிரியர்(கணக்கு)

                           அரசு  மேல்நிலைப்பள்ளி  ,

                           நல்லாம்பட்டி-ஈரோடு மாவட்டம் . 

              

                இந்த  வகுப்பின்  சிறப்பு என்னவெனில் , கடந்த  பத்து  நாட்களுக்கு  முன்னர்தான்  வழிகாட்டி  ஆசிரியர்  இந்த  Programme – ஐக்  கணினியில் , குழுவின்  ஒருங்கிணைப்பாளரிடமிருந்து  கற்றுக் கொண்டார் . ஆனாலும் ஒரு  உந்துதல் , உடனே  அது  மாணவர் களுக்குப்  பரிமாற்றம்  செய்யப்பட்டது .

                 எட்டாம்  வகுப்பு  மூன்றாம் பருவ  கணித  பாடப்  புத்தகம்  தான்  கற்றல்  களம் .  வழிகாட்டி  ஆசிரியரின்  உதவியோடு  அவரவர்க்குப்  பிடித்தமான பாடப்  பகுதி, சூத்திரங்கள் தெரிவு  செய்யப்பட்டு ,  அவற்றைப்  புகைப்படங்களாக  எடுத்தனர் மாணவர்கள் . புகைப்படக்  கருவியிலிருந்து  புகைப்படங்கள் ,  Memory  Card – Card  Reader  வழியாக  மடிக்கணினிக்கு  மாற்றப்பட்டன .  அந்தப்  புகைபடங்களைக்  கொண்ட  (File ) கோப்பை , Auto Collage  உருவமாக  மாற்றும்  வழிகள்  மடிக்கணினியில்  ஆசிரியர் ஒரு  முறை  செய்து  காட்ட  மாணவர்கள்  உற்று  நோக்கினர் .

              தொடர்ந்து  6 பேரும்  அவர்களாகவே  மடிக்கணினியில்  Auto Collage  மென்பொருளைத்  தெரிவு செய்து , எல்லா வழிகளையும்  ஒன்றன்  பின்  ஒன்றாக  (Click) கிளிக்  செய்து ,  அவர்கள்  எடுத்த  புகைப்படங்கள்  உள்ளடக்கிய (File) கோப்பைக்   கண்டறிந்து  அளவுகளை (Landscape,Portrait,Inches ) மாற்றி  ஆளுக்கொரு  Auto  Collage பக்கத்தைத்  தங்கள்  பெயரிலேயே (save) சேமித்து  வைத்தனர்.

              அப்போது, Auto collage ,Options ,Portrait ,Image ,Browser ,Landscape, File , Folder ,Save….என்பன போன்ற புதிய  புதிய  வார்த்தைகளையும்  கற்றுக்  கொண்டனர்  . மேலும் கணிதப்  பாடப்  பகுதியும்  அவர்களது நினைவில்  தங்கிவிட்டன . எந்தக்  கடின  முயற்சியுமின்றி  கணிதத்  தகவல்கள்  மாணவர்  மனதில்  பதிந்துவிட்டன . தொடர்ந்து  அவர்கள்  இந்த  புதிய  வகுப்பை  வெள்ளைத்  தாளில்  பதிவு செய்தனர் .


             கொண்டாட்டத்தின்  முதல்  நிகழ்வு  முடிவுக்கு  வர  அடுத்த  கொண்டாட்டம்  ஆரவாரமில்லாமல்  ஆரம்பமானது ……(2வது நிகழ்வு  நாளை  பார்க்கலாம்)




                 விடுமுறைக்  கொண்டாட்டம்

                  Holiday Jolyday

              (WINTER  CAMP) - DEC  31ST 2014

2.புத்தகவாசிப்பு : 

           (மொழித் திறனுக்கு வழி  காட்டியது )

            

           இது   என்னவென்றால் , எனது   ஆசை  எனலாம் . அன்று  காலைதான்  என்  மனதில் ஓடியது . இன்று  வரும்  குழந்தைகளுக்கு  புத்தக வாசிப்பு  முகாம்  என்ற  சிந்தனையை  ஏன்  தரக்கூடாது என்று ! தொடர்ந்த  சில  நிமிடங்களில்  ஒரு  புத்தகம்  தேர்வானது .அது  “ஆயிஷா” .  ஆம்  மாநிலம்  முழுவதும்  எத்தனையோ  ஆசிரியர்களால்  வாசிக்கப்பட்ட  15 பக்க  உயிரோட்டமான  நூல்….பல்வேறு  கால  கட்டங்களில்  காணொலிக்  காட்சி  குறுந்தகடாக  பல  துறையினரால்  ஊன்றி கவனிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூட  மாணவியின்  வரலாறு  .வளர்ந்த  நம் பார்வையின்  ஆயிஷா  பல  விவாதங்களுக்கு  வழிவகுத்தது . எனது நோக்கம்  குழந்தைகளின்   பார்வையில்  “ஆயிஷா”  -என்ன  சொல்கிறாள் ?...பார்ப்போமா!!!

வழிகாட்டி ஆசிரியர்  :                                             

                 S .உமாமகேஸ்வரி,                                           

                           பட்டதாரி ஆசிரியர்(கணக்கு)

                           அரசு  மேல்நிலைப்பள்ளி  ,

                           நல்லாம்பட்டி-ஈரோடு மாவட்டம் . 

                 ஆறு  பேருக்கும்  சேர்ந்து  ஒரே ஒரு  புத்தகம்  வழங்கப் பட்டது.  ஒருவர்  வாசிக்க  வாசிக்க , மற்ற  5 பேர்  அதனைக்  கவனித்து வர  வேண்டும் . சில  நிமிட  இடைவெளிகளில் வழி காட்டி  ஆசிரியர்  குறுக்கிட்டு , அவர்களது  புரிதலை உறுதிப்படுத்திக்   கொண்டே  இருக்க, சரியாக 12.10  மணிக்கு  வாசித்து  முடிக்கப்பட்டது . 5-10 மணித்துளிகள் அவர்களுக்குள்ளே  கருத்துப்  பரிமாற்றம் . இறுதியாக வழிகாட்டி  ஆசிரியர்  முன்னிலையில்  6  மாணவர்களது  கருத்துக்களும்  தங்களது சிந்தனையில் ……. ஆயிஷா புத்தகம்  பற்றி……இதோ….


                 டீச்சர்  ……ஆயிஷா  மாதிரி  நாங்களும்  நிறைய கேள்வி கேட்டிருக்கிறோம் , தெரியுமா? இது  ஒரு  மாணவன் .

                 பசங்கள  எல்லாம்   அடிக்கக்  கூடாது , இந்த  ஆயிஷாவ  அவங்க  அடிச்சிருக்கக் கூடாது – இது ஒரு  மாணவி  .

                  இந்த மாதிரி  ஏன்  ஆசிரியர்கள்  சிந்திக்க மாட்டாங்களா? கேள்வி  கேட்டா ……… பாராட்டனும் , அடிக்கக் கூடாது .  இனிமேல் ஆசிரியர்கள்  ஓய்வு  அறையில்  நிறைய  பேசாம  , ஓய்வு எடுக்காம  எங்களைப்  போலுள்ள  மாணவர்களுக்கு  என்ன  தேவையோ  அது  பத்தி  நிறைய  படிச்சு ,தேடித்  தந்தால்  நாங்கள் எதிர்காலத்தில் நல்ல அறிவாளிகளாக  வருவோம் –இது  ஒரு  மாணவன் .

                  (Notes,Guide) துணைவன்  பார்த்து  எழுத சொல்றாங்க, அதுல  தப்பாகவே  இருந்தாலும்  அதுக்கு  மார்க்  போடுறது  எல்லாம்  சரியல்ல . அதுமாறணும் -- இது. ஒரு மாணவி …..இப்படி பலவிதமான கருத்துக்கள்  ……………… முத்தாய்ப்பாக  , சிறுவனான  பால்  எபினேசர் , உயிரோடு இருக்கும் போது ஆயிஷாவை  அடிக்கிறாங்க  டீச்சர் , அது  செத்துப்  போனதும்  அன்பு   காட்டறாங்க , இது  எதுக்கு ?

                   எனவே , இவர்களின் கருத்துக்களிலிருந்து  நாம்  அறிய  வேண்டுவன………………………………..

                “ 13  வயது மாணவர்கள்  இப்போதெல்லாம்  நிறைய  கவனிக்கின்றனர் , தனது  சுற்றுப்புறத்தை  அது  பள்ளியாக  இருந்தாலும் சரி , பொது  இடங்களாக  இருந்தாலும் சரி , வீடாக  இருந்தாலும்  சரி  , சிந்திக்கின்றனர் ..எது  சரி , எது  தவறு என , ஆராய்கின்றனர் ,விளைவு களும் , காரணங்களும்  என்னவென்று .


                வெறும் 45 மணித்துளிகள் தான், வெறும் 6 பேர்தான் ,எவ்வளவு  அருமையான  அனுபவம்  அவர்களுக்கும் எனக்கும்  . இன்றைய  மாணவர்  உறுதியாக  நாளைய விடிவெள்ளிகள் , சமுதாயம்  மாறும்  ; நல்ல  மாற்றங்கள்  நிகழ  இவர்கள்  போன்ற  மாணவர்களே  வேர்க்காரணிகள் ………. இரண்டு  நிகழ்வுகள்  கொண்டாட்ட  நிகழ்வில்  தீர்ந்து  போய்விட்டன ….நிகழ்வுகள்  மட்டும்தான்  தீர்ந்தன  ,விளைவுகள்  தொடரும்….(மீண்டும்  நாளை  அடுத்த  அனுபவம் உங்களுக்காக…)




      HELPING HANDS ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா சென்று வர நிதி திரட்டுதல் .



Baskar Ranganathanhe is the jem of person.. my friend.. he is regularly giving his helping hands to our Tamilnadu students.. very first 2 years back....he helped DFC winners Award function...travel expenses,who had selected from Tanmilnadu ..that's my first initiative to approach him by Bala G he only introduced Mr baskar to me..Then my 2nd attempt....I tried to help poor but talent children those who are doing good in computer usage but below poverty....2 boys...with the help of good hearted people I presented laptop for each one..that time also Baskar sir helped me....again last year I approached him for one PUMS ..Uthiramerur...school children from Kanchipuram dt...for their science excursion.... Anbu Azhagan teacher requested me for his school...so I connect him....more than 40 thousand rupees he spent for that govt school children... he is really great even I didn't meet him he is continuously helped our government school children regularly. Then.. before few months one fine day I met him at SCERT... we discussed a lot..Then ...later unexpectedly one of the teacher got helpline from him 20 thousands with my name reference but without my knowledge ...(Oh God..) Then ....last month I tried to ask help for Star Arun school children ....he accepted my obligation and helped ..thanks a lot...Baskar sir..I really proud about your attitude.... Once again thanks..



வள்ளியம்மை டீச்சர்



புத்தாண்டு சந்தோஷம்....


28 வருடங்களுக்கு முன்பு..... என் பள்ளி ஆசிரியர் திருமதி வள்ளியம்மாள் அவர்கள் மிகப்பெரிய strict teacher ..... எங்கள் ஊரில் ஜலகண்டபுரம் (சேலம் மாவட்டத்தில்)எங்கே சுற்றி வந்தாலும்.... இன்று அந்த ஊரில் யாரையாவது நீங்கள் விசாரித்தால்....நான் வள்ளியம்மா டீச்சர்கிட்ட படிச்சேன்னு சொல்லுவாங்க. மூன்று தலைமுறை மாணவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரிடமே படிச்சிருப்பாங்க....

எல்லாரும் அவங்ககிட்ட பேசவே பயப்படுவாங்க...ஆனா நான்........ அவங்க செல்லப் பிள்ளை இன்றுவரை........ கூட....... என்னைஅவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்...தமிழகப் பள்ளிக் குழந்தைகள் படிக்கும் சமூக அறிவியல் பாடப்புத்தக நூலாசிரியராக (5ஆம் வகுப்பு)நான் இருக்கேன் அப்படின்னா....அதற்கு என் டீச்சர்தான் காரணம்.... இன்னைக்கு இருக்கும் எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் வரலாறு,புவியியல் பாடத்தின் மேலே ஒரு காதல் வர்ற மாதிரி புத்தகத்தை எடுக்காம நடத்துவார். 7ஆம் வகுப்பில் அட்லஸ் பயன்படுத்த சொல்லித்தந்தவரும் அவரே.கண்டிப்பு அதிகமாக இருந்தாலும் அவரின் வகுப்பை யாரும் miss பண்ண நினைக்கமாட்டாங்க.Group leaders போட்டு எப்படி மற்ற மாணவர்களை வேலை செய்து முடிக்க வைக்க வேண்டும் என்று எனது மாணவரை நான் நெறிப்படுத்தக் காரணமாக இருந்தவரும் வள்ளியம்மா டீச்சர்..10ஆம் வகுப்பில் நான் மாவட்ட அளவிலும் பள்ளியில் முதல்மதிப்பெண் (94)சமூக அறிவியல் பாடத்தில் பெற எனக்குள் ஏதோ ஒன்றை விதைத்தவரும் இவரே.....

இன்று வரை கணக்கு பாடத்தில் என் மாணவர் புரிந்து கொள்ள ....அது எந்த வகுப்பாக இருந்தாலும்.....நான் இயல்பாக கணக்குப் பாடம் சொல்லித் தருவேன் .....என் வகுப்பு எல்லோராலும் நேசிக்கப்படும் என்றால் மிகையாகாது.....ஆனால் அதன் வேர் வள்ளியம்மா டீச்சர்.....கணக்கை மிக அழகாகப் புரிய வைப்பதில் அவருக்கு நிகர் அவரே....அந்த சாயல் என்னிடமுண்டு..

மூன்றே விஷயம்...

1.என்ன தந்திருக்கு?....

2.என்ன கேட்டிருக்கு?.....

3.என்ன தேவை?.....

இது மட்டும் தான் அவரது approach....நானும் அதேயே.....

Geometryஇல் நேர்த்தி இல்லை என்றால்......... நிமிட்டாம்பழம்....(அதான் கிள்ளு).....

தேதி நோட்டில் போடவில்லை என்றால் ஒரே பார்வை......

சில நாட்களில் நோட்டு வாசலுக்கு எகிரும்....(இது மட்டும் தான் கொஞ்சம் நெருடும் இப்போது கூட எனக்கு...Sorry teacher)......

7ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே அவரோடு கற்பித்தல் முறையால் நெருக்கம்.....

ஆகவே இன்றும் என்னால் மொழிப்பாடங்கள் தவிர கணக்கு... அறிவியல்... சமூகவியலை புத்தகம் கையில் எடுக்காமலேயே மாணவரை வசப்படுத்த முடிகிறது....

ஒரே கவலை எனக்கானதில் அவருக்கு.... நான் ஆசிரியர் ஆனது...ஏனெனில் என் வாழ்க்கை யைப் பற்றி அவருக்கு கனவிருந்தது.....பொறியியல் துறையோ அல்லது அதைவிட better ஆ....எங்க வீட்டில் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என......இன்றும் சொல்வார்........

இத்துணை மதிப்பு பெற்ற எனது ஆசிரியரின் மகன் அண்ணா Sharan Gurunathanபடிக்கும் போதே எங்களைப் போன்றோருக்கு சிம்ம சொப்பணம்...திறமை வாய்ந்தவர்....அதிகமாக எங்களால் கவனிக்கப்பட்டவர்....ஆயிற்று 25வருடங்கள்.. இன்று காலை என் முகநூல் பதிவு ஒன்றிற்கு inspiring என comment அவரிடமிருந்து....நான் எனது அலைபேசி எண்ணைத்தர எதிர்பாராத வேளையில் அழைப்பு..... அவரது எண் என்னிடம் இல்லாமல் போனாலும் (எதுக்கு True caller இருக்கு...)தெரிந்து கொண்டேன் அண்ணாவிடமிருந்து....அழைப்பு. அரைமணிநேரம் பேசினார்... இன்றைய நாட்களின் எனது செயல்பாடுகளைப் பாராட்டி நம் அரசு பள்ளி மாணவருக்கு உதவ முன்வந்துள்ளார்....புத்தாண்டு நல்ல தொடக்கம்.....Thanks அண்ணா.....Thank you my lovable teacher வள்ளியம்மை டீச்சர்..என் பள்ளி வாழ்க்கையில் ஒரேமுறை ஒரே ஒரு அடி வாங்கினேன் என்றால் அதற்கும் இவரேகாரணம்..தோழிகள் 8ஆம் வகுப்பில் ஒரு கணக்கு விடையைத் தெரியாமல் இருக்க.... நான் சரியாகப் போட்டதைக் copy அடிக்க விட்டதால்.....ஒரு அடி....தப்பு செய்ய துணைபோவாயா?....என...



           BEING WITH LIVING LEGEND-ARVIND GUPTA


Before 2 years our TamilNadu SCERT conducted a Translation & Dubbing workshop,at that time we translated and dubbed 400 videos in Tamil Language from Arvind Gupta's TOYS FROM TRASH..It's totally activity oriented,small children always busy with their own thoughts and circumstances, Arvind Gupta triggers the children's thoughts and motivates everybody to know Science & Maths Concept through his activities...It's memorable work for our Translation & Dubbing team,Myself one of the coordinator of that entire workshop.After 2 years,SCERT provided a chance to meet the legend ARVIND GUPTA on 21st JULY,2016...So this is the story of this album,and he spent with us 3 hours...fully engaged with science activities and children views & tallents...So Happy Day for us..





2017 ஒரு சகாப்தம் - பகுதி 1

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சாபங்களே வரங்களாகிப் போனது இந்த 2017 ஆம் ஆண்டு , முடிவில்   பல எதிர்மறைகள் நேர்மறைகளாக மாற்றம் பெற்றன , அந்த  மாற்றங்கள் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும்.... 


ஆண்டின் ஆரம்பத்தில் RMSA இன் மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்களின்  IEDSS பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தேன் , அப்பணியோடு சேர்த்து பள்ளித் தரமதிப்பிடு (Shala Siddhi) திட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப்பு தந்தனர் அதிகாரிகள் . கடந்த பிப்ரவரி மாதம் இதற்காக டெல்லி சென்று NUEPA வின் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்ற , தமிழ் நாட்டின் சார்பாக சென்ற 4 பேரில் நானும் ஒருவள். மிகச் சிறந்த அனுபவங்களைக் கொடுத்த தருணம் அது. 


சேலம் DIET பேராசிரியர் மணிகண்டன் , திருச்சி BRT சந்திரன , பேராசிரியர் முஸ்தபா இந்த அணி மிக அழகாகக் கருத்தரங்கில் தமிழகத்தின் மதிப்பீடு செயல்பாடுகளை விவரித்து அனைத்து மாநில பங்கேற்பாளர்களும் பாராட்டும் படி  மாநிலக் குழு SSA சுந்தர ராமன் அவர்களது ஒருங்கிணைப்பில் சென்று வந்தது . அதன் பிறகு செயற்கைக்கோள் Edu SAT வழியாக DPI லிருந்து மாநிலம் முழுமைக்கும் அதன் தொடர் செயல்பாடுகளை எடுத்துச் சென்றது எனக்கான பல புரிதல்களைத் தந்தது. 


இது இப்படி இருக்க திடீரென ஏப்ரல் மாதம் , RMSA இல் மாற்றுப் பணிபுரிந்த சில ஆசிரியர்களை அவரவர் பள்ளிக்கு அனுப்பியது , மிகவும் பாதிப்படைந்தவள் நானே , ஏனெனில் வீடு , குழந்தைகள் என குடும்பமே சென்னையில் இருக்க திடீரென நாளையே அவரவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி பணி விடுவிப்பு செய்து விட்டனர் .


இயக்குநர் அறிவொளி ஐயா , இணை இயக்குநரிடம் நிலைமையைக் கூற , திரும்பவும் அழைப்போம் , உங்கள் பணி நிச்சயமாக வேண்டும் எனவும் இந்த ஒரு மாதம் பள்ளிக்குச் செல்வது அவசியம் எனவும் கூறி அனுப்பி வைத்தனர். பின்னாளில்  இணை இயக்குநரிடம்  கேட்டதற்கு ,,ஏன் ஸார் என்னை RMSA வில் இருந்து ரிலீவ் செய்தீங்க எனக் கேட்டதற்கு , நீங்க அளவுக்கதிகமா வேல செய்துட்டீங்கம்மா , சும்மா வந்து டீயக் குடிச்சுட்டு , பேசிட்டு ஃபைல் பார்த்துட்டு போகாம எதுக்கு அதிகமா வேல செய்தீங்க என்றார் .அவர் நல்ல மனிதர் ஆகவே தான் இப்படி ஆதங்கமாக வெளிப்படுத்தினார் .


இதற்கா பயம் ? சரி என வீட்டில் அனைவரையும் ஒரு வாராக சமாதானம் செய்து விட்டு கணவர் பராமரிப்பில் வீட்டையும் , குழந்தைகளையும் விட்டு நான் ஈரோடு நல்லாம் பட்டி பள்ளிக்குச் சென்று விட்டேன். மாமியார் வேறு  கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பராமரிப்பில் இருந்தார்.


அந்தக் கல்வியாண்டு முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் CCRT பயிற்சிக்காக உதய்ப்பூர் சென்று 20 நாட்கள் மற்ற மாநில நட்புகளுடன் மிகச் சிறந்த அனுபவங்கள். ஆரவல்லி மலைத் தொடரின்  பள்ளிகளையும் பார்வையிட்டு அங்குள்ள ஆசிரியர் , குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். Thank U Jyotsna Jhala. நான் ராஜஸ்தானில்   இருக்கும் போது    இங்கு தமிழகக் கல்வித்துறை இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்ட செய்தி வந்தது.      

           

மீண்டும் மே மாதம் ஊர் திரும்பிய உடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியான நாளில் DPI சென்று SCERT இயக்குநர் , இணை இயக்குநர்கள் அனைவரையும் சந்தித்து மகிழ்வுடன் திரும்பினேன். பாடநூல் தயாரிப்புப் பணி ஆரம்பிக்க இருந்த நேரம் - உடனடியாக என்னை மாற்றுப்  பணியில் இணையக் கூறினார்கள் இணை இயக்குநர்கள் , நானோ ஊருக்கு சென்று வந்து ஜூன் மாதம் பள்ளியில் இணைந்து விட்டு திரும்ப வருகிறேன் ,மாமியாரும் உடல் நலமின்மையால் அவதியுறுகிறார் என இயக்குநர்  அறிவொளி அவர்களிடம்  கேட்க , அவர் சரிம்மா எனக் கூறி இணை இயக்குநர்களிடம் விடுங்க உமா வை  , ஊருக்குப்  போய்ட்டு வந்து ஜாயின் பண்ணிக் கட்டும் என்றார் .


தொடர்ந்து அதே நாளில் கோட்டை சென்று நமது கல்விச் செயலர் அவர்களையும் சந்தித்தேன் . ஏற்கனவே ராஜஸ்தானில் இருந்த போது , தமிழகம் வந்த பிறகு அவரை சந்தித்து வாழ்த்து சொல்லவும் , சில கல்வி சார்ந்த கருத்துகள் கலந்துரையாடவும் அனுமதி பெற்றிருந்தேன். ஆகவே DPl சென்ற அன்றே  மற்றும் சில இயக்குநர்களை சந்தித்து உரையாடிவிட்டு ,


இரவு8.30 க்கு கல்விச் செயலரின்  கேபினில் பூஜா மேடம் உட்பட அவரையும்  சந்திக்க , எப்போதும் போல வாங்க ஈரோடு டீச்சர் என இயல்பாகப் பேச  ஆரம்பித்து விஜயமங்கலம் , சமணர் கோவில் வரலாற்றைப் பற்றி சில விஷயங்கள் பேசிவிட்டு , புத்தகத் தயாரிப்புப் பணிக்கு இங்க தான வரப் போறீங்க , வாங்க பாத்துக்கலாம் என்றார். மேலும் SPD பூஜா மேடத்திடம் , நானும் இவங்களும் 2 வருஷம் முன்னாடியே விக்கிப்பீடியா பயிற்சியில் வேல செஞ்சோம் என அறிமுகப்படுத்தினார். பூஜா மேம் அதுக்கு முன்னாடியே PBL ஒருங்கிணைப்பாளராக நான் இருந்த போதே அறிமுகம் , ஆகவே அவரும் ஆமோதித்தார் .


CCRT பயிற்சியில் ரங்கோலி வகுப்பில் நான் செய்த குச்சி மனிதர்களின் நடனம் தாங்கிய உருவத்தை Frame செய்து எடுத்து வந்திருந்தேன். அவருக்காக பரிசு தர , எங்கம்மா வாங்கினிங்க எனக் கேட்க , ஸார் , உங்களுக்காக நானே செய்தது என்று கூறியதைக் கேட்ட SSA SPD பூஜா மேம் ,மகிழ்ச்சியோடு கூறினார். great என .... மிகுந்த நம்பிக்கையுடன் அவரது அறையை விட்டு வெளியேறினேன் .அந்தக் கோடை கால விடுமுறை முடியும் தருவாயில்  மீண்டும் DPI சென்றேன், SCERT க்குச் சென்றால் நிலைமையே வேறு.


யார் யாரோ மாற்றுப் பணிக்கு வந்திருந்தனர் , (நாளை )



2017 ஒரு  சகாப்தம் - பகுதி - 2

#######################

நேற்றைய தொடர்ச்சி


என்னிடம் இரு வருடங்களாக DPI க்கு மாற்றுப் பணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தவர்கள்  உட்பட வேறு புதிய புதிய முகங்கள் ... இணை இயக்குநர்கள் , இயக்குநர் உட்பட அனைவரும் பாராமுகமாக இருந்தனர். 10 நாட்களுக்கு முன்பு இன்முகத்துடன் வரவேற்ற , உடனே பணியில் இணையக் கூறிய அதிகாரிகள் அன்று நாள் முழுக்க இரவு 8.30 மணி வரை ,காத்திருக்க வைத்து இப்போது எல்லோரையும் மாற்றுப் பணிக்கு அமர்த்தி விட்டோம் , இடமில்லை ... மீண்டும் சொல்லி அனுப்புகிறோம் என பதிலளித்தனர்.


2005 முதல் இந்த DPI இன் பல பணிகளில் சிரத்தையுடன் இருந்ததாலே 2017 வரை நிகழ்ந்த பாடநூல் தயாரிப்பு , தேசிய கல்வி வரைவுப் பாடத்திட்டம் 2005 , CCE மதிப்பீடு , மேலும் ICT இல் பாடநூல் உருவாக்கம் என இதுவரை நிகழ்ந்த அத்தனை மாற்றங்கள் , பயிற்சிகள் , என தொடர்ந்து எனது பங்களிப்பு SCERT க்குத் தேவைப்பட்டது.


2013க்குப் பிறகு தான் ஆசிரியர் சமூகத்திற்கு SCERT என்ற ஒன்று இருந்ததே தெரிய வந்தது, கூவிக் கூவி அழைத்து தான் , கடை விரித்து தான் தமிழகம் முழுக்க இருந்த ஆசிரியர்களை DPI வளாகத்திற்குள்ளும் , SCERT என்ற குட்டி சாம்ராஜ்யத்திற்குள்ளும் வர வைத்தேன். அதற்கு முன் ஆசிரியர் வந்திருக்கலாம் , போயிருக்கலாம் ஆனால் ஆகச் சிறந்த ஆர்வமுள்ள , நன்கு பணிபுரிபவர்களைத் தேடி வர வைத்ததில் எனது பங்கு முழுக்க இருந்தது.


NCERT உட்பட அனைத்து பேராசிரியர்களுக்கும் என்னையும் எனது பணியின் சிரத்தையும் பரிச்சயம். இருப்பினும் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டேன். எனது அனுபவத்தை ஈடுகட்டும் வகையில் தொடர்ந்து 12 வருடங்களாக யாரும் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி இருக்கவில்லை. ஏனோ என்ன காரணத்தாலோ தவிர்க்கப்பட்டேன்.


மீண்டும் ஈரோடு மாவட்டம் நல்லாம் பட்டி  பள்ளிக்கு ஜூன் மாதம் இணைந்தாயிற்று ஒரு வாரம் தான் சென்றிருப்பேன். மீண்டும் DPI வளாகத்திலிருந்து (வேறு துறையிது ) அலைபேசி அழைப்பு , கல்விச் செயலரின் நேரடிக் கண்காணிப்பில் , கல்விக்கான இணைய தளப் பணிக்காக வரவேண்டும் என .... எனக்கு எதுவாக இருந்தால் என்ன ? வீடு , குழந்தைகள் சென்னையில்... உடனே கிளம்பிட்டேன்.


புதிய இணை இயக்குநர் ... இதுதான் மா பணி , Website Design க்காக ஆவணக் காப்பகத்தில் நீங்கள் குறிப்புகள் எடுக்க வேண்டும் , மிக மிக முக்கியப் பணி எனக் கூறி எழும்பூர் ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க மிகப் புதிய அனுபவம் எனக்கு , செங்கல் கட்டிடம் என்றாலே அதற்கு மிகப் பழமையான பெருமை உண்டு , 1909 இல் நிறுவிய மெட்ராஸ் பிரஸிடென்ஸியின் ஆவணக்காப்பகத்தின் பல பிரிவுகளில் கல்விக்கான செய்திகளைத் திரட்டப் பணி என்பது மிகப் பெருமையாக இருந்தது. 


இப் பணிக்காக,கல்வித் துறை சார்பாக ஆவணக் காப்பகத்திற்குள் காலடி எடுத்து வைத்த முதல் ஆசிரியர் நானே ... தொடர்ந்து சில தினங்களில் பரமேசுவரி திருநாவுக்கரசு  Vijaya Lakshmi   இருவரும் என்னோடு இணைந்தனர். அங்கு பணிபுரிந்த 3 மாதங்களில் பல்வேறு அனுபவங்கள் , கல்விச் செயலர் சனிக்கிழமை தோறும் சந்திப்புக் கூட்டங்கள் நிகழ்த்துவார். அவருடன் செக்ரட்ரியேட்டில் அடிக்கடி, நாங்கள் கல்வியின் வரலாறு பற்றி ஆவணக் காப்பகத்தில் திரட்டிய செய்திகள் கொண்டு சந்திப்பு நிகழ .... அதற்குள் அவருக்கே பிரச்சனையாகி web site பணி சற்று தொய்வடைந்தது ....


இதனிடையில் SCERT பாடநூல் தயாரிப்புக்காக மிகப் பெரிய விழா எடுத்து , இணையம் வழியே ஆட்களைத் தேர்வு செய்தது. அதற்கு நான் விண்ணப்பித்து இருந்தேன். புத்தகத் தயாரிப்பு பற்றி ஏற்கனவேசம்பந்தம் இல்லாதவர்கள் கூட அழைக்கப்பட்டு இருக்க , மீண்டும் என்னை நிராகரித்திருந்தது இந்தத் துறை கடைசி நிமிடம் வரை அழைப்பு வராமல் இருக்க , நான் இயக்குநரிடம் அலைபேசியில் அனுமதி கேட்கிறேன், இது போல் நான் விண்ணப்பித்து இருந்தேன் அழைப்பில்லை என , அவரும் வெய்ட் பண்ணுங்கம்மா கூப்பிடுவாங்க என்றார் ... ஆனால் அழைப்பே இல்லை.


சரி என நானும் ஆவணக்காப்பகப் பணிக்குள் மூழ்கி விடவே , அங்கிருந்தும் ஒரு நாள் விடுவிக்கப்பட்டு நீதிமன்ற வழக்குகள் பிரிவில் பள்ளிக் கல்வி இயக்கக பணியாளர் தொகுதி இணை இயக்குநர் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டேன். 12 பிரிவுகள் எல்லாவித வழக்குகளும் உண்டு , ஆரம்பத்தில்  பிடிபடவில்லை , சுத்தமாக சம்மந்தம் இல்லாத துறை .... ஆனால் போகப் போக நன்றாகக் கற்றுக் கொண்டேன்.


ஆவணக் காப்பகத்தில் இருக்கும் போது எழுத்தாளராக வாழும் ஆசிரிய நண்பர்கள் பலரை சந்தித்தேன். பரமேஸ்வரி, விஜயலட்சுமி ,கரிகாலன் ,தமிழ் மற்றும் பலர் . விழியனையும் , இனியனையும் கூட இங்கிருக்கும் நாட்களில் தான் சந்தித்தேன் , எழுத்தாளர் இமையம் அவர்களும் கூட இந்நாட்களில் சந்தித்தேன். 


மீண்டும் நாளை



2017 ஒரு சகாப்தம் - பகுதி 3

###################

நேற்றைய தொடர்ச்சி 

(குறிப்பு ... அனுதாபத்திற்கோ , காழ்ப்புணர்ச்சியோ , கழிவிரக்கமோ அல்ல இப்பதிவுகளின் நோக்கம் , மாறாக எனது பணியின் பயணத்தைப் பதிவு செய்தலும் மற்றும் நான் கடந்து வந்த சற்றேறக்குறைய உண்மைகளையும் எதிர்பாராத பணிச்சுமையுடன் கூடிய சூழல்களையும் பதிவு செய்வதுமே ஆகும் )


விதி வலியது ......


நீதிமன்ற  வழக்குகள் பிரிவில் நான் கடந்த செப்டம்பர் மாதம் பணியாற்றிக் கொண்டு இருந்த போது அதன் இணை இயக்குநர், தற்போதைய பாடநூல் தயாரிப்புப் பிரிவில் முதுகலை அறிவியல் பிரிவிற்குப்பொறுப்பு வகித்தார்,  நல்ல ஆர்வமுள்ள முதுகலை ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் சொல்லுங்கம்மா என்றார். அதோடு சமூக அறிவியல் பாட நூலுக்கும் தகுதியும் திறமையும் ஆர்வமுள்ள ஆசிரியர்களை அந்தப் பிரிவு பேராசிரியர்கள் பரிந்துரைக்கக் கேட்டிருந்தனர் .


நானும் உடனடியாக பல குழுக்களில் தேடியும் , பின்னர் எங்கள்  A3 குழுவிலும் முகநூலிலும் விருப்பமுள்ள ஆசிரியர்களைக் கேட்டு பெயர்ப் பட்டியல் கொடுத்து அவர்கள் அப்பணிக்குப் பயன்படுத்தப் பட்டனர் என்பது நிதர்சனம் .எனது நேரடிப் பங்களிப்பு இல்லை என்றாலும் மறைமுகமாகக் கல்வித் துறைக்கு மிகப் பல வழிகளில் உதவிக் கொண்டு தான்  உள்ளேன் , இதை  ஏனோ தவிர்க்க முடியவில்லை , ஏனெனில் நமது இலக்கு மாணவர்களின் நலனே.

இந்தக் காலகட்டங்களில் இன்னும் சில பிரிவுகளிலும் பணிகள் நிகழ்ந்து வந்தன. பள்ளி மாணவர்களுக்கான, ஆசிரியர்களுக்கான  மாத இதழ்கள் தயாரிப்பும் கூட நடந்தது. நம் ஆசிரிய நட்புகள் அவ்வப்போது என்னை வந்து பார்த்துச் செல்வர்.


இவற்றைத் தாண்டி , நட்பாக இருந்த ஆசிரியர்கள் என்னை எதிரியாக பாவித்ததும் , ஏதோ மொத்தப் புகழ் மாலையும் எனக்கேக் கிடைத்தது எப்படி நியாயம் என, போட்டி மனப்பான்மை உருவாகி மனதளவில் பிரிவுகள் ஏற்பட்டு விலகியதும் , துரோகங்கள் என்ற சொல்லுக்கு அர்த்தம்  விளைவித்த நிகழ்வுகளும் நடந்து இன்னும் என்னை செம்மையாக செதுக்கின. 


நாங்கள் கைப் பிடித்து அழைத்து வந்தவர்கள் , பேசிப் பேசி விளக்கம் தந்து DPI வந்து வளர்ந்தவர்கள் , என் வீட்டுப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பு ஆசிரியர்களும் சிறு சிறு அடையாளங்களைப் பெற்று அதே DPI இல் கல்வித் துறைக்கு தங்களை  தாரை வார்க்கத் தயாராகி அதோடு இணைந்து விட்டனர். எங்கு திரும்பினாலும் இங்கிருந்து உருவாகியவர்களாக இருப்பதுவும் எனக்குப் பெருமகிழ்ச்சியே. 


DPI எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்துள்ளது... எது உண்மை ? எது போலி ? எது நட்பு ? எது துரோகம் ? 


ஒரே கருத்து - நேர்மையாகவும் , உண்மையாகவும் பணிபுரிபவருக்கு இங்கு பயணிப்பது இருபுறமும் தீட்டப்பட்ட வாளின் மேல் நடப்பது போன்றது . சரி , இந்த இடைவெளியில் சில மாதங்களுக்கு முன்பு அருகிலேயே மாறுதல் பெற்றும் தொடர்ந்து நீதிமன்ற வழக்குகள் பிரிவில் பணியாற்ற நேர்ந்தது.


இதனிடையே மார்ச் மாதம் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு A3 Edu Soft கணினிப் பயிற்சி,கோவை அரசம்பாளையம்  SVS கல்லூரியில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது , மேலும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தையொட்டி 2 நாட்கள் ஆசிரியர்கள் கூடல் விழா திருநெல்வேலியில் Kamalakannan Murugan மற்றும் , ஷெர்லி A3 ஆசிரிய நட்புகள் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது .


Crea பதிப்பகம் சார்பாக 67 பள்ளிகளுக்கு மாணவர் பயன்பாட்டிற்காக ஏறக்குறைய ₹ 135000 ( ஒரு வட்சத்து 35 ஆயிரம் ) மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாகப் பெற்றுத் தரப்பட்டது. கிரியா பதிப்பக உரிமையாளர் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்ததும் இந்த வருடத்தில் தான்.


கடலூர் மாவட்ட அரசுப் பள்ளியில் சிறப்பாக விளையாட்டுத் துறையில் பரிணமிக்கும் பெண்கள் ஹாக்கி அணிக்கும் , தமிழகக்  கால்பந்து வீராங்கனை பூஜாவிற்கும் ஈரோடு மாவட்ட நல்லாம் பட்டி பள்ளிக்கு தடகள வீரர்களுக்கும்  ஈட்டி எறிதல் மாநில வெற்றியாளர் மாணவர்களுக்கும் உபகரணங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கியது


ஒவ்வொரு பள்ளிக்கும் 5 - முதல்  8 லட்சம் வரை செலவிலான கழிப்பறை வசதிகள் , சென்னை , காஞ்சிபுரம் சுற்றியுள்ள 5 பள்ளிகளுக்கு ஒரு NGO வழியே பயன் பெற வழிவகை செய்யப்பட்டது.


பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் மாநில அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் கல்வியாளர்கள் Vasanthi Devi, JK உட்பட அனைவரோடும் இணைந்து செயல்பட ஆரம்பிக்கப்பட்டது.


தன்னார்வலர் குழுக்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவ முன்வர அகரம் விஜய் உடன்  இணைந்த பயணமும் வழிகாட்டலும் உருவானது. 

சுட்டி விகடன் நிருபர் குழு கேட்டுக் கொண்டதற்கிணங்க  , தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் செயல்பாடுகள் புத்தகங்களில் வெளிவர ஆவண செய்யப்பட்டது .


அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர TPSA மாநாட்டில் A3 ஐ அறிமுகப்படுத்தியது Ganesh S அவர்களின் நட்புடன் ..


தமிழக அரசுப் பள்ளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி பெற்றுத் தர கணேஷ் உடன் இணைந்து முயற்சி துவங்கப்பட்டது என , கடந்த 2017 ஒரு நீண்ட பயணமாக அமைந்தது .


இதோடு மே மாதம் Trust Yss Udumalpet வழங்கிய சிறந்த ஆசிரியர் விருதும் , நவம்பரில் அமுதசுரபி அறக்கட்டளை வழங்கிய சிறந்த சமூக ஆர்வலர் விருதும் எனது பணிக்கு ஊக்கம் தந்த தருணங்கள் .


சிலேட்டு பட இயக்குநர் Vijay M Kumar அவரை சந்தித்து கல்விக்கான தளத்தைப் பற்றி விளக்கமாக விவாதித்தேன் 


திருநெல்வேலியில் Lion S Club நண்பர் Ln Thirumalai Murugan அவர்களது நட்பும் , அவரது வழியே நிறைய A3 ஆசிரியர்களை விருதுகளுக்கு பரிந்துரைத்த நிகழ்வும் நடந்தது.


தமிழ்ப் பட்டறை இலக்கிய மன்றங்களை சேக்கிழார் அப்பாசாமி அவர்களுடன் இணைந்து தமிழகப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளும் சிறப்பாக நடந்தன .


இவையனைத்திலும் உடன் பயணித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும் ..


ஆண்டின் இறுதியில் வலியக் கேட்டு DPl பணியில் இருந்து சற்றே மாறி ,பள்ளிக் குழந்தைகளுடன் என் பயணத்தைத் தொடர ஆரம்பித்துள்ளேன். 

அனுபவம் தொடரும் ... 2017 இன் பயணம் நிறைவுற்றது .

அன்புடன் உமா


DPl இன் போது சில வெளியூர் கல்விப் பயணங்கள் 


ஷாலா ஷித்தி ... தஞ்சை மண்டலத்தில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , BRT , EDC, தலைமை ஆசிரியர்கள் , DIET விரிவுரையாளர்கள்.... ஆவார்கள். திருச்சியைச் சேர்ந்த BRT சந்திரன் அவர்கள், BRT குணாளன் அவர்கள், BRT வினோத் அவர்கள் , திருச்சி DIET FACULTY ஸ்ரீ ரங்கநாயகி மற்றும் அவர்களோடு     நான் ஐவரும் கருத்தாளர்கள் . பள்ளிகளுக்கான சுய மதிப்பீடு செயல்பாடே.. ஷாலா ஷித்தி..


##############################

PHASE II-(28th march-1st April)


TamilNadu,Andra Pradesh,Gujarat,Kartnataka,Madhya Pradesh and Rajasthan...


Training on Digitization of Textbooks of STATES/UTs


The Digital India Campaign has promoted extensive use of ICTs in Teaching learning Process. As part of this initiative the e-pathsala  has been developed for showcasing and disseminating all educational e-resources  including textbooks, audio, video, periodicals and variety of other print and non- print  materials, ensuring their free access through mobile phones and tablets (as e- pub)and from the web through laptops and desktops(as flipbooks).


CIET(Central Institute of Educational Technology)  offers to develop an e-pathsala mobile app for our state language and convert our textbooks into E-PUB format. CIET Proposes to organize workshops to orient our team for digitization  and complete the same in a time bound manner.


The objective of the workshop is....


1.Digitize the state /UTs Textbooks...

2.Testing of digitized materials /e-books

3.Uploading of e-books on e-pathsala and State/UTs portals/website/mobile apps.

######################################


#அன்பாசிரியர்களின்_பயணம் 


இன்றைக்கு ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன்பு , நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள DPI வளாகத்தில்  SCERT ICT பிரிவில்  மாற்றுப் பணியில் இருந்தேன் . நல்ல ஆசிரியர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்த காலத்தின் ஆரம்ப காலங்கள் அவை , 2013 இலிருந்து அந்த பணியை செய்து கொண்டிருந்தேன் என்றாலும் , 2015 -இன் இந்த கால கட்டத்தில் தான் மாற்றங்களுக்கான பாதையாக உருவாகி வந்தது. இந்த சமயத்தில் தான் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவும் (A3) உருவானது.


 இந்து தமிழ் செய்தித்தாள் 2013 செப்டம்பர் மாதம் தான் தமிழில் முதன் முதலில் வெளிவந்தது . அதன் ஆரம்ப கால   வெற்றிக் கொடி பகுதியில், சிறப்பாக செயல்படும்  அரசுப் பள்ளிகள்  குறித்த செய்திகளை வெளியிடுவர் . அதில் அப்போது இருந்த நிருபர் 

குல .சண்முகசுந்தரம் அவர்களுக்கு சிறந்த பலபள்ளிகளை நான்  பரிந்துரைத்திருக்கிறேன்.


SCERT இல் இருந்ததாலும் ஏற்கனவே நாம் சிறப்பாகப் பணியாற்றி வரும் பள்ளிகள் , ஆசிரியர்களைத் தேடி வந்ததாலும் இப்பணியைச் செய்ய இயன்றது. அது இந்து செய்தித்தாளில் வாரம் ஒரு முறை செவ்வாயன்று வந்ததாக நினைவு. 


அதே காலகட்டத்தில் ஆன்லைன் இந்துவில் ஒரு புதிய முயற்சியாக நிருபர்  ரமணிப் பிரபா அவர்களின் பணியாக உருவானது தான்  " அன்பாசிரியர் " தொடர்.


அது ஒரு ஆகஸ்ட் மாதம் , 2015 ஆம் ஆண்டு , முதல் அன்பாசிரியராக என்னுடன் மாற்றுப் பணியில் இருந்த சித்ரா அக்கா  தான் எழுதப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிலரை பரிந்துரை செய்தோம். பொதுவாக அப்போது DFC வழியாக அறியப்பட்ட சில சிறப்பானவர்களையே பரிந்துரை செய்தோம். தொடர்ந்து SCERT இல் ICT பயிற்சி , தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டவர்களில்  நன்கு பள்ளிகளை உருவாக்கிய தலைமை ஆசிரியர்கள் , பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இப்படித்தான் பரிந்துரைக்கு பெயர் தருவோம். 


இந்த இடத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறேன். நாங்கள் பணியாற்றிய இடம் சென்னை கல்வித்துறை என்பதால் ஊடகத் தொடர்புகள் அதிகம் இருக்கும் , அதே போல பல்வேறு வாய்ப்புகள் அங்கு அதிகம். அதில் ஒன்று தான் இந்த பரிந்துரைகள் வரிசையும். 


ஒரு முறை ரமணிப் பிரபா அன்பாசிரியராக என்னை அடையாளப்படுத்த கேட்டபோது தான்,

பல பெண் ஆசிரியர்கள் சிறப்பாக பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களை முதலில் எழுதுங்கள் எனக் கூறி தோழி விக்கிபீடியா பார்வதி அவர்களைக் கொடுத்தேன். பிறகு சில மாதங்களில் கண்டிப்பாக உங்களை எழுத வேண்டும் உமா மேடம் என ரமணி மா விடாப்பிடியாகக் கேட்டு எனது கட்டுரையை அன்பாசிரியர் 20, தலைப்பில் எழுதினார் .


 நான் மாற்றுப் பணியில் பல வருடங்களாகத் தொடர்ந்து இருந்ததால் ஆசிரியர் என்ற முகம் மாறி விட்டு , பயிற்சி ஒருங்கிணைப்பாளராகி அலுவலகப் பணியாளர் போன்றே நடத்தப்பட்டு வந்ததால் அப்போதைய எனது மனநிலையும் , அன்றைய சூழலில் தொய்வடைந்தே இருந்தது. 


அந்த சமயத்தில் எனக்கான இந்த அன்பாசிரியர் தலைப்புக் கட்டுரை தான் , ஆம் நாமும் ஆசிரியர் தானே  என்ற நம்பிக்கையைக் கொடுத்து தொய்வடைந்த மனநிலை ஆசுவாசமாகியது. அதன் வெளிப்பாடு , 10 வருடங்களுக்குப்  பிறகு என்னிடம் 2006 இல் படித்த மாணவர்களை புது யுகம் சேனலில் உறவைத் தேடி நிகழ்வில் சந்திக்க வைத்து ஆச்சர்யமூட்டியது  , அதன் ஒரே காரணம் அன்பாசிரியர் கட்டுரை தான் .அதற்கான அன்பும் நன்றிகளும் ரமணிமாவிற்கு ♥️.


அதன் பிறகு ரமணி அவரது  திருமணம் , குழந்தை என்று இடையில் சற்று அன்பாசிரியர் தொடருக்கு சிறிய தடை விழுந்தது . மீண்டும் ஆரம்பித்து 50 அன்பாசிரியர்களது தொடரை நிறைவு செய்த கதையுடன் மாவட்டத்திற்கு ஒரு அன்பாசிரியரைத் தேர்வு செய்ய கடந்த சில வாரங்களில்  செய்த ஏற்பாடு என இன்று இந்து தமிழ் திசை நாளிதழ் குழுமம் நடத்தும் விருது விழாவாக நாளை திருப்பூரில் நடக்க இருக்கிறது. இந்த 50 அன்பாசிரியர்கள் குறித்த கட்டுரைகளையும் தொகுத்து நாளைய விழாவில் புத்தகம் வெளியிடுகின்றனர். காலத்தே செய்த நற்செயல் இது. 


சமீபமாக இந்து தமிழ் திசையின் இணையத்தில்  வெற்றிக் கொடி பகுதியில் குழந்தைகளுடன் உரையாடுவோம் என்ற தொடரையும் ரமணிப் பிரபா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எழுதி வருகிறேன்  என்பதையும்  மகிழ்வுடன் இங்குப் பதிவு செய்கிறேன்.


இத்தனை சிறிய வயதில் பொறுப்பாக ஒரு பணியை எடுத்து 5 வருடங்களில் மிக அருமையானதொரு பாதையில் வழி நடத்தி நாளை விருது விழா வரை பணியாற்றியுள்ள ரமணி பிரபா வெகுவாகப் பாராட்டப் பட வேண்டியவர். இவரது வாட்ஸ் அப் வாசகம் கூட பிறர் பயனுற வாழ்வோம் என்பதுவே.  மனமார்ந்த வாழ்த்துகள் மா🎉🎊☘️ .


அதோடு , அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் இருந்த காலகட்டத்தில்  2015 களில் நேர்மறையாக நம்பிக்கை அளிக்கக் கூடிய செயலை முன்னெடுத்த இந்து தமிழ் திசை , இன்று மிகப் பெரும் விழாவாக நடத்த முன்வந்திருப்பது குறித்து தமிழக அரசுப் பள்ளி  ஆசிரியர்கள் சார்பாகவும் , குழந்தைகள் சார்பாகவும் நன்றியை உரித்தாக்குகிறேன். 


கல்வி அமைச்சர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நாளை திருப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்வு  நடக்க இருக்கிறது. நான் 10 வருடங்கள் முன்பு பணியாற்றிய மாவட்டம் அது. 

இதோ நாளைய நிகழ்வின் ஒரு அன்பாசிரியராக எனக்கும் அழைப்பு வந்துள்ளதைத் தொடர்ந்து பயணம் ஆரம்பம் …


வாய்ப்புள்ளவர்கள் நாளை திருப்பூர் நிகழ்வில் சந்திக்கலாம். 

அன்பாசிரியர் 20 இணைப்பு இங்கு தருகிறேன்.


https://www.google.com/amp/s/www.hindutamil.in/amp/news/reporters-page/219289-20.html







 




























No comments:

Post a Comment